பொம்மி என்ன பெயர் அது யாரின் பெயர் அது என எப்போதுமான கேள்வி ஒன்று என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது இனிமேலும் ஓட முடியாது ஓடுவதற்கு தூரமும் கிடையாது ஒரு குழந்தையை நீங்கள் எப்போது தூக்கிக் கொஞ்சினீர்கள் எப்போது கண்டித்தீர்கள் எப்போது குதிரை ஏறி விளையாட்டு காட்டினீர்கள் எப்போது சிரிக்க வைத்தீர்கள் உங்கள் உள்ளங்கை குழந்தையின் சூட்டை எவ்வளவு நேரம் சேமித்தது எனக்கு இன்றுவரை அது சேமிப்பிலேயே இருக்கிறது கூடவும் இல்லை குறையவும் இல்லை கொஞ்சமும் மாறாத…
Harlem-இல் லோர்கா ஒரு கறுப்பனின் மரணத்திற்கு ஃப்ளெமெங்கோ பாணி பாடல்.. இந்த நகரம் என்னும் கைத்துப்பாக்கி உன்னையும் என்னையும் நிரந்தரமாய்க் குறிபார்த்தபடி இருக்கிறது. நல்லதொரு கைத்துப்பாக்கி அமைவதைப் போலவே கைக்கு வாகாய் ஒரு நகரமும் எல்லோருக்கும் அமைவது அவசியம், ஒரு நாத்திகனுக்கு எதிர்ப்பதற்கு வாகாய் ஒரு கடவுள் அமைவதுபோல் - என்னைக் கொலை …
கோப்பத்தை நான் விசர் பிடித்து உழத்துகிறேன் பாலியத்தின் மையத்தில் மோதுண்டு எழும் பேய்க்காற்று என்னை உசுப்பி உசுப்பி என் கமுகிலிருந்து பாக்கும், கோப்பத்தையும் கொட்டுகின்றன சாமத்தியக் குடத்திலும் கண்ணகியின் மடையிலும் விரிந்திருந்த கமுகம் பாளைகள் மின்னி மின்னி பூச்சியாய் பறக்கின்றன ஓம் என் சூத்து தேயுமட்டும் கிறவல் றோட்டில் இழுபடும் கோப்பத்தை எனக்குள் விரிந்து விரிந்து மண்டைக்குள் உராய்ந்து என் காதோரமாய் கிணுகிணுக்கின்றன எங்கள் ரயில் வண்டியில் பின்பக்கமிருந்த குமாரி குடைசாய என்…
Global Similarities
Translated by Fan Jinghua
One thousand and one nights of the Grand Master’s
Supplemented with numerous screens
The calculable everydayness of his
Has a great variety of patterns
With the same themes or motifs
Weaving a hundred-pieced quilt for the audience
And inside
Always the same way is used
To envelop the fantasy of a youngster
And roll it…
”பெண் தன்னை எழுதுதல் வேண்டும். பெண்களைப் பற்றி எழுத வேண்டும். பெண்களை எழுத்தின்பால் கொண்டுவர வேண்டும். பெண் தனது சொந்த இயக்கத்தின் மூலம் பிரதிக்குள் தன்னை வார்க்க வேண்டும்; இந்த உலகத்திலும் சரித்திரத்திலும் தடம் பதிக்க வேண்டும்.” - ”Laugh of Medusa”, Helene Cixous, 1976: p.875. பிரான்ஸியப் பெண்ணிய ஆளுமையான பேராசிரியர் Helene Cixous தனது "The Laugh of the Medusa" எனும் புகழ்பெற்ற கட்டுரையில் பெண் எழுத்தின் இயங்கியல் குறித்து, ”அவள் தன்னைத்தானே…
இலங்கைப் பெண்களின் கவிதைகள் என்றால் அதில் தனியே தமிழ்க் கவிதைகளை மட்டும் கொள்ள முடியாது. சிங்களக் கவிதைளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் எடுத்துப் பேசும்போதுதான் இலங்கைப் பெண்களின் கவிதைகளைப் பற்றிய சித்திரம் கிடைக்கும். இரண்டு மொழிச் சூழல்களிலும் உள்ள சமூக, அரசியல், பண்பாட்டு நிலைமைகள் புலப்படும். இரண்டிலும் நிறைய வேறுபாட்டம்சங்கள் உண்டு. ஏன் தமிழில் கூட நிறைய வேறுபடுதல்கள் உள்ளன. முஸ்லிம் பெண்களின் கவிதைகள் வேறொன்றாகத் தனித்து நிற்கும். அதைப்போல மலையகப் பெண் கவிதைகள் இன்னொரு…
ஒரு நூற்றாண்டைக் காணப்போகும் புதுக்கவிதை, நவீன கவிதை வடிவத்தில் குறிப்பிட்ட சாதனையை நிகழ்த்திய கலைஞர்களின் படைப்புகளை என்னளவில் தொகுத்துக் கொள்ளும்போது அவர்களது மரபையும் சேர்த்துத் தொகுத்துக் கொள்வது அத்தியாவசியமான பணியாகவே தோன்றுகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தனித்துவத்தையும், அலாதிக் குணத்தையும் தக்க வைத்திருக்கும் ஸ்ரீநேசனின் மூன்று கவிதைத் தொகுப்புகளையும் சேர்த்து வாசிக்கும்போது என்ன மரபில் அவர் கிளைத்திருக்கிறார் என்று மெல்லிசாகத் தெரிய வருகிறது. நகுலன், ஆனந்த், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், அபி ஆகியோர் உருவாக்கிய சாரமான ஒரு கவிதை…
உங்களுக்காக நான் உங்களுக்காக கரைகிறேன்
முற்றும் முழுதும் உங்களுக்கே
என்னைப்போல் உங்களுக்காய் யாருமில்லை
என்னையும் நீங்கள் விட்டுக்கொடுத்ததில்லை
உங்கள் பெற்றோரும் உடன் பிறந்தோரும்கூட என்னைப்போல் கரைந்ததில்லை
உங்களுக்காக கரைவதற்காகவே நான்
ஒவ்வொரு நாளும் கரைவதற்குக் காத்திருப்பதும் நான்தான்
என்ன? இப்பொழுதாவது கரைகிறதா உங்கள் மனம்?
தொஷ்டா! நீ அழைத்தால் என்னால் வராமல் இருக்க முடியாது என் கண்களைக் குருடாக்கிக்கொள்கிறேன் காதுகளை பழுக்கக் காய்ச்சிய கம்பிகளால் செவிடாக்கிக்கொள்கிறேன் என் இதயத்தைப் பிய்த்து நாய்களுக்கு வீசுகிறேன் அப்போதும் உன் குரல் எனக்குக் கேட்கிறது உன் உருவம் எனை அழைக்கிறது உன் காதல் எனைத் தொடுகிறது மலைகளில் திரளும் வெள்ளம் பள்ளத்தாக்குகளில் பாய்வது போல் விண்ணுக்கு எரியப்பட்ட கல் பூமிக்கு இழுக்கப்படுவது போல் நான் உன்னால் அழைக்கப்படுகிறேன் கதியற்று வருகிறேன் மீண்டும் மீண்டும்
பொது யுகம் 2536 அந்த மூத்த எழுத்தாளர் நேர்காணலில் அமர்ந்திருக்கிறார் கடந்த காலத்திலிருந்து யாரையாவது திரும்ப அழைக்க நேர்ந்தால் யாரை அழைப்பீர்கள் அவர் சற்றும் யோசிக்காமல் சொல்கிறார் 1996ல் இறந்து போன என் மனைவி ஒரு கணம் நிசப்தம் மறுகணம் அவர் மனைவி தோன்றுகிறார் இது எப்படி சாத்தியம் அன்பே எழுத்தாளர் தழுதழுக்கிறார் உன்னால்தான் அன்பே இருவரும் தழுவுகிறார்கள் கொட்டும் மழையில் வானில் நீந்திச் செல்கின்றன இரு தங்கமீன்கள் ஒன்றை ஒன்று…