குடும்பத்திலிருந்த குஞ்சுப் புறா— சின்னஞ் சிறிய ரத்தச் சிவப்பு வாய் அதற்கு— என்னைப் பிடிக்காத என்னை நினைவுபடுத்தியது அது தன் அம்மாவைச் சுற்றிச் சுற்றி நடந்தது தன் அம்மாவின் குண்டு உடம்பின்மீது ஒட்டிக்கொண்டு தூங்கியது தன் அம்மாவின் வாயிலிருந்து ஹூம் ஹூம் சத்தத்துக்கு தானும் பதில் சத்தம் தந்தது அந்தக் குஞ்சின் மாற்ற முடியாத இயலாமை எனக்குத் துக்கத்தைத் தந்தது ஒரு தோட்டாவால் உடனடியாக முடித்து வைக்க வேண்டிய அளவு துக்கம் அந்தக் குஞ்சின்…
குற்ற உணர்வின்றி மகிழ்ச்சியாக இருப்பது
கனவுச் சுருளின் மையத்துக்குள் இழுக்கிறது
உறக்கக் கலக்கத்தோடு அறைக்கதவு தாழிடப்படுகிறது
என் உயரத்தை ஒரு கை அளவிடுகிறது
கூரையின் உயரம் சரிசெய்யப்பட்டதும்
மின்விசிறி நிறுத்தப்பட
வாகாக நாற்காலி
சுருக்கை இழுத்துப் பார்க்கும் கைகள்
மூன்று இரண்டு ஒன்று சொல்வதற்குள்
வியர்த்து விழிக்கிறேன்
காலடியில் ஆடிக் கொண்டிருந்த
குழந்தையின் தொட்டில் கயிறு பட்டென அறுகிறது
பதறியெழுந்து தாங்கிக் கொள்ள நீளும் கைகள் தட்டிவிடப்படுகின்றன
மீண்டும் வியர்வை
மீண்டும் விழிப்பு
கனவுக்குள் கனவு கலைகிறது
அசலான விழிப்பில்
கரக் கரக் சத்தத்திலும்
கலையாத உறக்கத்தில்
விரல்சப்பும் குழந்தையின் முகத்தில்
ஆழ்ந்த அமைதி
ஏந்திக் கொள்ள கைகள் நீட்டுகிறேன் ---------------------------------------------------------------------------- …
யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா இன்றைய காலை குளிர்ச்சியுடன் இருந்தது, ஆனால் மத்தியானத்திற்குள் வெப்பம் கூடிவிட்டது. நீல முகில்கள் வடக்கில் குவிந்திருந்தன. நான் செவ்வியல் மொழிகளைக் கற்பிப்பது குறித்து விவாதம் நிகழ்ந்த ஒரு சந்திப்பிலிருந்து வந்தேன். தனது பிரச்சனைகளை என்னிடம் சொல்ல விரும்பிய நண்பருடன் நான் ஆற்றின் அருகே அமர்ந்திருந்தேன். தண்ணீர் நிறைய ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு சிறுவர்கள் கரையிலிருந்து கூழாங்கற்களை ஆற்றில் வீசிக்கொண்டிருந்தனர். அவருக்குப் பகிர்வதற்கு என்னிடம் எந்த ஆலோசனையும் இல்லை... மேலும் நதிக்கரையில் பெஞ்சுகளும்…
யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா வெள்ளைக் காகிதம் மற்றும் காலம்: ஒன்றை நான் நிரப்புகிறேன், இன்னொன்று தன்னைத்தானே நிரப்பிக்கொள்கிறது. இரண்டுக்கும் அவ்வளவு ஒற்றுமையுண்டு. அவையிரண்டின் முன்பும் நான் கூச்சப்படுகிறேன், திகைத்துப் போகிறேன். உயர்ந்த வாசலுடைய இருண்ட கொட்டகையினுள்ளிருக்கும் ஆட்டினைப் போன்றது கவிதை. அதை நெருங்கும்போதெல்லாம் நிலைகுலைந்து போகிறேன். பார்வை வெளியே இருக்கிறது. இங்கே உன் கைகளின் உதவியினால் மட்டுமே நகர இயலும். வெள்ளைக் காகிதம். வெள்ளைக் கம்பளி. இருட்டில் இரண்டும் அவ்வளவு எளிதில் மறைந்துவிடுவதில்லை. காலம்…
யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா நிறையப் பூச்சிகள் இந்தக் கோடையில். நீங்கள் தோட்டத்திற்குள் சென்றவுடன் உங்களை முற்றுகையிடுகின்றன ரீங்கரிக்கும் வண்டுகளின் திரளொன்று. பறவைகளுக்காக நீங்கள் அமைத்த பெட்டிகளில் குண்டுத்தேனீக்கள் கூடு கட்டுகின்றன, காட்டுச்செடிகளின் புதர்களில் தங்களது கூடுகளை அமைக்கின்றன குளவிகள். மேலும் மாடி அறையில் மேசையின் முன் அமர்கையில் நீங்கள் அடிக்கடி கேட்கிறீர்கள் ஒரு ரீங்காரத்தை, மேலும் உங்களுக்குத் தெரியாது அந்தச் சப்தம் குண்டுத்தேனீக்களுடையதா, குளவிகளினுடையதா, மின்சாரக் கம்பிகளினுடையதா, வானத்தில் செல்லும் விமானத்தினுடையதா, சாலையில் போகும்…
யான் காப்லின்ஸ்கி கவிதைகள் தமிழில்: வே.நி.சூர்யா நானும் என் மகனும் வீட்டுக்குப் புறப்பட்டோம். ஏற்கனவே மாலை மருண்டுவிட்டிருந்தது. மேற்கு வானில் ஓர் இளைய நிலா அதன் அருகில் ஒரு நட்சத்திரம். நான் என் மகனுக்கு அவற்றைக் காண்பித்து நிலவை எப்படி வரவேற்பது என்றும் அந்த நட்சத்திரத்தை நிலவின் வேலையாள் என்றும் விவரித்துச்சொன்னேன். வீட்டை நெருங்குகையில் அவன் சொன்னான் நாம் சென்று வந்த இடத்தின் தொலைவைப் போலவே நிலாவும் ரொம்பத் தூரத்தில் இருக்கிறது என்று. நான் அவனிடம் நிலவு…
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் கன்னட இலக்கியமும் புதிய பரிமாணத்தை அடைந்து – பழம் கன்னடம் – இடைக்காலக் கன்னட இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு நவோதய இலக்கியம் என்ற புதிய வடிவத்தைக் கண்டுகொண்டது. இது புனைகதை, நாடகம், அபுனைவு, விமர்சனம், காவியம், கவிதை, மெல்லிசை கீதம், இதுபோல வெவ்வேறு வடிவங்களில் விரைவாக வளர்ந்து இலக்கிய வளர்ச்சிக்கு வெகுவாகக் காரணமானது. இதில் முக்கியமான வடிவங்களாக மெல்லிசைப்பாடல், கவிதை, உரைநடையின் அழகுடன் கூடிய சானட் அமைப்பினைக் கொண்ட கவிதைகள்…
நாங்கள் நாள்தோறும் தவறுவதில்லை சந்திக்க அப்படியொரு எதிர்பார்ப்பு மொழியில்லாமல் பொங்கிவழியும் இதயம் கண்களில் கசியும் நேசம் எல்லாம் உடல்மொழி கூறும் மறந்தால் தவிக்கிறது மனம் அழைக்கவும் என்னைக்கேட்கவும் ஒரு வழியில்லையே... மொழிதான் வேண்டுமா? உணரத்தெரியாதா? உள்மனம் கேட்கிறது காலையென்றால் என் முதல்வேலை சந்திப்பதுதான் அது தரும் மனநிறைவு எதுவும் தருவதில்லை விழிகளால் விசாரிப்பது நாள்தோறும் நாட்காட்டியைப் பார்ப்பதுபோல்...
மரபைக் கவிஞர்கள் கழட்டிவிட்டதன் காரணம். வெறும் மோஸ்தர் என்று பலரும் கருதுகிறார்கள். அன்று மட்டுமல்ல இன்றுமேகூட புதுக்கவிதையினர் மரபின் செய்யுள் தளைகளை அறுத்துக் நவீன கவிதை கண்டது மரபின் மீது கொண்ட வெறுப்பாலும் மரபு அறியாமையாலும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. மாறிவந்த காலச் சூழலும் அது மானுட மனங்களில் உருவாக்கிய சிந்தனைகளுமே மரபை நீக்கு புதுக் கவிதை காண ஊக்கமான சூழலை உருவாக்கியது. குறிப்பாக, உலகம் முழுதுமே ஃப்ரீ வெர்ஸ் எனப்படும் தளையற்ற கவிதைகளின்…
கண்ணாடி முன்னால் அவள் நின்று உடைமாற்றிக் கொண்டிருந்த வேளை ஜன்னல் வழிக்கடந்தபோது, தேகம் சிலிர்த்து, அறிவு விதிர்த்து, சிறுவன் நான் சில நொடிகள் பார்த்த, செழித்திருந்த முலைகள் அல்ல இப்போது அம்மாவுடையது முழு உடலையும் துவளச் செய்திருந்த புற்றுநோயில் மெல் உடைகளையும் வேண்டாமென்று மறுத்து சாவின் வாயோடு, அம்மா தன் உதடுகளைப் பொருத்திக் குவித்திருந்தாள் அவள் அனுபவிக்கும் மரணத்திலிருந்து நான் தப்பிக்க, அவள் மரணத்தைச் சற்று தொலைவுள்ளதாக்க, அவளது மரணத்தை நான் சற்று கசப்பு குறைய விழுங்க…