1 ஊருக்கு தெக்க ஒசந்திருச்சு கட்டிடம் ஒத்தப்பனையெல்லாம் செத்தப்பனையாச்சே ஊத்துப் போன வாய்க்காலும் நாத்துப் பாவிய நெல்வயலும் வித்துப் போச்சே விலைமகனுக்கு களையெடுத்த கைகளை கனலிட்டு சுட்டுவிட்டான் கார்ப்பரேட் நலவாதி... அரமரக்கா நெல் வெதச்சு ஆடயுங்கோடயும் கதிரறுத்து ஆதிக்கும் அய்யனுக்கும் படியளந்து கையெடுக்கும் சிற்றூரைச் சிதைத்துவிட்டான் சிங்காரக் கோமாளி... நான் பார்த்த நடுகையும் குலவைச் சத்தமும் குத்துக்காலிடும் நாற்று முடிகளும் பூசிமெழுகிய வரப்பும் சாம்பல் நாரையும் சில்வண்டும் சிவந்த அரிவாள் நண்டும் நீர்த்தும் நத்தைக் கவுச்சியும் மீன்…
thinaigal
1 article published