கவிஞனின் கண்களுக்கு மட்டும் ஒரு காட்சி வேறொரு பரிமாணமாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது. இந்தப் பார்வை சராசரி மனிதனுக்கு வாய்ப்பதில்லை! ஒரு நல்ல படைப்பாளனால் மட்டுமே இதனைக் கவித்துவ உணர்வோடு அணுகமுடியும் என்று தன்னைத் திறந்து காட்டுகிறது. ஒரு தேர்ந்த படைப்பளாரால் மட்டுமே தன் உடலைச் சித்திரமாக வரைந்து கலையாக உருவாக்க முடியும் என்பதால்தான் அவள் நிர்வாணமாக நிற்க துணிகிறாள். இங்கே வரைபவன் மட்டும் நிர்வாணத்தைக் கலையாக மாற்றும் வித்தை அறிந்தவனல்ல, கலைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவளும் கலைஞனாகிவிடுவாள். தூய…
வாசகனின் வாழ்வனுபவமே உலகில் எழுதப்படும் பெரும்பாலான கவிதைகளும் கதைகளும் அவனுக்கான அணுக்கத்தைத் தந்துவிடுகின்றன. அவனுக்கான ஏக்க நினைவுகளைக் கிளர்த்திவிடுகின்றன. எப்போதோ நடந்து மறக்கப்பட்டவற்றை மீட்டெடுத்துத் தரும் சில நொடிகள் அல்லாடவைக்கின்றன. அவை பல சமயம் கண்ணீரையும் வரவழைத்துவிடுகின்றன. காதல் மொட்டுக்களை மீண்டும் மலரவிட்டு நம்மை அலையவிடுகின்றன. நமக்குள் மகிழ்ச்சியான நினைவலைகளை மிதக்கவிடுகின்றன. தொப்புள்கொடி உறவுகளின் நிபந்தனையற்ற பாசத்தில், அன்பால் வாசகனைத் திளைக்கவிடுகின்றன. நிகர் வாழ்க்கை அனுபவிக்கும் அரிய தருணங்களையும் நல்ல கவிதைகள் நமக்கு தகவமைத்துத் தருகின்றன. இன்பாவின்…
கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ எனக்கு நேரடியாக அறிமுகமாகும் முன்னர் அவரைப் புனைவு வழியேதான் கண்டடைந்தேன். நேரடியாகப் பார்த்து நட்பு பாராட்டுவதற்கான அடிநாதமாய் இருப்பது ஒருவரின் படைப்புதானே. ஒருவரின் படைப்புகள்தானே அவரை அணுகவைக்கிறது. ஆனால் அவரின் நட்பைவிட அழுத்தமாய்த் தன்னை முன்னிறுத்திக்கொள்வது படைப்பு நயம்தான். “வெளிச்ச தேவதை’ சிறு காவியத்தைச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் , கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கூடுகையின் போது என் கையில் கொடுத்தார் பிச்சினிக்காடு இளங்கோ. கொடுக்கும்போது…
தாங்கள் வாழும் திணைகள், அதன் அரசியலை, வாழ்வியலை வரலாற்றில் இடம் பெறச் செய்பவர்களில் படைப்பாளர்களே முதலிடம் வகிக்கிறார்கள். அவர்கள் புனையும் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் ஊடாகவும் அபுனைவு ஊடாகவும் தங்கள் சமகால வாழ்வியல் சிக்கல்களையும் அதற்குள் கொண்டுவந்து விடுகிறார்கள். எனவே படைப்பாளர்கள் வழியேதான் சமகாலத்தில் வாழ்ந்த மக்களின் சமூக அரசியலை அதன் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்குச் சங்ககாலக் கவிதைகளையே முன்னோடியாக எடுத்துக்கொள்ளலாம். அதன் வழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான மாநுட நாகரிகத்தை படைப்பின் வழியே நாம்…