Skip to content Skip to footer

Tag: இதழ் 6

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

புழுக்கள் தேடும் பறவைகள் அது நீண்டகாலம் இருந்து வருகிறது மற்றும் அதன் எளிமையைத் தவிர்த்து விடுவோம் ஏனெனில் அது மீன் இறைச்சியின் மீது கடலின் ஆற்றலைக் குறைத்து விடுகிறது பன்றிகளுக்குக் கொட்டிலையும் பீட பூமிகளை ஆடுகளுக்கும் தரித்திரனுக்கு உயிர்ப்பின் ஆன்மிகத்தையும் நிறைத்து அடிகிழிந்த கருந்துளையில் எதிர்காலத்தைக் கொட்டுகிறது சூரியனுக்கும் நிலத்திற்கும் கடலுக்கும் பேரண்டமாய் நின்றாடும் அதற்கு ஆள்விழுங்கி என்று பெயர் சிலருக்கு முதிர்ந்த மரத்தின் இலையளவுகூட செல்வம் கிடையாது மறுமையை மருந்திற்குக்கூட எறும்புகள்…

மேலும் வாசிக்க

கவிதை என்னை ஏன் ஈர்க்கிறதென்றால்… – சார்லஸ் சிமிக்

சிந்திப்பதென்றால் என்னவென்பதை நாம் புரிந்துகொள்ளும்வரை கவிதை என்றால் என்னவென்பதையும் நாம் புரிந்துகொள்ளவே போவதில்லை என்கிறார் ஹைடக்கர். அவர் மேலும் சொல்கிறார். மிக சுவாரஸ்மான விஷயம் என்னவெனில், சிந்திப்பது இயற்கையாகவே சிந்திப்பதிலிருந்து வேறுபட்ட ஒன்று, விரும்புவதிலிருந்து வேறுபட்ட ஒன்று. இந்த வேறுபட்ட ஒன்றைப் பிடிக்கவே பொறிவைக்கிறது கவிதை. 000 நமது ஆழ் அனுபவங்கள் அனைத்தும் மொழியற்றது என்றே எனது உள்ளுணர்வு கூறுகிறது. காட்சிகள் இருந்தாலும் பார்ப்பதற்கும் சொல்வதற்குமிடையில் வார்த்தைகளால் விவரிப்பதற்குமான இடைவெளியை விவரிப்பதற்கு வார்த்தைகள் இருக்காது,…

மேலும் வாசிக்க

சீர்நிறைவு செஞ்செழிப்பு சிங்கப்பூர் !  

வானில் மெல்லத் ததும்பி நிற்பதுபோல் ஒரு தயக்கம் காட்டியது வானூர்தி. மூச்சொலி கலந்த பறநர் அறிவிப்பு ‘நாம் சிங்கப்பூரில் தரையிறங்கப்போகிறோம்’ என்றது. நீள்வட்டக் காலதர்வழி எட்டிப் பார்த்ததில் கனவுலகொன்று மஞ்சள் ஒளிப்புள்ளிகளாய்த் தென்பட்டது. புதுநிலந்தொடுவது கால்கள் பெறும் காலப்பேறு. காணாவொன்றைக் காண்பதே களிகொள்காட்சியின்பம். வான்துறையகம் இறங்கிக் குடிநுழைவேற்று வெளியேறினேன். அந்தத் துறைக்கூடமே சொல்லிற்கடங்காத கட்டடம். …

மேலும் வாசிக்க

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

1 அன்னை உள்ளிருந்து என் விழிகள் வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறாள் தன்னை எவ்வாறு இவர்கள் நடத்துகிறார்கள் என்று பார்க்கிறாள் தன்னிடம் சொல்லப்பட்ட உத்திரவாதங்களின் பொய்களை உணர்கிறாள் தன்னிடம் இவர்களின் பாசாங்கு எவ்வளவு என அறிகிறாள் எதன் பொருட்டும் வஞ்சம் நிகழாதபடி காப்பது தவிர்த்து நான் ஒன்றுமே செய்வதில்லை அவள் தரும் ஆயுதங்களை இப்போது எடுப்பதில்லை பதிலாக அவளை சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன்…

மேலும் வாசிக்க

த.அழகுராஜன் கவிதைகள்

அந்தி குழையும் வேளையில் மேற்கு வானத்தின் வண்ணம் சுமந்து கூடடைந்த பறவை கிளையின் அசைவில் விழித்து கொண்டதில் தன் அலகால் விண்மீன்களைப் பொறுக்கிச் சேகரிக்க எத்தனிக்கிறது முற்றத்தில் விழும் நிலவொளியில் தனிமை தகிக்கிறது நீண்ட இரவுகளை விழுங்கிய நிலவு மெல்ல தேய்கிறது..! ---- மௌனத்தின் இடைவெளியை நெருக்கத்தின் மூச்சுக்காற்று நிரப்ப விழைகிறது சுழல் காற்றுக்கு உடையாத நீர்க்குமிழியொன்று எதிர்க்காற்றின் திசையில் தன்னை கட்டிக் கொள்கிறது உடைய மறுத்த வேளையில் சொற்களற்ற ஒரு பார்வையில்…

மேலும் வாசிக்க

பழ. மோகன் கவிதைகள்

மகிழம் பூ 'மகிழம்பூ' என்பது இவ்வுலகிற்கு ஒரு மலர்; நம்மிருவர்க்கும் அஃதொரு மறைபொருள் நமக்கு மட்டுமே தெரிந்த அந்த மகிழம்பூ நீ பிறக்கும்போதே உன்னோடு பூத்தது உள்ளுந்தோறும் மகிழச் செய்வதால் நான்தான் அதற்கு மகிழம்பூ என்று பெயரிட்டேன் மறுப்பேதும் சொல்லாமல் நீயும் ஏற்றுக் கொண்டாய் நாம் பிரிவுற்ற நாளொன்றில் உன்னோடு ஒட்டிக்கொண்டு வந்து விட்டதந்த மகிழம்பூ அதன் மணம் மட்டும் நீங்காமல் தங்கிவிட்டது என் நினைவில்.   நல்மனம் ஒரு பெண்ணைக் காதலித்ததற்காய் ஊரைவிட்டு அடித்துத்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]