நல்ல தூண்கள் - மேகி ஸ்மித் வாழ்க்கை குறுகியது, ஆனாலும் நான் இதை என் குழந்தைகளிடம் சொல்லாமல் தவிர்த்துவிடுகிறேன். வாழ்க்கை குறுகியது, நான் என்னுடையதை ஆயிரக்கணக்கான சுவையான, தப்பான ஆலோசனைகளின் வழிகளில் குறுக்கிவிட்டேன். ஆயிரக்கணக்கான சுவையான, தப்பான ஆலோசனைகளின் வழிகளில் என் குழந்தைகளிடம் சொல்லாமல் தவிர்த்துவிடுகிறேன். உலகம் குறைந்தபட்சம் ஐம்பது சதவீதமாவது கோரமானது. அதாவது, ரொம்பவும் குறைவாகவே மதிப்பிட்டால். ஆனாலும் நான் இதை …
லல்லா கவிதைகள்
(1)
தென்புல மேகங்களை
கலைந்தோடச் செய்வேன்.
கடலை வற்ற வைக்கவும்
கைவிடப்பட்ட நோயாளியைக்
குணப்படுத்தவும் கூட
என்னால் ஆகும்.
ஆனால், ஒரு முட்டாளின்
எண்ணப்போக்கை
மாற்றுவதென்பதோ
என் சக்திக்கும் அப்பாற்பட்டது. (2)
விளையாட்டாக
என்னிடமிருந்து நீ
ஒளிந்துகொள்கிறாய்!
நாள் முழுவதும்
நான் தேடுகிறேன்
பிறகு,
நானேதான் நீயென்பதை
அறிகிறேன்.
அந்தக் கொண்டாட்டம்
இப்போது
ஆரம்பித்துவிட்டது. (3)
பொதுச்சாலை வழியேதான் வந்தேன்
ஆயினும் அதன் ஊடாகத் திரும்பிப் போகவியலாது
பயணத்தின் நடுவே
பாதிவழியில் நிற்கிறேன்.
பகல் முடிந்து இரவு தொடங்குகிறது.
எனது பைகளைத் துழாவுகிறேன்
ஒரு நாணயமும் கிடைக்கவில்லை,
பயணச் செலவிற்கு
எதை நான்
பகிர்ந்தளிப்பேன்? • லல்லா என்கிற லல்லேஸ்வரி இந்திய பக்தி மரபை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராவார். காஷ்மீரில் உள்ள பாண்டிர்தன் என்கிற சிற்றூரில் 1320 ல் பிறந்த இவர்,…
பெண் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் ஆணின் ஒரு கேள்விக்கு பெண்ணிடம் பல பதில்கள் உள்ளன கேட்பவர் யாரென்றறிந்த பிறகு அவள் பதிலை வெளிப்படுத்துகிறாள் அப்பெண் ஓர் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் அவனைக் காதலிப்பதாக நம்ப வைப்பதுதான் பிறகு ஆணின் உடலுக்கு ஒரு மலரின் இயல்பு வந்துவிடுகிறது அது மலரும் உலரும் உதிரும் அதற்குள் பெண் மிக நீளமான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பாள் அவனைக் காதலிக்கவும் அல்லது…
1
ஆடுகள் வலசை போகையில்
குட்டிகளை ஈன்றுவிட்டால்
இடையனுக்குச் சுமை தெரியாது
மாடுகள் காளைக் கன்றுகளை ஈன்றுவிட்டாலும்
சுமையாகத் தெரியாது
இதோ இந்தக் கராமறையாடு
வலசை போகையில் ஈன்றது என்றும்
இதோ இந்தக் கிளிக்கொம்பாடு
அந்தி மறைகையில் ஈன்றுது என்றும்!
இதோ இந்தக் காரிக்காளை
ஒரு மதிய நேரத்தில் உச்சிவெயிலில் பிறந்ததென்றும்
நினைவில் வைத்துக்கொள்வான்
சுமை யெல்லாம்
நீரின்றி வறண்டு கிடக்கும்
இந்தக் குளத்திலும்
வாடிக் கிடக்கும் அந்த
நிலத்திலும் தான்
2
இடைச்சியே வா…!
வந்த பாதையை நோக்கித் திரும்பப் போவோம்.
நாம் போக வேண்டிய பாதை இதுவல்ல.
வழியில் எங்காவது ஆலமரமோ
ஐயனாரோ இருந்தால்
காட்டுப்பேச்சி சாட்சியாக
மீண்டும் திருமணம் செய்து கொள்வோம்
மை போலிருக்கும் கருவிளம் பூக்களை…
சிள்வண்டுகள் இரவின் காலிக்கோப்பையை குளிர் நிரப்பும் நேரம் அனைத்தும் மிகத்தொலைவில் விலகி இருக்கின்றன அதிகம் நோயுற்றுவிட்டதாய் பூமி அலுத்துக்கொள்கிறது அனைந்த நட்சத்திரங்கள் நங்கூரமிட்ட படகு மற்றும் உன் சோபிதம் நிரம்பிய கண்கள் சம்மதத்தின் துயரமானது பூமியின் நாட்பட்ட கடமைகளைக் கொண்டிருக்கும் போது வானில் விசிறி எறிந்தேன் ஒரு பிடிபட்டபறவையைப் போன்ற என் காதலை தப்பிச்செல்லும் உன் குதூகலம் அல்லது ஒரு கூர்நகக்கீறல் உன்பாதங்களைக் குறுக்கும் வழிநடையில் அல்லது மீன்களுக்கான கனவில் பூனைகள் சோம்பலிடும்…
அறிமுகம் எளிய அழகிய மொழியில் விடியலைத் தேடியபடி ஆரம்பமாகிறது, ‘கடல் முற்றம்’. சென்னை மோக்லி பதிப்பக வெளியீடாய் கிண்ணியா எஸ். பாயிஸா அலியின் 50 கவிதைகளின் தொகுப்பாய் 2017 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. கவிஞர் அனாரின் கனதியான முன்னுரையுடன் வெளிவந்த இந்நூலை முஹம்மத் முஸ்டீன் - ஷாமிலா ஷெரீஃப் முஸ்டீன் தம்பதியர் தமது ஷெய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்தத் தயாரிப்பகத்தின் (SIM Production) மூலம் கொழும்பில் மிகவும் விமரிசையாக வெளியிட்டு வைத்தார்கள். ஃபாயிஸா அலி பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியை, கவிதாயினி,…
முல்லை நில மக்களின் வாழ்வியலைச் சொல்லும் முல்லைக்கலியில் எருமைகளை வளர்ப்பவர்களை ‘கோட்டினத்தார்’, பசுவை வளர்ப்பவர்களை ‘கோவினத்தார்’, ஆடுகளை வளர்ப்பவர்களை ‘ஆட்டினத்தார்’ என மூன்று வகையான ஆயர்ச் சமுதாயம் இருந்ததாகச் சங்க இலக்கியம் சொல்கிறது. நீட்டுரமும் தேட்டுரமும் நெல்லுரமும்
ஆகையினால் ஆட்டுரமும் மாட்டுரமும்
வயலுரங் காண் ஆண்டே என்ற பாடலில் ஆடு மாடுகளின் கழிவுகளை உழவு நிலத்திற்கு உரமாகப் பயன்படுத்தினார்கள் என்கிறது சங்கப் பாடல். கி.ராவின் மிகச்சிறந்த படைப்பான கிடை என்னும் குறு நாவல் இடையர் இனத்திற்கிடையே உள்ள சமூக உறவுகளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் நுட்பமாகப்…
அவனது வாகனத்தை தேர்ந்தெடுக்கிறோம் முன்னரே வந்த எதிரொலியின் சாயலில் இடர்பாட்டின் வண்டியில் சுற்றிச் சுற்றி வீசப்படுகிறோம் காட்டுப் பூக்கள் கீதமிசைக்கும்போது நாங்கள் அந்தக் கீதங்கள் வழியாக நடக்கிறோம் சூரியன் நீண்ட நிழல்களைப் படர்த்தும்போது ஓடையில் இருந்து பருகும் கனவுகளை கனவுகாண்கிறோம் இலையுதிர்காலத்தில் இலைகள் உதிர்ந்து விழும்போது குளிர்காலத்தின் வண்டியில் நெருங்கி ஒருவரையொருவர் கேட்கிறோம் நாம் ருசிப்பது வாழ்வின் வசந்தம் நாம் வாழும் வாழ்வோ அவசரம் அவனது வண்டியில் நாம் சவாரி செய்கிறோம். மரணத்தின் வண்டி அது வண்டியோட்டியின்…
பொம்மி என்ன பெயர் அது யாரின் பெயர் அது என எப்போதுமான கேள்வி ஒன்று என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது இனிமேலும் ஓட முடியாது ஓடுவதற்கு தூரமும் கிடையாது ஒரு குழந்தையை நீங்கள் எப்போது தூக்கிக் கொஞ்சினீர்கள் எப்போது கண்டித்தீர்கள் எப்போது குதிரை ஏறி விளையாட்டு காட்டினீர்கள் எப்போது சிரிக்க வைத்தீர்கள் உங்கள் உள்ளங்கை குழந்தையின் சூட்டை எவ்வளவு நேரம் சேமித்தது எனக்கு இன்றுவரை அது சேமிப்பிலேயே இருக்கிறது கூடவும் இல்லை குறையவும் இல்லை கொஞ்சமும் மாறாத…