1.மரங்களைப் பற்றிய கனவு என்னுள் உள்ள ஒன்று மரங்களைப் பற்றிக் கனவு காண்கிறது. அமைதியான வீடு, கொஞ்சம் பசுமை, ஓரளவு இடம் தொல்லைப்படுத்தும் நகரத்தின் சலம்பல்களிலிருந்து கொஞ்சம் தள்ளி.. தொழிற்சாலைகளிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும் சற்றே விலகி.. எனது வாழ்விலிருந்து சில கட்டற்ற சரணங்களையாவது உருவாக்குவதற்கு ஓடைகள் மற்றும் பறவைகளின் துணையுடன் மட்டுமே செலவிடுவதற்கு எனக்கு நேரம் கிடைக்குமென்று நினைக்கிறேன். எங்குமிருந்தும் சற்று தள்ளிய அந்த இடத்தில் அப்போது என்னிடம் வரவேண்டும் அது, அதுதான் மரணம், என்னுள் உள்ள…
சொல்லால் முகிழ்க்கும் பித்து உனக்கும் எனக்கும் இடையில் கண்ணே எந்தத் தருணத்தில் எப்படி நிகழும் அது மார்க்கமில்லாதது அபாதா அது வரம்பில்லாதது அனந்தகோரா அது நிறமில்லாதது தயாபரா யாருடையது இந்த எதிர்க்குரல் எங்கிருந்து வருகிறது அது என்னைச் சுற்றி எல்லாம் ஆவியாகிக்கொண்டிருக்கிறது என் பகற்கனவுகள் என் கற்பனைகள் என்னுள் பிளவுபட்ட ஆளுமைகள் என் உறவுகள் என் நட்புகள் எல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன நான் அவளையே நம்பியிருக்கிறேன் நான் அவளை நோக்கி எழுப்பும் கேள்விகளுக்கு நீ இடைமறித்து இறைவனை…
அது ஒரு குளிர்ந்த இரவின் சாகசப் பிழை கலைத்துவிடலாமென்கிறான் நீ ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறாய் தெருவில் மழைநீர் சிறு குட்டைகளாகத் தேங்கிக்கிடக்க, இரு நாய்கள் ஓடுகின்றன எங்கே ஒடுகின்றன அவை? நீ இருக்கும் உணவகத்தின் அறைக்குள்ளே பளபளக்கும் அலுமினிய புகைபோக்கிக்குக் கீழே அடுப்பில் உரித்த கோழியை வெட்டுகிறான் வெள்ளைத் தொப்பி அணிந்த சமையற்காரன் கண்ணாடி அறைக்குள் எல்லோரும் பார்க்கும்படி நிற்கிறான் நீ சாக்லேட் மடக்கிய தாளில் என்ன பொன்மொழி எழுதியிருக்கிறது என வாசிக்கிறாய் “பிரபஞ்சம் முழுவதும் யாவும்…
இப்போதெல்லாம் எவ்வளவு தாகமாய் இருக்கிறது தெய்வீகக்காதல் கதையொன்றைக் கேட்பதற்கு ஆனாலும் இரவின் நிறம் அடரும் சுவர்களுக்குக்கூட உன்னையும் என்னையும் பற்றி நான் ஏன் சொல்லக் கூசுகிறேன் ஒரு இரகசியம் நழுவி நோக்கமற்ற குமிழியாய் உடைந்து வர்ணஜாலமிழக்கும் நீர்த்திவலைகளாவதை நான் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது உன் கூந்தலின் வருடலில் என் மார்க்காம்புகள் சிலிர்த்ததை யாருக்கு நான் சொல்ல வேண்டும் யாருக்கு நான் சொல்லமுடியும் நள்ளிரவில் வரும் உன் தொலைபேசி அழைப்புகள் கூட நம்முடைய உன்மத்த கூடலையே ஒத்திருக்கின்றன சொற்களால்…
ஆயிரமாயிரமானோர் கூடிக் கலையும் ஊஞ்சல் மண்டபத்தில் சமநிலை எங்கேயிருக்கிறது ஆயிரமாயிரமான கதாபாத்திரங்கள் கதைகளாகும் யாளித் தூண்களின் நடுவே சம நோக்கு எங்கேயிருக்கிறது யாரை நோக்கி இந்தக் கேள்விகளைக் கேட்பேன் நான் யாரிடமிருக்கிறது சமநிலைக்கான அக்கறைகள் என் கன்னக்கதுப்புகளில் துறவறத்தின் ரேகைகள் தோன்றிவிட்டனவா நீ அடையாளம் கண்டுவிட்டாயா நான் எப்போதுமே மண்டபத்துக்கு வெளியில் நிற்பவன்தானே இறைவனின் கல்யாண கோலமும் கூட்ட நெரிசலும் கலைய எப்போதும் காத்திருப்பவன் நான் முதலில் வருபவன் என்றாலும் கடைசியில் தாமதமாய்ச் சென்றடைபவன் எல்லாவற்றிலும் தாமதம்…
எங்கும் வியாபித்திருக்கும் தூசு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் படிந்திருக்கும்போது அதில் நீ உன் ஆட்காட்டி விரலால் உன் காதலியின் பெயரை எழுதுகிறாய் தூசில் தொடங்கி தூசில் முடியுமென்ற விவிலிய வாசகத்தில் தூசில் எல்லாம் முடிவதை நீ அறிவாய் ஆனால் தூசில் எது எப்படித் தொடங்கியது என்பதை எவ்வாறு நீ அறிவாய் எங்கோ ஒரு இடத்தில் மேகம் வடிகட்டிய ஒற்றைக் கிரணத்தில் ஒளித்தூசுக் கற்றையுனுள் ஆங்காங்கேயுள்ள வெற்றிடத்தில் அவள் உன் பெயரை எழுதி எல்லாவற்றையும் ஆரம்பித்திருக்கக்கூடும் இல்லை நிறைமதியின்…
என்ன நாள், என்ன மணி என்ன மணி, என்ன நிமிடம் என்ன நிமிடம், என்ன நொடி என்ன நொடி குதிரையின் மூச்சிரைப்பு காற்றில் கனமாகக் கலந்திருக்கிறது ஈரப்பதம் நான் ஏன் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்? நான் ஏன் ஒரு மூலையில் சுருண்டு படுக்கலாகாது? மழை மரம் காற்று என நான் ஏன் பார்த்திருக்கலாகாது? மாதுளம் பழங்கள் ஏற்கனவே உடைந்து பிளந்திருக்கின்றன கடலோ காற்றின் விதிகளால் போட்டிகளைப் பொங்கிப் பொங்கி அணைத்துக் காட்டுகிறது சுழலுறு கடலே சுழலுறு உன் ஆழ்கடல்…
மாத்ரி மகாபாரதத்தில் பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுலன், சகாதேவன் ஆகிய இரட்டையருக்குத் தாய். குந்தியின் தேவர்களை வரவழைக்கும் மந்திரத்தைக் கடன்பெற்று அஸ்வினிதேவர்களாகிய இரட்டையர்களை அழைத்து நகுலன், சகாதேவனைப் பெற்றெடுத்தாள். மாத்ரி பேரழகி. பாண்டுவுக்கு மனைவியோடு உறவு கொண்டால் மரணம் சித்திக்கும் என முனிவர் சாபம் இருந்தது. மாத்ரியின் அழகில் பித்தமேறிய பாண்டு அவளோடு உறவு கொண்டு மரணமடைந்தான். மாத்ரி தன் குழந்தைகளை குந்தியிடம் ஒப்படைத்துவிட்டு பாண்டுவோடு உடன்கட்டை ஏறினாள். மாத்ரி உன்னிடமில்லாமால் வேறு யாரிடம் சொல்வது என்…
1.மதமரபின் அந்தங்களின் அரசியலும், எதிர்மரபினரின் சிறப்பியல்பு அறியொணாத் 'தாரை வார்ப்பும்'! எங்கே சமயம் முடிவடைகின்றதோ அங்கே ஆரம்பிக்கும் ஆன்மிகமான சமயத்தன்மையே சித்தரியமாம். சமயஞ் சார் பக்தியியக்கம் இறைஞானத்தின் (Theology) பாற்பட்டதெனில், சமயஞ்சாரா சித்தநெறியோ மறைஞானம் (Mysticism) சார் மனிதாயச் சிந்தனைப்பள்ளி எனலாம். அவ்வச் சமயிகள் போல் அல்லாமல் சித்தர் யாவரும் ஒரே படித்தானோர் அல்லர். ஒரே படித்தானவை அல்லாமல் விதந்தோதிக் காணவேண்டியஅடிப்படை முரண்பாடுகள் மூவகைத்தாம்: 1.மத அத்துக்கள் × இறையியல், 2.முன்னைச்சிவசித்தர் திருமூலர் ×…
கவிஞர் கலாப்ரியாவின் கவிதை ஆளுமையும் அவரது கவிதை உலகமும் படைப்புலகம் அறிந்ததாக இருந்தாலும், சக கவிஞர்களின் கவிதைகளின் மீதான பார்வையையும், அவரது ரசனையையும் அறிந்துகொள்வதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதைகள் உதவுகின்றன. கலாப்ரியா ரசித்த கவிதைகளை திணைகளில் பகிர்ந்துகொள்கிறார். உள்ளடக்கம், வெளியீடு, கருத்தியல் என எந்தச் சார்புமில்லாமல் தான் ரசித்த கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்துள்ளார். இக்கவிதைகள் கலாப்ரியாவின் சிந்தனைப் பிரதியாக வந்துள்ளது. அவரது தேர்வு பொதுவானதாகவே இருக்கிறது, தனது கண்ணோட்டத்தில் ரசித்தவற்றில் சிறந்தவையாகக் கருதுபவையாக ஒரு சிலவற்றை…