Skip to content Skip to footer

Blog Classic

தேன்மொழி அசோக் கவிதைகள்
கரையொதுங்கும் கதை சாங்கிக் கடற்கரைக்குச் செல்கையில் தன்னந்தனியாகக் கரையொதுங்கும் கிளிஞ்சல்களைப் பார்த்திருக்கிறீர்களா? அது பேசிக் கேட்டிருக்கிறீர்களா? கடலுக்குள் இருப்பவைகளிடம் சாத்தியமில்லையெனினும் வானம் பார்த்துக் கிடப்பவைகளிடம் கொஞ்ச நேரம் மட்டும் உங்கள் காதைக் கொடுங்களேன். புணரும் நத்தைகளைப் பிரித்து வேறொரு மாகாணத்தில் வீசுவதைப் போல கொடூர அலையொன்று கடலிடமிருந்து அதை வீசியெறிந்த கதையைச் சொல்லும். அதன் பாசத்தையெல்லாம் சூரியன் மென்று தின்று முடிப்பதற்குள் உங்கள் கண்ணில்…
காவிரியம் – மனோக்கிய நாதர் – ஆசை
 ’காவிரியம்’ நெடுங்காவியத்திலிருந்து  மனோக்கிய நாதர் கவிதை 1. உங்கள் மூதாதை யாரேனும் போயிருந்தால் நீங்களும் கட்டாயம் போவீர்கள் அதுவரை உங்கள் மனம்நோக்கிப் பார்த்தபடி அமர்ந்திருப்பார் நாதர் நீங்கள் போகத் தேவையில்லை அவரே பிடித்திழுப்பார் நீங்கள் போகும்போது வரவேற்கும் அர்ச்சகர் சொல்வார் நீங்கள் வருவீர்கள் என்று தெரியும் அதுவரை நீங்கள் வந்தது உங்கள் காலின் திசை அங்கோ உங்கள் கண்முன் மனதின் திசை 2. நாதர் அவர் யார் சிவனா பெருமாளா புத்தரா தீர்த்தங்கரரா கேட்கவில்லை ஆனால்…
ந. ஜயபாஸ்கரன் உத்தேசித்திருக்கும் ‘அன்னப்பாடல்’
‘இல்லாத இன்னொரு பயணம்’ என்று தனது கவிதைத் தொகுப்புக்குப் பெயரிட்டு ந. ஜயபாஸ்கரன் தனது ‘அன்னப் பாடல்’( SWAN SONG)-ஐ எழுதியுள்ளார்.                               ‘முதன் முதலாகத் தமிழ்க் கவிஞன் தன் மூல ஆதாரத்தை தமிழ் இலக்கிய மரபைக் கொண்டு நிர்ணயிக்கும் முயற்சி’ என்று நகுலனால் துவக்கத்தில் வரையறுக்கப்பட்ட ந.ஜயபாஸ்கரனின் கவி இருப்பு, மரபுக்குள் புராணிகத்துக்குள் வரலாற்றுக்குள் உணர்வுக்குள்…
கவிதையின் வழிகள்
கவிஞனுக்கு என்ன வேண்டும்? ஒருமுறை கோவை ஞானியிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் ஏன் கலை, இலக்கியங்கள் எழுதுகிறோம்? கவிதை என்பது ஓர் ஆடம்பரம் இல்லையா? மனிதனால் உணவில்லாமல் வாழ முடியாது என்பது போல இலக்கியம் இல்லாமல் வாழ முடியும் என்பதும் எதார்த்தம் என்றால் எதற்காக நாம் இலக்கியத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்டேன். கோவை ஞானி அதற்கு நீண்ட விளக்கம் கொடுத்தார். அதைச் சுருக்கமாக இப்படிச் சொல்கிறேன். மனிதனால் உணவில்லாமல் வாழ முடியாது. மனிதனைப் போலவே எந்த உயிர்களாலும்…
முத்துராசா குமார் கவிதைகள்
1 சாணி மொழுகப்பட்ட சொளகின் மேடு பள்ளங்களாக முடையப்பட்டுள்ளது உயிர்.   2. மட்டைகளை உரித்து உரித்து கைரேகைகளை  இழந்த மகத்தான தேங்காய் உரியாளன் தன்னுடைய ஒரு கோடியாவது தேங்காயை கடப்பாறையின் தாயான கழுமரத்திலேறி உரிக்கிறான்.  3.  நிலா மங்கிய நாளில் வெள்ளரிப்பிஞ்சுகள் களவாங்க சும்மா கொடிகளுக்குள் சாக்கோடு நெளிந்தேன். தப்பிக்கையில் இடத்துப்பெரியாம்பளையிடம் ஆம்பட்டேன் எனது எளுறுக்கு புகையிலை கொடுத்து தனது களவுச்சரிதங்களை நடுக்கமெடுத்து வாசித்தார் விடிந்து வழியனுப்புகையில் வெடித்த வெள்ளரிப்பழத்தை கோரை படுக்கையிலிட்டு கைக்குழந்தையாகத் தந்தவர் விதைகளை…
வீரான் குட்டி கவிதைகள்
கனவில்  புழுவாய் உறங்கிய நான் விழித்தபோது வண்ணத்துப்பூச்சியாக  கனவில் யார் முத்தமிட்டது  வாழ்வு உதிர்ந்து போவதில் வருந்துவது ஏன்? அடர்வதற்கும் விழுவதற்கும் இடையிலான நொடிப்பொழுதில் ஒரு பறவை அதன் வாழ்வை வாழ்வதில்லையா? கண்டபோது கனவில் சொன்ன வார்த்தைகளில் மனம் பூத்துப் போனது கண்டபோது சொல்லாத வார்த்தையில் இல்லாமல் போகிறேன் இறந்தவரின் வீடு தாஜ்மஹால் ஆவதில்லை உலகத்தின் எந்த வீடும் ஆனால் எந்த வீடு தாஜ்மஹால் ஆகின்ற ஒரு…
வெளிச்ச தேவதை – உலகமயமாதலின் முதல் பலி
கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ எனக்கு நேரடியாக அறிமுகமாகும் முன்னர் அவரைப் புனைவு வழியேதான் கண்டடைந்தேன். நேரடியாகப் பார்த்து நட்பு பாராட்டுவதற்கான அடிநாதமாய் இருப்பது ஒருவரின் படைப்புதானே. ஒருவரின் படைப்புகள்தானே அவரை அணுகவைக்கிறது. ஆனால் அவரின் நட்பைவிட அழுத்தமாய்த் தன்னை முன்னிறுத்திக்கொள்வது படைப்பு நயம்தான். “வெளிச்ச தேவதை’ சிறு காவியத்தைச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் , கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கூடுகையின் போது என் கையில் கொடுத்தார் பிச்சினிக்காடு இளங்கோ. கொடுக்கும்போது…
சிந்து பூந்துறையில் பூத்த டெசர்ட் ரோஸ்
இகவடை பரவடை - குறுங்காவியம் - ஷங்கர் ராமசுப்ரமணியன்  -இன்பா //அவளுக்கு இதே சேயாற்றின் இன்னொரு கரையான சிந்து பூந்துறையில் சிதையூட்டி விடைகொடுத்தேன் அப்போது நதி காட்டியது எனக்குக் கருப்பு// ** //பானையைத் தோளில் தாங்கி அம்மாவைச் சுற்றும்போது ஒரு சுற்றுக்கு ஒரு துளை இட்டார்கள் பானை அழுது உகுத்தநீர் எனக்கு முதல் நீராகக் குளிர்ந்தது வனைந்தவை எல்லாம் போட்டு உடைக்கப்படுகிறது// ** //குச்சிகால்கள் கூம்பிச்…
மீரா வாணி கவிதைகள்
அவள் இன்றைய பொழுதின் துன்பத்தைக் கடந்துவந்தது கொடும் சாபம் என்பேன் மித்ரா… பணி நெடுக அவளின் காட்சியே மீண்டும்.. மீண்டும்… மீண்டெழுந்தன இதற்கு முன்னர் ஏதோவொரு பேரங்காடியின் திருப்பத்தில் அவள் என்னைக் கடந்து போயிருக்கக் கூடும். அவள் தொட்டுணர்ந்து விட்டுச்சென்ற பொருட்களை நான் வாங்கி வந்திருக்கலாம் கூட்ட நெரிசலில் திடீரென எதிர்ப்பட்ட முகங்களில் தனித்த முகம் அவளுடையதாக இருந்திருக்கலாம். விழிகளின் திடீர் பரிச்சயத்தில் …

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]