Skip to content Skip to footer

ஷங்கர்ராமசுப்ரமணியன்

நிழல், அம்மா.

புதிய கவிதை  நூல் நிழல், அம்மா பற்றி... நேசத்தின் கிடைமட்டப் பரப்பில் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது எனது கவிதை வெளியீடு இரண்டு விதமாக இதில் வெளிப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. உள்ளடக்கமும் மொழியும் சார்ந்து அவற்றை குழப்பமும் மூட்டமும் தகிப்பும் புனைவும் கொண்ட கவிதைகள் என்றும், தெளிவும், அறிந்த ஒன்றைச் சுட்டும் நம்பிக்கையும் தென்படும் கவிதைகள் என்றும் வகை பிரிக்கலாம். முதல் வகைக் கவிதைகள் ஓசை ஒழுங்கும் சந்தமும் கொண்டதாகவும், இரண்டாம் வகைக்…

மேலும் வாசிக்க

ஸ்ரீநேசன் ஆட்டும் ஊஞ்சல்

ஒரு நூற்றாண்டைக் காணப்போகும் புதுக்கவிதை, நவீன கவிதை வடிவத்தில் குறிப்பிட்ட சாதனையை நிகழ்த்திய கலைஞர்களின் படைப்புகளை என்னளவில் தொகுத்துக் கொள்ளும்போது அவர்களது மரபையும் சேர்த்துத் தொகுத்துக் கொள்வது அத்தியாவசியமான பணியாகவே தோன்றுகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தனித்துவத்தையும், அலாதிக் குணத்தையும் தக்க வைத்திருக்கும் ஸ்ரீநேசனின் மூன்று கவிதைத் தொகுப்புகளையும் சேர்த்து வாசிக்கும்போது என்ன மரபில் அவர் கிளைத்திருக்கிறார் என்று மெல்லிசாகத் தெரிய வருகிறது. நகுலன், ஆனந்த், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், அபி ஆகியோர் உருவாக்கிய சாரமான ஒரு கவிதை…

மேலும் வாசிக்க

அம்மா காரைக்கால் அம்மை ஆனாள்

கண்ணாடி முன்னால் அவள் நின்று உடைமாற்றிக் கொண்டிருந்த வேளை ஜன்னல் வழிக்கடந்தபோது, தேகம் சிலிர்த்து, அறிவு விதிர்த்து, சிறுவன் நான் சில நொடிகள் பார்த்த, செழித்திருந்த முலைகள் அல்ல இப்போது அம்மாவுடையது முழு உடலையும் துவளச் செய்திருந்த புற்றுநோயில் மெல் உடைகளையும் வேண்டாமென்று மறுத்து சாவின் வாயோடு, அம்மா தன் உதடுகளைப் பொருத்திக் குவித்திருந்தாள் அவள் அனுபவிக்கும் மரணத்திலிருந்து நான் தப்பிக்க, அவள் மரணத்தைச் சற்று தொலைவுள்ளதாக்க, அவளது மரணத்தை நான் சற்று கசப்பு குறைய விழுங்க…

மேலும் வாசிக்க

இயற்கைத் துறைமுகம்

பாடப்புத்தகத்துக்கு முன்னால் எப்போதும் சென்று கொண்டிருந்த என் அம்மா பணியிட மாறுதல் ஆகி தூத்துக்குடிக்குப் போனாள் இயற்கைத் துறைமுகத்துக்கும் செயற்கைத் துறைமுகத்துக்கும் வித்தியாசம் அப்போதுதான் தெரிந்தது கப்பல்கள் நின்று செல்வதற்கான அமைப்பு இயற்கையாகவே அமைந்திருக்கும் இடம்தான் இயற்கைத் துறைமுகம் என்று தூத்துக்குடிக்கு நாங்கள் குடியேறிய போதே சொல்லிவிட்டாள் ஏற்கெனவே தூத்துக்குடி துறைமுகம் என்னிடம் ஆழப்பட்ட பிறகுதான் தூத்துக்குடி துறைமுகத்தை நேராகப் பார்த்தேன் அம்மா பிறந்து வளர்ந்த ஊர் தூத்துக்குடி அங்குமிங்கும் பன்றிகள் மேயும் ஊராக எனக்குத் தெரியப்போகும்அந்த…

மேலும் வாசிக்க

அம்மாவின் சிட்ரிசின் மேகங்கள்

அம்மாவின் பொறுமை சகிப்புத்தன்மை எதையும் கொடையாக நான் பெறவில்லை அவளது நுரையீரல் தொடங்கி பலவீனமானதெல்லாம் எதுவோ அதையே அவளின் பிள்ளையாக நான் பெற்றிருக்கிறேன் நினைவு பயின்ற நாள்முதலாய் மருந்துகளுடனயே வாழ்ந்துவருபவள் என்றாலும் இந்த வயதிலும் உளநலத்துக்கான மாத்திரைகளை உட்கொள்ளவில்லை அவள் தாதியாகப் பணியாற்றியதால் அலோபதி மாத்திரைகளும் மருந்துகளும் ஊசிகளும் ஆஸ்பத்திரியின் வாசனையும் ஆதியிலேயே என் உடலுக்குப் பரிச்சயம் மழைக்காலங்களிலும் வியர்வை பெருகும் வேனல் நாட்களிலும் மூச்சுவிடத் திணறி என் நுரையீரல் அரற்றும்போதெல்லாம் டெரிபிளினையும் டெக்கட்ரானையும் கலந்து ஊசியாய் ஏற்றுவாள் அப்போது குளிர்மேகங்கள் மார்பில் இறுக்கத்தைத் தளர்த்தி வேர்வையைப் பூக்கவைத்து உறங்கவைக்கும் கூடவே பெயர் சொல்லி சிட்ரிசின் மாத்திரையையும் தருவாள் அம்மா. அவள் தந்த மாத்திரைகளையெல்லாம் விஞ்சி விழுங்கும் மாத்திரைகளுக்கும் அவளுக்கே புரியாத நோய்க்குறிகளுக்கும் அனுபவம் கொண்டுவிட்டது தற்போதைய எனது உடம்பு. ஆனாலும் பொடியனின் உடலைக்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]