1.மரங்களைப் பற்றிய கனவு என்னுள் உள்ள ஒன்று மரங்களைப் பற்றிக் கனவு காண்கிறது. அமைதியான வீடு, கொஞ்சம் பசுமை, ஓரளவு இடம் தொல்லைப்படுத்தும் நகரத்தின் சலம்பல்களிலிருந்து கொஞ்சம் தள்ளி.. தொழிற்சாலைகளிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும் சற்றே விலகி.. எனது வாழ்விலிருந்து சில கட்டற்ற சரணங்களையாவது உருவாக்குவதற்கு ஓடைகள் மற்றும் பறவைகளின் துணையுடன் மட்டுமே செலவிடுவதற்கு எனக்கு நேரம் கிடைக்குமென்று நினைக்கிறேன். எங்குமிருந்தும் சற்று தள்ளிய அந்த இடத்தில் அப்போது என்னிடம் வரவேண்டும் அது, அதுதான் மரணம், என்னுள் உள்ள…
மதுரா
1 article published