வே.நி.சூர்யாவின் கவிதை உலகமும் சமகாலத் தமிழ்க் கவிதையின் புதிய எல்லைகளும். “கவிதை என்பது மொழியால் கட்டப்பட்ட வீடல்ல, மொழி மறைந்த பிறகும் வாசகருக்குள் தொடர்ந்து வாழும் அனுபவம்." கவிதை அனுபவத்தின் அழகியல் என்றாலும் கவிதை எப்போதும் கருத்தைச் சொல்வதை விடுத்து கவிதை நிகழ்வும் கணத்தை இன்னொருவருக்குள் நிகழ்த்துவதாக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்க் கவிதை குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது. தொண்ணூறுகளுக்குப் பிறகு உருவான கவிதைச் சூழல், மொழியின் அலங்காரத்திலிருந்து அனுபவத்தின் நெருக்கத்திற்கு நகர்ந்தது. அதே நேரத்தில்…
எரியும் பிணங்களின் அதீத வெப்பத்தில் கனன்ற சிதைகள் கங்கையின் முகத்தை என் பார்வையிலிருந்து ஓரளவு மறைத்தன. வேகமாகச் சேறு சுமந்து சுழலும் நீர் மிதக்கும் தீபங்களையும், நீராடும் உடல்களையும், சிதைந்த பிணங்களின் எச்சங்களையும், சதை, எலும்பு, சாம்பல் ஆகியவற்றையும் தன்னோடு சுழற்றிச் செல்கிறது. மணிகர்ணிகா படித்துரையில் புனிதமும் துர்நாற்றமும் கலந்த வாசனை வண்டல் மண்ணிலிருந்தும் மரச் சட்டங்களிலிருந்தும் மேலெழுந்து வருகின்றன. எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் மனித உடல்கள் மெல்லச் சிதைவடைகின்றன. அவற்றின்…
ஒரு கவிதை தொட்டுணரக்கூடியதாகவும், மௌனமாகவும் உருண்டு திரண்ட ஒரு கனியைப் போல் இருக்க வேண்டும் ஊமையாக, பெருவிரலின் வருடலால் தேய்ந்து மழுங்கிய பழைய பதக்கங்களைப் போல் இருக்க வேண்டும் மௌனமாக, பாசி படர்ந்த சன்னல் விளிம்புகளில் கைமுறிந்த கல்லைப் போல் இருக்க வேண்டும் ஒரு கவிதை பறவைகளின் பறத்தலைப் போல சொற்களற்றதாக இருக்க வேண்டும் * ஒரு கவிதை காலத்தால் அழியாததாக இருக்கவேண்டும் நிலவு மேலேறிச் செல்வதுபோல்.…
ஞாயிற்றுக்கிழமை இரவு அலாரத்தை வைக்கும்போதே திங்கட்கிழமையின் காலடியோசைக் கேட்டுவிடுகிறது. அதிகாலை ரயிலில் ஏறும்போதே எல்லோரும் ஏதோ ஒன்றை வீட்டிலேயே விட்டுவந்தவர்களைப்போல அமைதியாகக் குனிந்தபடி தங்களுடைய வாழ்க்கையைக் கைப்பேசித் திரையில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். காபிக்கடைகளில் கோப்பைகள் சூடாக இருக்கின்றன. அவற்றைப் பிடித்திருக்கும் கைகளில் ஞாயிற்றுக்கிழமையின் குளிர் இன்னும் மிச்சமிருக்கிறது. திங்கட்கிழமைகளில் நகரம் ஒரு பெரிய கடிகாரமாகிவிடுகிறது. மாலை வரைக்கும் எப்படியாவது சமாளித்துவிடென ஒவ்வொரு நிலையமும் ஒரு முள்ளாகி யாரோ ஒருவரின் நேரத்தைக் கச்சிதமாக நகர்த்திக்கொண்டிருக்கிறது. இந்தத் திங்கட்கிழமையை மிகவும் வெறுப்பவர்கள்…
துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் கொள்கலன் கப்பல்களைப் பார்த்து கடலில் மேயும் இரும்பு யானைகள் இவை என்கிறேன். உலகம் தின்று முடிக்க முடியாமல் கரையெங்கும் சிதறிக்கிடக்கும பேராசைகளின செவ்வக எலும்புகள் இவை என்கிறான். ரயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டில் ஏறியபடி இந்த நகரம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்கிறேன். நேற்றைய மனிதர்களின் தோல்களை உரித்துத் தைத்து தன்னையே இழுத்துச் செல்லும் நெடிய பாம்பு என்கிறான். அடுக்குமாடிகளின் ஒளிரும் சன்னல்களைப் பார்த்து தரையில் குடியேறிய விண்மீன்கள் இவை என்கிறேன். ஒவ்வொரு சன்னலுக்குள்ளும்…
1 மற்ற எல்லா இலக்கியப் படைப்புகளையும் விட வடிவில் சிறியதும் செறிவுள்ளதும் கவிதை. வாய்க்குள் வைத்துக்கொள்ளலாம் என்பதால் வலிமையும் அதிகம். கவிதைகள் பற்றிப் பேசுவதின் தகுதி, வரையறைகள், எல்லைகள் குறித்த குழப்பங்கள் எனக்கு இருக்கின்றன. கவிஞருக்கும் கவிதைக்குமான ரகசிய உறவை கண்டுபிடிப்பதா, புரிந்த கவிதைகளை வைத்துக்கொண்டு வியாக்கியானம் செய்வதா, இல்லை "இந்தாங்க, உங்களுக்கு ஒரு கவிதை" என்று எழுதியவர் கவிதையையே எடுத்து நெற்றியில் ஒட்டி விடுவதா என்றெல்லாம். யோசித்துப்பார்த்தால் கவிஞர் இசையின் கவிதைகளுக்கும் அவருக்குமான உறவு வெளிப்படை;…
1. அன்புமலர்
என் அம்மாவிற்கு இரண்டு கைகள் இருந்தன அவை, அடுப்பில் கொதிக்கும் எதையோ கிளறின முறத்தை ஆட்டியாட்டி பயிர்களைப் புடைத்தன தேங்காய் நாரினால் கிண்ணங்களைக் கழுவின ஊதா நிறத்துச் சோப்பினால் துணிகளைத் துவைத்தன மாவில் நீரூற்றிப் பிசைந்து உருண்டைகளாய் உருட்டின. என் அம்மாவிற்கு இரண்டு கால்கள் இருந்தன அவை வாசலுக்கும் கொல்லைக்குமாய் நடந்து நடந்து களைத்தன பித்தளைக் குடங்களை இடுப்பில் ஏற்றி ஏற்றி இறக்கின அவித்த நெல்லைக் கொட்டி சுற்றிச்…
1. மொழிபுரியாத நகரின் விடுதியில் சிறு காய்ச்சலோடு தனித்திருக்கிறேன். தலையணைகள், ஜன்னலோர புறாக்கள் தவிர யாருமற்ற சிறு அறை. கதகதப்பு தேடும் மாத்திரைகளில் தேறாத தனித்திருக்கும் உடல் இளஞ்சூடுட்டு பாதங்களை மெல்ல பிடித்துவிட்டபடி வாஞ்சையோடு இருப்பதான உன்முகம் நிழலாடுகிறது. நீயோ இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறாய். சரி, எப்போதும் போல அங்கிருந்தபடியே கைகளை நீட்டு, ஒரு பறக்கும் முத்தத்தை போல நானதை ஏந்திக் கொள்கிறேன். இன்றாவது வரட்டும் உன் வருகையை அறிவித்தபடி வீழும் வால்நட்சத்திர இரவு. …
1) வீடு கூர்ந்த மதியால் வெட்டவெளியை கொத்தி கொத்தி துண்டுகளாக உடைத்து ஒரு வீடு கட்டி வசிக்கிறேன் காற்றின் மூலக்கூறுகளின் மேல் அமர்ந்து வரும் அழகிய தேவதைகள் மட்டும் அங்கு வந்து போகிறார்கள் 2) குமரிக்கண்டம் கடலின் மேற்பரப்பில் நகரும் வீக்கத்தை அலைகள் என்று நாம் சொல்லலாம் கடல் தான் சொல்ல வேண்டும் காற்றிடம் எவ்வளவு அடிபட்டது என்பதை கடல் வாழ் உயிரினங்களின் ஆன்மாவும் தலையாட்டி பொம்மைகள்…
அமெரிக்கக் குடியிருப்பொன்றின் ஆளரவமற்ற தெரு மௌனத்தை மென்று உமிழ்ந்து துப்பிய எச்சில் தெறிப்பில் எப்போதும் சாத்தியே கிடக்கும் எதிரெதிர் வீட்டுக் கதவுகள். சாளரத் திரைகளைத் திறக்க முயன்று தோற்று முகம் சிவந்த சூரியன் மேற்கே நகரும் சந்தடியற்ற அந்திப் பொழுதொன்றில் மனித சஞ்சாரம் குறித்த சந்தேகத்துடன் மனம் எட்டியெட்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில் வாலை ஆட்டிக் கொண்டு வந்த நம்பிக்கை செல்லக் குலைப்புடன் நகர்ந்து போனது உடன்…

