Skip to content Skip to footer

Blog Classic

கற்கை – அகச்சேரன்
பெயரிலேயே இல்லை எல்லாம். ஆமாம். பெயரில்தான் என்ன இருக்கிறது? ஆமாம். எல்லாப் பெயர்களும் காலிக்குறிப்பான்களும் அல்ல. சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயரைக் கொண்டவனின் மேதமையை ‘புதுமைப்பித்தன்’ என்று அவனே புனைந்துகொண்ட துடுக்குத்தனமும் தேய்ந்த உணர்வும் கொண்ட பெயர் தாங்கி அர்த்தம் கொண்டுவிட்டது. பெயரில் எல்லாம் இருக்கிறது என்று சொல்லமுடியாவிட்டாலும் பெயர்,சிலவேளைகளில் உயிர், உள்ளடக்கம், அதன் உலகம், அதிலிருந்து சொல்ல விரும்பும் செய்தியை ஏற்றுவிடுகிறது. நகுலன் என்பது வெறும் பெயரா? விக்கிரமாதித்யன் என்பது வெறும் பெயரா? கண்டராதித்தன் வெறும்…
தூரத்துப் பச்சை – கடல் நாகங்கள் பொன்னி
வாசகனின் வாழ்வனுபவமே உலகில் எழுதப்படும் பெரும்பாலான கவிதைகளும் கதைகளும் அவனுக்கான அணுக்கத்தைத் தந்துவிடுகின்றன. அவனுக்கான ஏக்க நினைவுகளைக் கிளர்த்திவிடுகின்றன. எப்போதோ நடந்து மறக்கப்பட்டவற்றை மீட்டெடுத்துத் தரும் சில நொடிகள் அல்லாடவைக்கின்றன. அவை பல சமயம் கண்ணீரையும் வரவழைத்துவிடுகின்றன. காதல் மொட்டுக்களை மீண்டும் மலரவிட்டு நம்மை அலையவிடுகின்றன. நமக்குள் மகிழ்ச்சியான நினைவலைகளை மிதக்கவிடுகின்றன. தொப்புள்கொடி உறவுகளின் நிபந்தனையற்ற பாசத்தில், அன்பால் வாசகனைத் திளைக்கவிடுகின்றன. நிகர் வாழ்க்கை அனுபவிக்கும் அரிய தருணங்களையும் நல்ல கவிதைகள் நமக்கு தகவமைத்துத் தருகின்றன. இன்பாவின்…
தயாஜி கவிதைகள்
மௌன நாற்காலிகள் ஏதோ ஒரு குழந்தைதான் கடைசியாய் அமர்ந்திருக்கவேண்டும் அதன் பின் யாருமே சீண்டாத ஒரு நாற்காலியின் கதை என்னிடம் உண்டு மஞ்சளாய்க் கரை படிந்து கைப்பிடிகளின் நிறம் மங்கி அமர்ந்து அமர்ந்து வழுக்கிய இருக்கை கொஞ்சமாய் உள்வாங்கி பள்ளமாகிவிட்டது சாப்பாட்டு மேஜையின் கால்களுக்கு இணையாக வளர்ந்து நிற்கும் கால்கள் அதற்குண்டு அதில் உணவுக்கான தட்டை வைக்கலாம் தண்ணீர் குவளை வைக்கலாம் பால் போத்தலை வைக்கலாம் சத்தமிட்டு விளையாடும் பொம்மையை அங்கே ஒட்டி வைக்கலாம் அப்போதும் கூட…
ரா. ராகுலன் கவிதைகள்
ஓடும் காற்று குறைந்தது ஆயிரம் மனிதர்களைச் சந்திக்க வேண்டும் ஆயிரம் சாலைகளில் நடக்க வேண்டும் ஆயிரம் மரங்களின் வேர்களில் அமரவேண்டும் ஆயிரம் முறை சண்டையிட வேண்டும் ஆயிரம் ஆயுதங்களையும் கவசங்களையும் உருவாக்கி வைத்திருக்க வேண்டும் ஆயிரம் ஊர்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும் ஆயிரம் நினைவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் ஆயிரம் வாழ்க்கையை வாழ வேண்டும் ஆயிரம் நூல்களை வாசிக்க வேண்டும் ஒரு நூறு பெண்களை அறிந்துகொள்ள வேண்டும் சூம்பிப்போய் கிடக்கும் என் வாழ்க்கையில் எழுந்து நடக்க இப்போது இந்த…
பொக்கை வாய் – கவிதைகள்
1. தோதற்ற தோது என்னிடம் நூலுமில்லை பட்டமுமில்லை விடத் தோதான வெளி மட்டுமே இருக்கிறது எனக்கும் வெளிக்கும் அப்பால் ரொம்ப காலமாகக் காத்திருக்கிறது வானம் வழக்கம்போல இம்முறையும் அண்ணாந்து தவணை சொல்கிறேன். 2. தானிய ஒளி நம்பிக்கையின் பத்தாவது தலையும் துண்டிக்கப்பட்டபோது கண்ணாடிக் குடுவையைத் தாரூற்றி நிரப்புவதுபோல எனதுடலை எதுவோ இருளூற்றி நிரப்பியது முடிவின் உஷ்ண மூச்சுப் பட்டு முகமெல்லாம் வெந்துகொண்டிருந்தது நான் கடைசி ஆசையாக ஒளியைக் கற்பனை செய்தேன் கண் விழிக்கையில் எதிரே இறக்கைகளை…
வாவரக்காச்சி – லிபி ஆரண்யா
1. நீண்ட பலகாரத்தை முன்வைத்து ஓர் உரையாடல் அடர் காவி நிறத்தில் கச்சிதமாய்ப் பிடிக்கப்பட்டதொரு மோதி லட்டுதான் இன்றைய இந்தியா என்கிறாய் காலங்காலமாய்த் தட்டில் வைத்து நீட்டப்படும் ஒரு குத்து கலர் பூந்தியல்லவா இந்த தேசம்   2. பிராதும் மறுமொழியும் தீவிரங்களைச் சிதைக்கிறது என்பது தானே பகடி மீதான உன் விசனம் இரண்டு கேள்விகள் உன்னிடம் ஒரு பகடிக்கே நீர்த்துப் போகுமெனில் அது என்ன தீவிரம் தவிர ஒரு…
குட்டியின் கால்கள்
1 ஏற்பதுதான் விடுதலையெனச் சொல்லிக்கொடுக்கப்பட்ட அனைத்து இரவுகளிலும் குட்டியின் கால்களைப் பிடித்துக் கொள்கிறேன். இன்னும் மலராத ஓர் இளம் பருவத்திற்குள் நின்றிருந்த அவளுடைய சிறிய கால்களிலிருந்து இன்னொரு துருவத்திற்குச் சென்றுவிடலாமென என்னை விதையாக்கிக் கொண்டிருக்கிறேன். குறுகியும் சிறுத்தும் உள்சென்று அமிழ்ந்தேன். இனி எங்காவது மலரக்கூடும். இப்போதைக்குக் குட்டியின் சின்னஞ்சிறிய காலிடுக்குகளில் ஒளிந்து கொள்கிறேன். 2 ஆர்ப்பரித்து எட்டி உதைத்து மார்பில் குதித்து அல்லல்பட்டு விழிக்கும் ஒவ்வொரு காலையும் குட்டியின் கால்களினால்தான் என்றறிருந்ததும் மனம்…
காலம் தோறும் வாழும் கவிதைகள்
கடல் நாகங்கள் பொன்னி நூலுக்கு கவிஞர் கலாப்ரியா வழங்கிய அணிந்துரை. ``சிங்களத்தீவின் கடற்கரையை எங்கள் செந்தமிழ்த் தோழர் அழகு செய்தார் எகிப்திய நாட்டின் நதிக்கரையில் எங்கள் இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்..” இந்த வரிகளை உள்ளடக்கிய கண்ணதாசனின் பிரபலமான திரைப்படப் பாடலை ஒலிக்காமல் 1950 களின் திராவிட இயக்க மேடைகளின் பொதுக் கூட்டங்கள் துவங்கியிருக்காது. அப்படிச் செந்தமிழ்த் தோழர்கள் அழகு செய்த கடற்கரைகள் ஒன்றா இரண்டா? கங்கை கொண்ட புகழும் கடாரம் கொண்ட புகழும் ஒன்றா…
நூடுல்ஸால் நிரம்பிக்கிடக்கும் பொன்னியின் வாழ்வு
 கடல் நாகங்கள் பொன்னி என்ற தலைப்பிட்டு இன்பா தனது கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.  பொதுவாக கதைகள் அதன் காட்சி நகர்விலும் கதாப்பாத்திரங்களின் அடையாளங்களிலும் வாசகர்களை ஈர்த்துக்கொள்ளும். கவிதையில் பார்த்தோமேயானால் அதில் வரும் அழகிய வருணனைகள், கற்பனைகள், உபயோகிக்கும் சொற்கள், ஒரு புதிய பொருளைக் கண்டடைவது, புதுமையான படிமங்கள, குறியீடுகள் என்று பலவற்றைத் தேவையான அளவு மட்டுமே எடுத்து ஒரு கவிதையைக் கட்டமைக்க வேண்டும். அப்படிப்பட்ட கவிதைகள்தான் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்துக்கொள்ளும்.கடல் நாகங்கள் பொன்னி எனும் இன்பாவின் கவிதைத்…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]