வானில் மெல்லத் ததும்பி நிற்பதுபோல் ஒரு தயக்கம் காட்டியது வானூர்தி. மூச்சொலி கலந்த பறநர் அறிவிப்பு ‘நாம் சிங்கப்பூரில் தரையிறங்கப்போகிறோம்’ என்றது. நீள்வட்டக் காலதர்வழி எட்டிப் பார்த்ததில் கனவுலகொன்று மஞ்சள் ஒளிப்புள்ளிகளாய்த் தென்பட்டது. புதுநிலந்தொடுவது கால்கள் பெறும் காலப்பேறு. காணாவொன்றைக் காண்பதே களிகொள்காட்சியின்பம். வான்துறையகம் இறங்கிக் குடிநுழைவேற்று வெளியேறினேன். அந்தத் துறைக்கூடமே சொல்லிற்கடங்காத கட்டடம். …
1 அன்னை உள்ளிருந்து என் விழிகள் வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறாள் தன்னை எவ்வாறு இவர்கள் நடத்துகிறார்கள் என்று பார்க்கிறாள் தன்னிடம் சொல்லப்பட்ட உத்திரவாதங்களின் பொய்களை உணர்கிறாள் தன்னிடம் இவர்களின் பாசாங்கு எவ்வளவு என அறிகிறாள் எதன் பொருட்டும் வஞ்சம் நிகழாதபடி காப்பது தவிர்த்து நான் ஒன்றுமே செய்வதில்லை அவள் தரும் ஆயுதங்களை இப்போது எடுப்பதில்லை பதிலாக அவளை சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன்…
அந்தி குழையும் வேளையில் மேற்கு வானத்தின் வண்ணம் சுமந்து கூடடைந்த பறவை கிளையின் அசைவில் விழித்து கொண்டதில் தன் அலகால் விண்மீன்களைப் பொறுக்கிச் சேகரிக்க எத்தனிக்கிறது முற்றத்தில் விழும் நிலவொளியில் தனிமை தகிக்கிறது நீண்ட இரவுகளை விழுங்கிய நிலவு மெல்ல தேய்கிறது..! ---- மௌனத்தின் இடைவெளியை நெருக்கத்தின் மூச்சுக்காற்று நிரப்ப விழைகிறது சுழல் காற்றுக்கு உடையாத நீர்க்குமிழியொன்று எதிர்க்காற்றின் திசையில் தன்னை கட்டிக் கொள்கிறது உடைய மறுத்த வேளையில் சொற்களற்ற ஒரு பார்வையில்…
மகிழம் பூ 'மகிழம்பூ' என்பது இவ்வுலகிற்கு ஒரு மலர்; நம்மிருவர்க்கும் அஃதொரு மறைபொருள் நமக்கு மட்டுமே தெரிந்த அந்த மகிழம்பூ நீ பிறக்கும்போதே உன்னோடு பூத்தது உள்ளுந்தோறும் மகிழச் செய்வதால் நான்தான் அதற்கு மகிழம்பூ என்று பெயரிட்டேன் மறுப்பேதும் சொல்லாமல் நீயும் ஏற்றுக் கொண்டாய் நாம் பிரிவுற்ற நாளொன்றில் உன்னோடு ஒட்டிக்கொண்டு வந்து விட்டதந்த மகிழம்பூ அதன் மணம் மட்டும் நீங்காமல் தங்கிவிட்டது என் நினைவில். நல்மனம் ஒரு பெண்ணைக் காதலித்ததற்காய் ஊரைவிட்டு அடித்துத்…
காதலன் – கிழவன் – பிராய்டு I உங்கள் தெளிவான கண்களின் அடிப்பகுதியைப் பார்ப்பதற்கு அடை மழையிலும் வந்த என்னிடம் நினைவின் எந்த இடத்திலும் பொருந்தும் ஒரு கதை இருக்கிறது. II பழைய காயத்தை இன்னும் எப்படி உண்மையாக்குவது எனத் தெரியாமல் கருணைக் கொலையால் இறக்கும் முன்பு பிராய்டிடம் இருந்தவை மூன்று பழைய பொருட்கள் ஒரு முறை காதலியாக இருந்த பெண்ணின் நினைவு ஒரு கேள்வி ஓர் உடல். “எதுவும் செலவாகாத அன்பு” என…
நான் கவிஞன் என்றே விளிக்கப்பட விரும்புகிறேன் - கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் கேள்விகள் : இன்பா நவீன இலக்கியத்தில் இயங்கியவாறு வரலாறு, தத்துவம் மற்றும் கோட்பாடுகள் கவிதையியல் குறித்த தீவிரமான தனது கருத்துகளை முன் வைத்துவருகின்ற படைப்பாளர் இளங்கோ கிருஷ்ணன். இவர் சென்னையில் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பின் நவீனத்துவம் சார்ந்து கோட்பாட்டு ரீதியில் எளிய அறிமுகங்களைப் பகிர்ந்துவருகிறார். காய சண்டிகை, பட்சியன் சரிதம், பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் மருதம் மீட்போம்…
1 வெள்ளிக்கிழமை மதியம் தனிமைப் பொழுது மெல்ல ஓய்வு கேட்டு மந்த நடைபோடுகிறது உடலற்ற கபாலத்தைத் திருகி ஒளிச்சிதறல்களுக்கிடையே இழுத்துப்பிடித்து வேலையை முடிக்கிறேன் வாரத்தின் ஐந்து நாட்களும் ஓநாய் தினங்களாகி இருபத்து நாலுங்கீழ் ஏழு பொழுதும் ஒளியின் முடிச்சிக்குள் புதைகிறது விழிகள் நடு இரவு உடைந்துபோகிறது பகலை மீண்டும் மிதித்து கணிப்பொறியில் சிக்கிச் சிதறி உதிரவெளியெங்கும் விரல்களில் சுருக்கம் கண்ணாடிக்குள் ஆடும் பொம்மையாய் எஞ்சியிருக்கும் தலை எதற்கென்று தெரியாமலே ஆடுகிறது ஞாயிறு…
எல்லாமே வெகு எளிமையாகத்தான் இருக்கிறது ஆனால் எல்லாம் என்பதுதான் என்ன என்று தெரியவில்லை. - நகுலன் ( எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை ) 1980, மே மாதம், திருவனந்தபுரம், கவடியாரிலுள்ள அவரது வீட்டில் நகுலனைச் சந்தித்தேன். அது முதல் சந்திப்பு. அன்றிலிருந்து 2007 மார்ச் வரையான கால அளவில் வெவ்வேறு இடைவேளைகளில் ஏழு முறை அவரைச் சந்தித்தும் பார்த்துப் பேசியும் இருக்கிறேன். பின்னர் யோசிக்கும் போது மறந்து விடமுடியாதவையான உரையாடல்…
நாரணோ ஜெயராமன் கவிதைகள் நாரண ஜெயராமன் தனது அனுபவத்தின் உள்ளுணர்வினை மனத்துள் நிரப்பிக்கொண்டு சுயத்தைக் கண்டறியும் ஆவலோடு புது உக்கிரம் பெற்ற கவிதைகளைப் படைத்துள்ளார். அன்றாட வாழ்வியல் குறித்து தனது பார்வையை எளிமையான வரிகளில் சொல்லப்பட்டிருந்தாலும் அதனுடைய பொருள் திண்மையாக இருக்கிறது. மென்மையான உணர்வுகள் ஆதங்கமாக இயல்பாக அவரது கவிதைகளில் வெளிப்படுகிறது. சமீபத்தில் காலமான நாரணோ ஜெயராமன் அவர்களுடைய ஒரு சில கவிதைகள் 1. அநாதார ஜீவி என் முதுகின் பின்னால் மின்விசிறி இரைகிறது இரைச்சல் …