Skip to content Skip to footer

Tag: editor’s choice

மாயத்தைக் கட்டும் கவிதை!

கவிஞர் விக்ரமாதித்யன் ஒருமுறை ’மாயத்தைக் கட்டுவதே கவிதை’ என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். எனக்கு அந்தச் சொற்கள் மனதுக்குள் உருண்டுகொண்டேயிருக்கின்றன. அதன் உள்ளார்ந்த பொருள் என்னவாய் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். விக்ரமாதித்யன் சொன்ன சூழலலமைவைக் கடந்தும் அந்தச் சொற்கள் ஒரு தத்துவார்த்த தளத்துக்குள் பயணிக்கின்றன எனக் கருதுகிறேன். கவிதைகளில் மாயம் எப்படிக் கட்டப்படுகிறது. மாயம் என்பதைப் புரியாமை, பூடகத்தன்மை, சூட்சுமப் பொருள் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். ஒரு கவிதையில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு, தனித் தனிச் சொல் சொல்லாய்…

மேலும் வாசிக்க

தமிழ்க் கவிதைக்குள் திணையென்னும் படிமம்

இந்தக் கேள்விகள் கவிதைகளை எழுதுபவர்களின் கேள்விகள் அல்ல. கவிதை வாசகர்களின் கேள்விகளும்கூட அல்ல. ஆனால் இலக்கியத்திறனாய்வு என்னும் விமரிசனம், “கவிதையை எப்படி வாசிப்பது?” என்ற கேள்வியில் தொடங்கி, “கவிதை எவ்வாறு உருவாகிறது?” என்பதை விளக்கிக் கொண்டே இருக்கின்றது. இப்படி விளக்குபவர்களை திறனாய்வாளர்கள் என்று சொல்வதைவிடவும், இலக்கியத்தை ஒரு கோட்பாடாக்கி விளக்கிவிட நினைப்பவர்கள் என்று சொல்லலாம். கவிதைகள் எவற்றை எழுதிக்காட்டுகின்றன? இந்தக் கேள்விக்குத் தவிப்பை - தேடலை - தேடலின் வலியை- தடையை - தடைகள் ஏற்படுத்தும் அச்சத்தை-…

மேலும் வாசிக்க

சிங்கப்பூர் கவிதைவெளியின் புதிய பாய்ச்சல்

சென்ற மே 21-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்ற இன்பாவின் ‘லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்’ கவிதைநூல் வெளியீடு மற்றும் திணைகள் இணைய இதழ் தொடக்க விழாவில் கவிஞர் பெருந்தேவி முன்வைத்த ஒரு கருத்தாடல் கவனம் பெற்றது. சிங்கப்பூர் தமிழ் படைப்பாளர்கள் தங்களது படைப்புகளுக்கான அங்கீகாரத்துக்கு தமிழக இலக்கியங்களை ஒப்புநோக்கும் மனப்போக்கிலிருந்து வெளிவரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இது மிகச்சரியானதொரு பார்வை என்றே கருதலாம். போலச்செய்யும் போக்கு இலக்கிய படைப்புக்களின் தனித்துவத்திற்கு உலைவைக்கும் போக்கு. உலகெங்கிலும்…

மேலும் வாசிக்க

நிழல், அம்மா.

புதிய கவிதை  நூல் நிழல், அம்மா பற்றி... நேசத்தின் கிடைமட்டப் பரப்பில் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது எனது கவிதை வெளியீடு இரண்டு விதமாக இதில் வெளிப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. உள்ளடக்கமும் மொழியும் சார்ந்து அவற்றை குழப்பமும் மூட்டமும் தகிப்பும் புனைவும் கொண்ட கவிதைகள் என்றும், தெளிவும், அறிந்த ஒன்றைச் சுட்டும் நம்பிக்கையும் தென்படும் கவிதைகள் என்றும் வகை பிரிக்கலாம். முதல் வகைக் கவிதைகள் ஓசை ஒழுங்கும் சந்தமும் கொண்டதாகவும், இரண்டாம் வகைக்…

மேலும் வாசிக்க

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

பெண் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் ஆணின் ஒரு கேள்விக்கு பெண்ணிடம் பல பதில்கள் உள்ளன கேட்பவர் யாரென்றறிந்த பிறகு அவள் பதிலை வெளிப்படுத்துகிறாள் அப்பெண் ஓர் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் அவனைக் காதலிப்பதாக நம்ப வைப்பதுதான் பிறகு ஆணின் உடலுக்கு ஒரு மலரின் இயல்பு வந்துவிடுகிறது அது மலரும் உலரும் உதிரும் அதற்குள் பெண் மிக நீளமான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பாள் அவனைக் காதலிக்கவும் அல்லது…

மேலும் வாசிக்க

கீதாரியின் உப்புக்கண்டம் கவிதைகள்

1 ஆடுகள் வலசை போகையில் குட்டிகளை ஈன்றுவிட்டால் இடையனுக்குச் சுமை தெரியாது மாடுகள் காளைக் கன்றுகளை ஈன்றுவிட்டாலும் சுமையாகத் தெரியாது இதோ இந்தக் கராமறையாடு வலசை போகையில் ஈன்றது என்றும் இதோ இந்தக் கிளிக்கொம்பாடு அந்தி மறைகையில் ஈன்றுது என்றும்! இதோ இந்தக் காரிக்காளை ஒரு மதிய நேரத்தில் உச்சிவெயிலில் பிறந்ததென்றும் நினைவில் வைத்துக்கொள்வான் சுமை யெல்லாம் நீரின்றி வறண்டு கிடக்கும் இந்தக் குளத்திலும் வாடிக் கிடக்கும் அந்த நிலத்திலும் தான் 2 இடைச்சியே வா…! வந்த பாதையை நோக்கித் திரும்பப் போவோம். நாம் போக வேண்டிய பாதை இதுவல்ல. வழியில் எங்காவது ஆலமரமோ ஐயனாரோ இருந்தால் காட்டுப்பேச்சி சாட்சியாக மீண்டும் திருமணம் செய்து கொள்வோம் மை போலிருக்கும் கருவிளம் பூக்களை…

மேலும் வாசிக்க

ஆர்த்தெழும் பெண் குரல்

அறிமுகம் எளிய அழகிய மொழியில் விடியலைத் தேடியபடி ஆரம்பமாகிறது, ‘கடல் முற்றம்’. சென்னை மோக்லி பதிப்பக வெளியீடாய் கிண்ணியா எஸ். பாயிஸா அலியின் 50 கவிதைகளின் தொகுப்பாய் 2017 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. கவிஞர் அனாரின் கனதியான முன்னுரையுடன் வெளிவந்த இந்நூலை முஹம்மத் முஸ்டீன் - ஷாமிலா ஷெரீஃப் முஸ்டீன் தம்பதியர் தமது ஷெய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்தத் தயாரிப்பகத்தின் (SIM Production) மூலம் கொழும்பில் மிகவும் விமரிசையாக வெளியிட்டு வைத்தார்கள். ஃபாயிஸா அலி பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியை, கவிதாயினி,…

மேலும் வாசிக்க

வயலூறும் ஆட்டுரமும் மாட்டுரமும்

முல்லை நில மக்களின் வாழ்வியலைச் சொல்லும் முல்லைக்கலியில் எருமைகளை வளர்ப்பவர்களை ‘கோட்டினத்தார்’, பசுவை வளர்ப்பவர்களை ‘கோவினத்தார்’, ஆடுகளை வளர்ப்பவர்களை ‘ஆட்டினத்தார்’ என மூன்று வகையான ஆயர்ச் சமுதாயம் இருந்ததாகச் சங்க இலக்கியம் சொல்கிறது. நீட்டுரமும் தேட்டுரமும் நெல்லுரமும் ஆகையினால் ஆட்டுரமும் மாட்டுரமும் வயலுரங் காண் ஆண்டே என்ற பாடலில் ஆடு மாடுகளின் கழிவுகளை உழவு நிலத்திற்கு உரமாகப் பயன்படுத்தினார்கள் என்கிறது சங்கப் பாடல். கி.ராவின் மிகச்சிறந்த படைப்பான கிடை என்னும் குறு நாவல் இடையர் இனத்திற்கிடையே உள்ள சமூக உறவுகளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் நுட்பமாகப்…

மேலும் வாசிக்க

He Shan சீனக் கவிதைகள்

அவனது வாகனத்தை தேர்ந்தெடுக்கிறோம் முன்னரே வந்த எதிரொலியின் சாயலில் இடர்பாட்டின் வண்டியில் சுற்றிச் சுற்றி வீசப்படுகிறோம் காட்டுப் பூக்கள் கீதமிசைக்கும்போது நாங்கள் அந்தக் கீதங்கள் வழியாக நடக்கிறோம் சூரியன் நீண்ட நிழல்களைப் படர்த்தும்போது ஓடையில் இருந்து பருகும் கனவுகளை கனவுகாண்கிறோம் இலையுதிர்காலத்தில் இலைகள் உதிர்ந்து விழும்போது குளிர்காலத்தின் வண்டியில் நெருங்கி ஒருவரையொருவர் கேட்கிறோம் நாம் ருசிப்பது வாழ்வின் வசந்தம் நாம் வாழும் வாழ்வோ அவசரம் அவனது வண்டியில் நாம் சவாரி செய்கிறோம். மரணத்தின் வண்டி அது வண்டியோட்டியின்…

மேலும் வாசிக்க

சித்துராஜ் பொன்ராஜ் கவிதைகள்

Harlem-இல் லோர்கா ஒரு கறுப்பனின் மரணத்திற்கு ஃப்ளெமெங்கோ பாணி பாடல்.. இந்த நகரம் என்னும்                     கைத்துப்பாக்கி                  உன்னையும் என்னையும்              நிரந்தரமாய்க் குறிபார்த்தபடி                             இருக்கிறது.    நல்லதொரு கைத்துப்பாக்கி         அமைவதைப் போலவே                   கைக்கு வாகாய்     ஒரு நகரமும் எல்லோருக்கும்    அமைவது                              அவசியம்,                      ஒரு நாத்திகனுக்கு      எதிர்ப்பதற்கு வாகாய்         ஒரு கடவுள்        அமைவதுபோல் -                                என்னைக் கொலை        …

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]