1.முகவாதம் நேற்றிலிருந்து இடப்பக்க முகம் வலிக்கிறது முகவாதம் பீடித்த அப்பாவை மருத்துவமனைக்கு தனியாக அனுப்பிய நாட்கள் கடந்து பல வருடங்கள் ஆகின்றன 2.ஒவ்வொரு முறையும் உன் வாசல் தேடி பிச்சை கேட்டு வந்த போதும் மறுத்த போதும் கதவுகளை அறைந்து சாத்திவிட்டு சென்ற போதும் நிறைந்து போன எனக்கு நீ காணாமல் சென்ற போது பசித்தது 3. உச்சியில் மலர்ந்த பூவின் மீது உனக்கு அலாதி பிரியம் வாசத்தைக் கொய்ய மலையேறத் துவங்கினேன் ஏற ஏற வெளிச்சம்…
காலாவதியான கடவுச்சொல் சமீபத்தில் பிரிந்த காதலியின் பிறந்தநாளை கடப்பது குறித்து நள்ளிரவு கவிஞனின் கையேடுகள் ஏதேனும் கிடைக்கிறதா? அடுத்த வருடத்திற்குள் நேற்றிலிருந்து நாளைக்குத் தாவுவதற்கு மந்திரம் கற்க வேண்டும். வலியோடு முறியும் மின்னலை இணைக்க வழியேதும் உண்டாவன பிரான்சிஸ் கிருபாவிடம் கேட்டிருக்க வேண்டும் தனித்துக் கிடப்பது குறித்தெல்லாம் ஏகப்பட்ட குறிப்புகள் பெருகிக் கிடக்கின்றன. முதல் கலவியின் பின்னணியில் ஒலித்த பாடல் கேட்க நேரும் தருணங்களைக் கடக்க உதவும் கடவுச்சொல் காலாவதியானதொரு நாளில் கிடைக்கிறது. வளரும் புத்தர் வரவேற்பறையில் கையளவு சட்டகத்தில் இமைகள் மூடி புன்னகைக் குமிழ ஒளி…