Skip to content Skip to footer

Tag: இதழ் 1

தமிழுக்குப் பன்றிக் கறிச் சுவை

அந்தக் குகையில் தொடங்கி, இந்தக் குகையில் முடிகிறது எல்லாம். இடையில் நிகழும் கனவுகள் யாவும், பழுதுற்ற காலயந்திரக் குழப்பங்கள். தந்தை தேவைப்படாத முட்டைகள் பாடிக்கொண்டிருக்கின்றன, உள்ளே. வேட்டைநாய்கள், பசிமயக்கக் கனவுகளில் எஜமானனைக் குதறித் தின்கின்றன. காமத்தில் பிசைந்த உணவு, ஞானச்சுரப்புக்கான பத்திய மருந்து. தோட்டாவை மென்று விழுங்குவதற்குப் பதிலாக, வயிற்றில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் வான்கா. பெரிதுபடுத்த ஒன்றுமில்லை. விடுமுறை நாளின் தனிமையில், சூரியகாந்திப் பூக்கள் நிகழ்த்திய சின்னக் குழப்பம்தான் அது. ரத்தவாடை மிகுந்த பரிணாமத்தின் பாதையை…

மேலும் வாசிக்க

பூங்குழலி கவிதைகள்

1. மிக கவனமாக ஒவ்வொரு பந்தாக தரையில் வீசி அதன் இசையைக் கேட்பதில் உற்சாகம் இயலுக்கு சில பொழுதுகளில் இவளின் வீசுதலுக்கு இடையே தரையில் அதன்போக்கில் அசையும் பந்துகளுக்கு அவளே ஒலி எழுப்புவாள் பிறிதொரு நாளில் மழைக்குளத்தில் பந்துகளை வீசிய அவள் தன்னில் தெரிக்கும் நீர்த்துளிகளைக் கோர்த்து இசையொன்றை மீட்டுகிறாள் அடங்காமல் ஆடிக் கொண்டிருந்தன பந்துகள் ஒரு பெருங் கூத்தின் காட்சியென அது   2. பெயர் தெரியா பச்சைப் பறவை அன்று அவளைப்…

மேலும் வாசிக்க

முனியாண்டி ராஜ் கவிதைகள்

எங்கள்_குடும்பம் ஆண்டுக்கொரு முறை வரவு செலவு போடும்போது மூத்த பிள்ளைகளைப் பத்திரமாய் பார்த்துக் கொள்வாய் அப்பா ஆடைகளிலிருந்து அரைஞாண்கயிறுகள்வரை அதில் தங்க இழைகள் மின்ன வேண்டும் உண்ண மறுக்கும் … ம்ம்ம் .. சோம்பல்படும் அவர்களுக்கு ஊட்டிவிட கரண்டியொன்று கக்கத்திலேயே இருக்கும் அண்ணன்களும் அக்காள்களும் குழந்தைக் குட்டிகளோடு கும்மாளமிடும்போதும் ஊன்றுகோலொன்றை வருடா வருடம் புதுப்பித்துக் கொடுப்பார் அப்பா அறைகளில் குளிரூட்டிகளில் அவர்கள் களிக்க குட்டிச் சுவரோரம் ஒண்டிக் கொள்வோம் நாங்கள் அண்ணன்களுக்கும் அக்காள்களுக்கும் நாங்களென்னவோ இன்னும்…

மேலும் வாசிக்க

இன்பா கவிதைகள்

1. நூறு முறை உன் கோபத்தை அனுபவித்திருக்கிறேன் ஒரு முறை தான் உன் மீது கோபம் கொள்ள முடிந்தது நூறு முறை உன் வெறுப்பைக் காட்டியிருக்கிறாய் ஒரு முறைதான் உன்னை வெறுக்க முடிந்தது எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன் முதல் முறை பார்த்தது போலில்லை ஒவ்வொரு முறையும் புதிதாகப் பார்க்கிறேன் இதுவரை யாரையும் பார்த்ததேயில்லை 2. உன் மீது கோபத்தைக் காட்ட நான் அதிகமாய்ப் பயன்படுத்தியது எரும, மாடு, பேய், பிசாசு, குரங்கு,…

மேலும் வாசிக்க

கருணாகரன் கவிதைகள்

யாரும் சொல்லாத ஒன்றை யாரும் எண்ணாத ஒன்றை யாரிடத்திலும் இல்லாத ஒன்றை யாராலும் தந்து விட முடியாத ஒன்றை யாருக்குமே வாய்க்காத ஒன்றை யாராலும் யாராருக்குமே அளிக்கப்படாத ஒன்றை ஒரு போதுமே நிகழாத ஒன்றை ஒரு போதுமே நிகழ முடியாத, நிகழ்த்தவியலாத ஒன்றை அவனுடைய நிழலில் கண்டேன் அந்த நிழல் அவனை விட்டுப் பெயர்ந்து எங்கெல்லாமோ சென்றது. --------------------------------------------- யாரென்றே தெரியாத ஒருவன் தான் யாரென்றே புரியாதவன் ஏது இதுவென்று அறியாதவன் ஒளிரும் நிழலாகி நின்றான் ஒளிரும்…

மேலும் வாசிக்க

நேற்று மாலை என் ஜன்னலிலிருந்து ஒரு புறா குடும்பத்தைத் துரத்திவிட்டேன்

குடும்பத்திலிருந்த குஞ்சுப் புறா— சின்னஞ் சிறிய ரத்தச் சிவப்பு வாய் அதற்கு— என்னைப் பிடிக்காத என்னை நினைவுபடுத்தியது அது தன் அம்மாவைச் சுற்றிச் சுற்றி நடந்தது தன் அம்மாவின் குண்டு உடம்பின்மீது ஒட்டிக்கொண்டு தூங்கியது தன் அம்மாவின் வாயிலிருந்து ஹூம் ஹூம் சத்தத்துக்கு தானும் பதில் சத்தம் தந்தது அந்தக் குஞ்சின் மாற்ற முடியாத இயலாமை எனக்குத் துக்கத்தைத் தந்தது ஒரு தோட்டாவால் உடனடியாக முடித்து வைக்க வேண்டிய அளவு துக்கம் அந்தக் குஞ்சின்…

மேலும் வாசிக்க

தூசி படிந்த கறுப்புப் பெட்டிகள்

குற்ற உணர்வின்றி மகிழ்ச்சியாக இருப்பது கனவுச் சுருளின் மையத்துக்குள் இழுக்கிறது உறக்கக் கலக்கத்தோடு அறைக்கதவு தாழிடப்படுகிறது என் உயரத்தை ஒரு கை அளவிடுகிறது கூரையின் உயரம் சரிசெய்யப்பட்டதும் மின்விசிறி நிறுத்தப்பட வாகாக நாற்காலி  சுருக்கை இழுத்துப் பார்க்கும் கைகள் மூன்று இரண்டு ஒன்று சொல்வதற்குள் வியர்த்து விழிக்கிறேன் காலடியில் ஆடிக் கொண்டிருந்த குழந்தையின் தொட்டில் கயிறு பட்டென அறுகிறது பதறியெழுந்து தாங்கிக் கொள்ள நீளும் கைகள் தட்டிவிடப்படுகின்றன மீண்டும் வியர்வை மீண்டும் விழிப்பு கனவுக்குள் கனவு கலைகிறது அசலான விழிப்பில் கரக் கரக் சத்தத்திலும் கலையாத உறக்கத்தில் விரல்சப்பும் குழந்தையின் முகத்தில் ஆழ்ந்த அமைதி ஏந்திக் கொள்ள கைகள் நீட்டுகிறேன் ---------------------------------------------------------------------------- …

மேலும் வாசிக்க

இன்றைய காலை குளிர்ச்சியுடன் இருந்தது

யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா இன்றைய காலை குளிர்ச்சியுடன் இருந்தது, ஆனால் மத்தியானத்திற்குள் வெப்பம் கூடிவிட்டது. நீல முகில்கள் வடக்கில் குவிந்திருந்தன. நான் செவ்வியல் மொழிகளைக் கற்பிப்பது குறித்து விவாதம் நிகழ்ந்த ஒரு சந்திப்பிலிருந்து வந்தேன். தனது பிரச்சனைகளை என்னிடம் சொல்ல விரும்பிய நண்பருடன் நான் ஆற்றின் அருகே அமர்ந்திருந்தேன். தண்ணீர் நிறைய ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு சிறுவர்கள் கரையிலிருந்து கூழாங்கற்களை ஆற்றில் வீசிக்கொண்டிருந்தனர். அவருக்குப் பகிர்வதற்கு என்னிடம் எந்த ஆலோசனையும் இல்லை... மேலும் நதிக்கரையில் பெஞ்சுகளும்…

மேலும் வாசிக்க

வெள்ளைக் காகிதம் மற்றும் காலம்

யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா வெள்ளைக் காகிதம் மற்றும் காலம்: ஒன்றை நான் நிரப்புகிறேன், இன்னொன்று தன்னைத்தானே நிரப்பிக்கொள்கிறது. இரண்டுக்கும் அவ்வளவு ஒற்றுமையுண்டு. அவையிரண்டின் முன்பும் நான் கூச்சப்படுகிறேன், திகைத்துப் போகிறேன். உயர்ந்த வாசலுடைய இருண்ட கொட்டகையினுள்ளிருக்கும் ஆட்டினைப் போன்றது கவிதை. அதை நெருங்கும்போதெல்லாம் நிலைகுலைந்து போகிறேன். பார்வை வெளியே இருக்கிறது. இங்கே உன் கைகளின் உதவியினால் மட்டுமே நகர இயலும். வெள்ளைக் காகிதம். வெள்ளைக் கம்பளி. இருட்டில் இரண்டும் அவ்வளவு எளிதில் மறைந்துவிடுவதில்லை. காலம்…

மேலும் வாசிக்க

நிறையப் பூச்சிகள் இந்தக் கோடையில்

யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா நிறையப் பூச்சிகள் இந்தக் கோடையில். நீங்கள் தோட்டத்திற்குள் சென்றவுடன் உங்களை முற்றுகையிடுகின்றன ரீங்கரிக்கும் வண்டுகளின் திரளொன்று. பறவைகளுக்காக நீங்கள் அமைத்த பெட்டிகளில் குண்டுத்தேனீக்கள் கூடு கட்டுகின்றன, காட்டுச்செடிகளின் புதர்களில் தங்களது கூடுகளை அமைக்கின்றன குளவிகள். மேலும் மாடி அறையில் மேசையின் முன் அமர்கையில் நீங்கள் அடிக்கடி கேட்கிறீர்கள் ஒரு ரீங்காரத்தை, மேலும் உங்களுக்குத் தெரியாது அந்தச் சப்தம் குண்டுத்தேனீக்களுடையதா, குளவிகளினுடையதா, மின்சாரக் கம்பிகளினுடையதா, வானத்தில் செல்லும் விமானத்தினுடையதா, சாலையில் போகும்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]