Skip to content Skip to footer

இன்பா

கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் நேர்காணல்

நான் கவிஞன் என்றே விளிக்கப்பட விரும்புகிறேன் - கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் கேள்விகள் : இன்பா  நவீன இலக்கியத்தில் இயங்கியவாறு வரலாறு, தத்துவம் மற்றும் கோட்பாடுகள் கவிதையியல் குறித்த தீவிரமான தனது கருத்துகளை முன் வைத்துவருகின்ற படைப்பாளர் இளங்கோ கிருஷ்ணன். இவர் சென்னையில் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பின் நவீனத்துவம் சார்ந்து  கோட்பாட்டு ரீதியில் எளிய அறிமுகங்களைப் பகிர்ந்துவருகிறார்.   காய சண்டிகை, பட்சியன் சரிதம், பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் மருதம் மீட்போம்…

மேலும் வாசிக்க

இன்பா கவிதைகள்

1 வெள்ளிக்கிழமை மதியம் தனிமைப் பொழுது மெல்ல ஓய்வு கேட்டு மந்த நடைபோடுகிறது உடலற்ற கபாலத்தைத் திருகி ஒளிச்சிதறல்களுக்கிடையே இழுத்துப்பிடித்து வேலையை முடிக்கிறேன் வாரத்தின் ஐந்து நாட்களும் ஓநாய் தினங்களாகி இருபத்து நாலுங்கீழ் ஏழு பொழுதும் ஒளியின் முடிச்சிக்குள் புதைகிறது விழிகள் நடு இரவு உடைந்துபோகிறது பகலை மீண்டும் மிதித்து கணிப்பொறியில் சிக்கிச் சிதறி உதிரவெளியெங்கும் விரல்களில் சுருக்கம் கண்ணாடிக்குள் ஆடும் பொம்மையாய் எஞ்சியிருக்கும் தலை எதற்கென்று தெரியாமலே ஆடுகிறது ஞாயிறு…

மேலும் வாசிக்க

வயலூறும் ஆட்டுரமும் மாட்டுரமும்

முல்லை நில மக்களின் வாழ்வியலைச் சொல்லும் முல்லைக்கலியில் எருமைகளை வளர்ப்பவர்களை ‘கோட்டினத்தார்’, பசுவை வளர்ப்பவர்களை ‘கோவினத்தார்’, ஆடுகளை வளர்ப்பவர்களை ‘ஆட்டினத்தார்’ என மூன்று வகையான ஆயர்ச் சமுதாயம் இருந்ததாகச் சங்க இலக்கியம் சொல்கிறது. நீட்டுரமும் தேட்டுரமும் நெல்லுரமும் ஆகையினால் ஆட்டுரமும் மாட்டுரமும் வயலுரங் காண் ஆண்டே என்ற பாடலில் ஆடு மாடுகளின் கழிவுகளை உழவு நிலத்திற்கு உரமாகப் பயன்படுத்தினார்கள் என்கிறது சங்கப் பாடல். கி.ராவின் மிகச்சிறந்த படைப்பான கிடை என்னும் குறு நாவல் இடையர் இனத்திற்கிடையே உள்ள சமூக உறவுகளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் நுட்பமாகப்…

மேலும் வாசிக்க

இன்பா கவிதைகள்

1. நூறு முறை உன் கோபத்தை அனுபவித்திருக்கிறேன் ஒரு முறை தான் உன் மீது கோபம் கொள்ள முடிந்தது நூறு முறை உன் வெறுப்பைக் காட்டியிருக்கிறாய் ஒரு முறைதான் உன்னை வெறுக்க முடிந்தது எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன் முதல் முறை பார்த்தது போலில்லை ஒவ்வொரு முறையும் புதிதாகப் பார்க்கிறேன் இதுவரை யாரையும் பார்த்ததேயில்லை 2. உன் மீது கோபத்தைக் காட்ட நான் அதிகமாய்ப் பயன்படுத்தியது எரும, மாடு, பேய், பிசாசு, குரங்கு,…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]