Skip to content Skip to footer

Blog Classic

இன்பா கவிதைகள்
1 வெள்ளிக்கிழமை மதியம் தனிமைப் பொழுது மெல்ல ஓய்வு கேட்டு மந்த நடைபோடுகிறது உடலற்ற கபாலத்தைத் திருகி ஒளிச்சிதறல்களுக்கிடையே இழுத்துப்பிடித்து வேலையை முடிக்கிறேன் வாரத்தின் ஐந்து நாட்களும் ஓநாய் தினங்களாகி இருபத்து நாலுங்கீழ் ஏழு பொழுதும் ஒளியின் முடிச்சிக்குள் புதைகிறது விழிகள் நடு இரவு உடைந்துபோகிறது பகலை மீண்டும் மிதித்து கணிப்பொறியில் சிக்கிச் சிதறி உதிரவெளியெங்கும் விரல்களில் சுருக்கம் கண்ணாடிக்குள் ஆடும் பொம்மையாய் எஞ்சியிருக்கும் தலை எதற்கென்று தெரியாமலே ஆடுகிறது ஞாயிறு…
நகுலன் விட்டுச்சென்ற வழிகள்
எல்லாமே வெகு எளிமையாகத்தான் இருக்கிறது ஆனால் எல்லாம் என்பதுதான் என்ன என்று தெரியவில்லை. - நகுலன் ( எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை ) 1980, மே மாதம், திருவனந்தபுரம், கவடியாரிலுள்ள அவரது வீட்டில் நகுலனைச் சந்தித்தேன். அது முதல் சந்திப்பு. அன்றிலிருந்து 2007 மார்ச் வரையான கால அளவில் வெவ்வேறு இடைவேளைகளில் ஏழு முறை அவரைச் சந்தித்தும் பார்த்துப் பேசியும் இருக்கிறேன். பின்னர் யோசிக்கும் போது மறந்து விடமுடியாதவையான உரையாடல்…
நாரணோ ஜெயராமன் கவிதைகள்
நாரணோ ஜெயராமன் கவிதைகள் நாரண ஜெயராமன் தனது அனுபவத்தின் உள்ளுணர்வினை மனத்துள் நிரப்பிக்கொண்டு சுயத்தைக் கண்டறியும் ஆவலோடு புது உக்கிரம் பெற்ற கவிதைகளைப் படைத்துள்ளார். அன்றாட வாழ்வியல் குறித்து தனது பார்வையை எளிமையான வரிகளில் சொல்லப்பட்டிருந்தாலும் அதனுடைய பொருள் திண்மையாக இருக்கிறது. மென்மையான உணர்வுகள் ஆதங்கமாக இயல்பாக அவரது கவிதைகளில் வெளிப்படுகிறது.  சமீபத்தில் காலமான நாரணோ ஜெயராமன் அவர்களுடைய ஒரு சில கவிதைகள் 1. அநாதார ஜீவி என் முதுகின் பின்னால் மின்விசிறி இரைகிறது இரைச்சல் …
ப.அ.ஈ.ஈ அய்யனார் கவிதைகள்
1 ஊருக்கு தெக்க ஒசந்திருச்சு கட்டிடம் ஒத்தப்பனையெல்லாம் செத்தப்பனையாச்சே ஊத்துப் போன வாய்க்காலும் நாத்துப் பாவிய நெல்வயலும் வித்துப் போச்சே விலைமகனுக்கு களையெடுத்த கைகளை கனலிட்டு சுட்டுவிட்டான் கார்ப்பரேட் நலவாதி... அரமரக்கா நெல் வெதச்சு ஆடயுங்கோடயும் கதிரறுத்து ஆதிக்கும் அய்யனுக்கும் படியளந்து கையெடுக்கும் சிற்றூரைச் சிதைத்துவிட்டான் சிங்காரக் கோமாளி... நான் பார்த்த நடுகையும் குலவைச் சத்தமும் குத்துக்காலிடும் நாற்று முடிகளும் பூசிமெழுகிய வரப்பும் சாம்பல் நாரையும் சில்வண்டும் சிவந்த அரிவாள் நண்டும் நீர்த்தும் நத்தைக் கவுச்சியும் மீன்…
சரவணன் மாணிக்கவாசகம் – நூல் அறிமுகம்
தப்பரும்பு - ப்ரிம்யா கிராஸ்வின் தமிழ்க்கவிதைகளில் புரிதல் எவ்வளவுக்கு எவ்வளவு வாசகர்களுக்குக் குறைகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு சிறந்த கவிஞர் என்று யார் முதலில் சொன்னார்கள் தெரியவில்லை.  எளிமை என்பது வேறு, அழகியல் என்பது வேறு, நுட்பம் என்பது வேறு.  ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. நூலின் முதல் கவிதையே அட சொல்ல வைக்கிறது.  பருந்து - வாழ்க்கை, பறத்தல்- பாடம், குஞ்சு-  வானத்தில் சிறகடிக்கத் தெரியாது தத்தளிக்கப் போகிறது. குஞ்சுகள் எப்படியும் காயமின்றி பறத்தலையா கற்றுக் கொள்ளும், நாம் தான் காயப்பட்டு, தழும்பை வருடிக்கொண்டே காலத்தைக் கழிப்பது. "…
சித்துராஜ் பொன்ராஜ் கவிதைகள்
விரைவில் வெளியாகவிருக்கும் ‘தலையில் பிறைசூடிய பெண்கள்’  கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்) 1 வார்த்தைகளை மலர்த்தண்டுகளாய் வழவழப்பாக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் இந்தச் சாகசம் கைவரும் - ஒரு கொத்து வார்த்தைகளை அடியில் சிவப்பு நிற ரிப்பன் கட்டியும் நீர்க்கோலங்களாய் ஒரு தாளைச் சுற்றியும் நீட்டுவது, என்னவோ சுலபம்தான். மலர்த்தண்டுகளை மேலிருந்து கீழாய் குறுக்க வெட்டியதால் ஏற்பட்ட தழும்பின் சொரசொரப்பு இன்னமும் கைகளில் ஒட்டிக் கொண்டிருப்பதால் கேட்கிறேன்: தவறாகப் போனது வெட்கத்தில் தலைகுனிய ஆரம்பித்திருக்கும் தண்டா, ஒரு துண்டுச் சதைபோன்ற…
வேல்கண்ணன் கவிதைகள்
காலாவதியான கடவுச்சொல் சமீபத்தில் பிரிந்த  காதலியின் பிறந்தநாளை  கடப்பது குறித்து நள்ளிரவு கவிஞனின் கையேடுகள்  ஏதேனும் கிடைக்கிறதா? அடுத்த வருடத்திற்குள் நேற்றிலிருந்து நாளைக்குத் தாவுவதற்கு  மந்திரம் கற்க வேண்டும். வலியோடு முறியும் மின்னலை இணைக்க வழியேதும் உண்டாவன  பிரான்சிஸ் கிருபாவிடம் கேட்டிருக்க வேண்டும் தனித்துக் கிடப்பது குறித்தெல்லாம் ஏகப்பட்ட குறிப்புகள் பெருகிக் கிடக்கின்றன. முதல் கலவியின் பின்னணியில் ஒலித்த  பாடல் கேட்க நேரும்  தருணங்களைக்  கடக்க உதவும் கடவுச்சொல் காலாவதியானதொரு நாளில் கிடைக்கிறது. வளரும் புத்தர் வரவேற்பறையில் கையளவு  சட்டகத்தில் இமைகள் மூடி புன்னகைக் குமிழ ஒளி…
இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்
விடம்பனக் களிறு   மூங்கிற் புல்லை பாங்குற தறித்து வாங்கிய பரணில் தினைபுனம் காக்கும் சேனோன் வானுற விளைந்த காட்டுயானமும் கருவுப்பரிசியும் சிதையக் குலைக்கும் களிறுகளை சிதைத்த கதை இது இதை நான் உங்களுக்குச் சொல்வேன் என்றான் சூதன்   (வேறு) பெரும் பசிகொண்ட மதயானை ஒன்று ஆரண்யத்தில் நுழைந்தது தன் வசந்தத்தில் தழைத்திராத முதிரா வனம் தத்தளித்தது அவன் கபிலன் மண்ணின் வண்ணத்தையும் மண்ணுண்டு திரண்ட மரத்தின் இளந்தளிர் வண்ணத்தையும் மேனியில் கொண்டவன் நிழலாய்…
மேரி ஆலிவர் – மொழிபெயர்ப்புக் கவிதைகள்
1.மரங்களைப் பற்றிய கனவு என்னுள் உள்ள ஒன்று மரங்களைப் பற்றிக் கனவு காண்கிறது. அமைதியான வீடு, கொஞ்சம் பசுமை, ஓரளவு இடம் தொல்லைப்படுத்தும் நகரத்தின் சலம்பல்களிலிருந்து கொஞ்சம் தள்ளி.. தொழிற்சாலைகளிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும் சற்றே விலகி.. எனது வாழ்விலிருந்து சில கட்டற்ற சரணங்களையாவது உருவாக்குவதற்கு ஓடைகள் மற்றும் பறவைகளின் துணையுடன் மட்டுமே செலவிடுவதற்கு எனக்கு நேரம் கிடைக்குமென்று நினைக்கிறேன். எங்குமிருந்தும் சற்று தள்ளிய அந்த இடத்தில் அப்போது என்னிடம் வரவேண்டும் அது, அதுதான் மரணம், என்னுள் உள்ள…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]