Skip to content Skip to footer

Blog Classic

முத்துராசா குமார் கவிதைகள்
1 சாணி மொழுகப்பட்ட சொளகின் மேடு பள்ளங்களாக முடையப்பட்டுள்ளது உயிர்.   2. மட்டைகளை உரித்து உரித்து கைரேகைகளை  இழந்த மகத்தான தேங்காய் உரியாளன் தன்னுடைய ஒரு கோடியாவது தேங்காயை கடப்பாறையின் தாயான கழுமரத்திலேறி உரிக்கிறான்.  3.  நிலா மங்கிய நாளில் வெள்ளரிப்பிஞ்சுகள் களவாங்க சும்மா கொடிகளுக்குள் சாக்கோடு நெளிந்தேன். தப்பிக்கையில் இடத்துப்பெரியாம்பளையிடம் ஆம்பட்டேன் எனது எளுறுக்கு புகையிலை கொடுத்து தனது களவுச்சரிதங்களை நடுக்கமெடுத்து வாசித்தார் விடிந்து வழியனுப்புகையில் வெடித்த வெள்ளரிப்பழத்தை கோரை படுக்கையிலிட்டு கைக்குழந்தையாகத் தந்தவர் விதைகளை…
வீரான் குட்டி கவிதைகள்
கனவில்  புழுவாய் உறங்கிய நான் விழித்தபோது வண்ணத்துப்பூச்சியாக  கனவில் யார் முத்தமிட்டது  வாழ்வு உதிர்ந்து போவதில் வருந்துவது ஏன்? அடர்வதற்கும் விழுவதற்கும் இடையிலான நொடிப்பொழுதில் ஒரு பறவை அதன் வாழ்வை வாழ்வதில்லையா? கண்டபோது கனவில் சொன்ன வார்த்தைகளில் மனம் பூத்துப் போனது கண்டபோது சொல்லாத வார்த்தையில் இல்லாமல் போகிறேன் இறந்தவரின் வீடு தாஜ்மஹால் ஆவதில்லை உலகத்தின் எந்த வீடும் ஆனால் எந்த வீடு தாஜ்மஹால் ஆகின்ற ஒரு…
வெளிச்ச தேவதை – உலகமயமாதலின் முதல் பலி
கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ எனக்கு நேரடியாக அறிமுகமாகும் முன்னர் அவரைப் புனைவு வழியேதான் கண்டடைந்தேன். நேரடியாகப் பார்த்து நட்பு பாராட்டுவதற்கான அடிநாதமாய் இருப்பது ஒருவரின் படைப்புதானே. ஒருவரின் படைப்புகள்தானே அவரை அணுகவைக்கிறது. ஆனால் அவரின் நட்பைவிட அழுத்தமாய்த் தன்னை முன்னிறுத்திக்கொள்வது படைப்பு நயம்தான். “வெளிச்ச தேவதை’ சிறு காவியத்தைச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் , கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கூடுகையின் போது என் கையில் கொடுத்தார் பிச்சினிக்காடு இளங்கோ. கொடுக்கும்போது…
சிந்து பூந்துறையில் பூத்த டெசர்ட் ரோஸ்
இகவடை பரவடை - குறுங்காவியம் - ஷங்கர் ராமசுப்ரமணியன்  -இன்பா //அவளுக்கு இதே சேயாற்றின் இன்னொரு கரையான சிந்து பூந்துறையில் சிதையூட்டி விடைகொடுத்தேன் அப்போது நதி காட்டியது எனக்குக் கருப்பு// ** //பானையைத் தோளில் தாங்கி அம்மாவைச் சுற்றும்போது ஒரு சுற்றுக்கு ஒரு துளை இட்டார்கள் பானை அழுது உகுத்தநீர் எனக்கு முதல் நீராகக் குளிர்ந்தது வனைந்தவை எல்லாம் போட்டு உடைக்கப்படுகிறது// ** //குச்சிகால்கள் கூம்பிச்…
மீரா வாணி கவிதைகள்
அவள் இன்றைய பொழுதின் துன்பத்தைக் கடந்துவந்தது கொடும் சாபம் என்பேன் மித்ரா… பணி நெடுக அவளின் காட்சியே மீண்டும்.. மீண்டும்… மீண்டெழுந்தன இதற்கு முன்னர் ஏதோவொரு பேரங்காடியின் திருப்பத்தில் அவள் என்னைக் கடந்து போயிருக்கக் கூடும். அவள் தொட்டுணர்ந்து விட்டுச்சென்ற பொருட்களை நான் வாங்கி வந்திருக்கலாம் கூட்ட நெரிசலில் திடீரென எதிர்ப்பட்ட முகங்களில் தனித்த முகம் அவளுடையதாக இருந்திருக்கலாம். விழிகளின் திடீர் பரிச்சயத்தில் …
நிலவுப் படகிலேறி தேசம் தாண்டிய பொன்னி
கடல் நாகங்கள் பொன்னி - கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை அயலகக் கவிதைகளைப் பொறுத்தமட்டில் அதன் வாசிப்பு என்பது சன்னலுக்குள்ளிருந்து வெளியில் நடக்கும் சம்பவங்களை வேடிக்கைப் பார்ப்பது போல் தான் கவனிக்கப்படுகின்றன.  நானோ சன்னலுக்கு வெளியே நிகழும் சம்பவமாய் இருக்கிறேன்.   அப்படியானதொரு அடுக்குமாடியின் சன்னலை விட்டு கீழிறிங்கும்  நாகமொன்று  வளைந்து நெளிந்து இந்த  நகரத்துக்குள்  புகுந்து வெளியில் வருகிறது.  இந்த நாகம் மொழிக்குள் அதீத ஆர்வத்துடன் நுழைந்து ஓடினாலும் சில நேரங்களில் திக்கற்றுப்போயும்  திரிந்துகொண்டிருக்கிறது.  என் அகந்தையையும்…
இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்
சரஸ்வதி நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் உரசுகின்றன ஒரு நதி மின்னலென நெளிகிறது உன் நாதம் ஒரு கவிதையாகிறது. # பெரும் கலவரம் நடந்த குளம் ரத்த சிவப்பு கரையில் இருக்கிறது வீணை கரையில் இருக்கிறது கரை கரையில் இருக்கிறது குளம் எங்கே போனது மரம் எங்கே போனது யானை எங்கே போனது செருப்புகள் மிதந்துகொண்டிருக்கின்றன கட்டைகள் துணிகள் மிதக்கின்றன ஆழத்தில் கிடக்கிறது ரத்தக்கறை நீங்காத அரிவாள் அதனை நீர் மீட்டுகிறது வெள்ளைத்தாமரை செஞ்சிவப்பு ஆகிறது #…
நேசமித்ரன் கவிதைகள்
ஊமத்தையும் மருத்தோன்றியும் அருகருகில் ஒன்றை அரைத்தால் உன் கந்தகமௌனம் மற்றது உனது முத்தத்துக்கு முந்தையச் சொல் உறிஞ்சப்படும் கஞ்சா கங்கின் செந்திறப்பு கொதிக்கும் ஓரிதழ் தாமரையின் திரட்சி முன்னது வெட்கினேன் என்று பிறகு சொல்லும் கணம் பின்னது உனக்கு கடவுச்சொல் மறந்த கண்ணாடி அறை அழுக்கை முத்தாக்கும் சிப்பியை ருசித்துண்ணும் கடல் நிலத்தவனுக்கும் சிறிய சினச் சொல்லண்ண உதிரவாசனைக்கு நீர்த்திமிரும் சுறாவுக்கும் ஆன பனிப்போரில் கஞ்சா கங்ககென வால்நட்சத்திரம் எறிந்து விளையாடுகிறது…
அஷ்ரப் கவிதைகள்
சுழற்சி அநேக பொழுதுகளில் தூங்கி தூங்கி வழிகிறாள் அம்மா தூக்கத்தில் புன்னகைப்பதாக ஒருமுறை அடுத்தவீட்டு அக்கா சொன்னாள் கழிவறையில் தண்ணீரைத் திறந்து மூடாமல் அப்படியே பார்த்துகொண்டே நிற்கிறாள் உடையை பத்து முறையாவது மாற்றச் சொல்லி தினமும் அடம்பிடிக்கிறாள் காலையா? மாலையா? தெரியாமல் குழம்புகிறாள் ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறாள் சாப்பிட்டு முடித்து சித்த நேரத்தில் சாப்பாடு போடச் சொல்கிறாள் முணுமுணுத்தபடி கடவுளிடம் ஏதாவது வேண்டிக் கொண்டே இருக்கிறாள் வீட்டில் காணாமல் போகும் பல அவளது…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]