யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா நானும் என் மகனும் வீட்டுக்குப் புறப்பட்டோம். ஏற்கனவே மாலை மருண்டுவிட்டிருந்தது. மேற்கு வானில் ஓர் இளைய நிலா அதன் அருகில் ஒரு நட்சத்திரம். நான் என் மகனுக்கு அவற்றைக் காண்பித்து நிலவை எப்படி வரவேற்பது என்றும் அந்த நட்சத்திரத்தை நிலவின் வேலையாள் என்றும் விவரித்துச்சொன்னேன். வீட்டை நெருங்குகையில் அவன் சொன்னான் நாம் சென்று வந்த இடத்தின் தொலைவைப் போலவே நிலாவும் ரொம்பத் தூரத்தில் இருக்கிறது என்று. நான் அவனிடம் நிலவு…
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் கன்னட இலக்கியமும் புதிய பரிமாணத்தை அடைந்து – பழம் கன்னடம் – இடைக்காலக் கன்னட இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு நவோதய இலக்கியம் என்ற புதிய வடிவத்தைக் கண்டுகொண்டது. இது புனைகதை, நாடகம், அபுனைவு, விமர்சனம், காவியம், கவிதை, மெல்லிசை கீதம், இதுபோல வெவ்வேறு வடிவங்களில் விரைவாக வளர்ந்து இலக்கிய வளர்ச்சிக்கு வெகுவாகக் காரணமானது. இதில் முக்கியமான வடிவங்களாக மெல்லிசைப்பாடல், கவிதை, உரைநடையின் அழகுடன் கூடிய சானட் அமைப்பினைக் கொண்ட கவிதைகள்…
நாங்கள் நாள்தோறும் தவறுவதில்லை சந்திக்க அப்படியொரு எதிர்பார்ப்பு மொழியில்லாமல் பொங்கிவழியும் இதயம் கண்களில் கசியும் நேசம் எல்லாம் உடல்மொழி கூறும் மறந்தால் தவிக்கிறது மனம் அழைக்கவும் என்னைக்கேட்கவும் ஒரு வழியில்லையே... மொழிதான் வேண்டுமா? உணரத்தெரியாதா? உள்மனம் கேட்கிறது காலையென்றால் என் முதல்வேலை சந்திப்பதுதான் அது தரும் மனநிறைவு எதுவும் தருவதில்லை விழிகளால் விசாரிப்பது நாள்தோறும் நாட்காட்டியைப் பார்ப்பதுபோல்...
மரபைக் கவிஞர்கள் கழட்டிவிட்டதன் காரணம். வெறும் மோஸ்தர் என்று பலரும் கருதுகிறார்கள். அன்று மட்டுமல்ல இன்றுமேகூட புதுக்கவிதையினர் மரபின் செய்யுள் தளைகளை அறுத்துக் நவீன கவிதை கண்டது மரபின் மீது கொண்ட வெறுப்பாலும் மரபு அறியாமையாலும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. மாறிவந்த காலச் சூழலும் அது மானுட மனங்களில் உருவாக்கிய சிந்தனைகளுமே மரபை நீக்கு புதுக் கவிதை காண ஊக்கமான சூழலை உருவாக்கியது. குறிப்பாக, உலகம் முழுதுமே ஃப்ரீ வெர்ஸ் எனப்படும் தளையற்ற கவிதைகளின்…
கண்ணாடி முன்னால் அவள் நின்று உடைமாற்றிக் கொண்டிருந்த வேளை ஜன்னல் வழிக்கடந்தபோது, தேகம் சிலிர்த்து, அறிவு விதிர்த்து, சிறுவன் நான் சில நொடிகள் பார்த்த, செழித்திருந்த முலைகள் அல்ல இப்போது அம்மாவுடையது முழு உடலையும் துவளச் செய்திருந்த புற்றுநோயில் மெல் உடைகளையும் வேண்டாமென்று மறுத்து சாவின் வாயோடு, அம்மா தன் உதடுகளைப் பொருத்திக் குவித்திருந்தாள் அவள் அனுபவிக்கும் மரணத்திலிருந்து நான் தப்பிக்க, அவள் மரணத்தைச் சற்று தொலைவுள்ளதாக்க, அவளது மரணத்தை நான் சற்று கசப்பு குறைய விழுங்க…
பாடப்புத்தகத்துக்கு முன்னால்
எப்போதும் சென்று கொண்டிருந்த
என் அம்மா
பணியிட மாறுதல் ஆகி
தூத்துக்குடிக்குப் போனாள்
இயற்கைத் துறைமுகத்துக்கும் செயற்கைத் துறைமுகத்துக்கும்
வித்தியாசம் அப்போதுதான் தெரிந்தது
கப்பல்கள் நின்று செல்வதற்கான அமைப்பு
இயற்கையாகவே அமைந்திருக்கும் இடம்தான்
இயற்கைத் துறைமுகம் என்று
தூத்துக்குடிக்கு நாங்கள் குடியேறிய போதே
சொல்லிவிட்டாள்
ஏற்கெனவே தூத்துக்குடி துறைமுகம்
என்னிடம் ஆழப்பட்ட பிறகுதான்
தூத்துக்குடி துறைமுகத்தை நேராகப் பார்த்தேன்
அம்மா பிறந்து வளர்ந்த ஊர் தூத்துக்குடி
அங்குமிங்கும் பன்றிகள் மேயும் ஊராக
எனக்குத் தெரியப்போகும்அந்த…
அம்மாவின் பொறுமை சகிப்புத்தன்மை எதையும் கொடையாக நான் பெறவில்லை அவளது நுரையீரல் தொடங்கி பலவீனமானதெல்லாம் எதுவோ அதையே அவளின் பிள்ளையாக நான் பெற்றிருக்கிறேன் நினைவு பயின்ற நாள்முதலாய் மருந்துகளுடனயே வாழ்ந்துவருபவள் என்றாலும் இந்த வயதிலும் உளநலத்துக்கான மாத்திரைகளை உட்கொள்ளவில்லை அவள் தாதியாகப் பணியாற்றியதால் அலோபதி மாத்திரைகளும் மருந்துகளும் ஊசிகளும் ஆஸ்பத்திரியின் வாசனையும் ஆதியிலேயே என் உடலுக்குப் பரிச்சயம் மழைக்காலங்களிலும் வியர்வை பெருகும் வேனல் நாட்களிலும் மூச்சுவிடத் திணறி என் நுரையீரல் அரற்றும்போதெல்லாம் டெரிபிளினையும் டெக்கட்ரானையும் கலந்து ஊசியாய் ஏற்றுவாள் அப்போது குளிர்மேகங்கள் மார்பில் இறுக்கத்தைத் தளர்த்தி வேர்வையைப் பூக்கவைத்து உறங்கவைக்கும் கூடவே பெயர் சொல்லி சிட்ரிசின் மாத்திரையையும் தருவாள் அம்மா. அவள் தந்த மாத்திரைகளையெல்லாம் விஞ்சி விழுங்கும் மாத்திரைகளுக்கும் அவளுக்கே புரியாத நோய்க்குறிகளுக்கும் அனுபவம் கொண்டுவிட்டது தற்போதைய எனது உடம்பு. ஆனாலும் பொடியனின் உடலைக்…
1. என் நாட்குறிப்பைக் கொட்டி வைத்திருந்த கடற்பேழையில் உடைந்த இதயத்தை நுழைத்து எதையெதையோ தேடுகிறது என் நதி ஆவேசத்தோடு என் உயிரின் இரகசியக் குறியீட்டை கண்டுபிடித்து விடுமோ என்ற பயத்தோடு பனி சூழ்ந்த கரையில் நான் காவலிருக்கிறேன் சின்ன தைரியம் கடற்பறவைகளின் சிறகுகளில் மறைத்துவைத்த என் சிம்பொனியின் அழகிய வரிகள் அதற்குக் கிடைக்கப்போவதில்லை இறுதிவரை அது போதும் 2. கடலின் முதல் அலையைநான் வரைவதாகத்தான்இருந்தேன் அதற்கான வண்ணங்களைஇரவுக்கு மகுடஞ்சூட்டியமின்மினிகளிடம்இரவல் வாங்கி வந்தேன் பளிச்சிடும் நீல வண்ணத்தை மட்டும்உன் கனவிலிருந்துகளவாடி…
என் தாத்தா முழு நேர விவசாயி அப்பா பகுதி நேர விவசாயி நானும் என் இளமையில் அரைகுறை விவசாயிதான் என் மகன்களுக்கோ ஒரு மடைமாற்றவும் தெரியாது இன்று உழவின் சுவாசம் முனகிக் கொண்டிருக்கிறது பூனையை அஞ்சி சுண்டெலிகள் ஆகாரம் தேடி பீக்காடுகளில் அலைகின்றன மாமழைப் போற்றிய மண்ணில் கிணறுகளை வற்றக் குடித்தும் தாகம் தீரா ஆழ்துளை கிணறுகள் உழவாளி கடனாளி யாகிவிட்ட ஏமாளி கனவுகளில் கூலிப்படைகளின் ஜப்திப் படையெடுப்பு தவிடுபொடியான தவிடும் பிண்ணாக்கும் பணத்தைக் கரக்கும் தீவன மூட்டைகள் தரகனது இருசக்கர வாகனப் பின்புறத்தில் கசாப்புக்கடையன் மடியினில் பால்குடிக் கன்றுகள் குட்டிச்சுவராய் மாட்டுக் கொட்டகை தூர்ந்துபோன எருக்குழிகள் உயிரை உறிஞ்சும் உரப்பூச்சிக்கொல்லிகள் மலடாக்கப்பட்ட வயல்வெளிகளில் அடுக்கப்பட்ட வீட்டுமனை…
இன்றைய பிறந்தநாளில் சந்திப்பதாய் நேற்று மாலை விடைபெற்றிருந்தோம் இரவு ஒரு கனவு கண்டோம் நாளை விடியலில் இறந்திருப்பதாக இருந்தும் கவலை அற்றிரு நண்பா நேற்று முன்தினம்வரை நாம் வாழ்ந்திருந்ததேபோல் நாளை மறுநாளில் பிறந்தும் இருக்கலாம்.