Skip to content Skip to footer

Blog Classic

கர்ப்ப காலமும் தாய்ப் பாசமும்
 கவிஞனின் கண்களுக்கு மட்டும் ஒரு காட்சி வேறொரு பரிமாணமாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது. இந்தப் பார்வை சராசரி மனிதனுக்கு வாய்ப்பதில்லை! ஒரு நல்ல படைப்பாளனால் மட்டுமே இதனைக் கவித்துவ உணர்வோடு அணுகமுடியும் என்று தன்னைத் திறந்து காட்டுகிறது. ஒரு தேர்ந்த படைப்பளாரால் மட்டுமே தன் உடலைச் சித்திரமாக வரைந்து கலையாக உருவாக்க முடியும் என்பதால்தான் அவள் நிர்வாணமாக நிற்க துணிகிறாள். இங்கே வரைபவன் மட்டும் நிர்வாணத்தைக் கலையாக மாற்றும் வித்தை அறிந்தவனல்ல, கலைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவளும் கலைஞனாகிவிடுவாள். தூய…
ரவி அல்லது – கவிதைகள்
சச்சரவு. வெகு தூரம் வந்துவிட்டதாக விசனத்தின் வலியில் துடித்தழுதபொழுது அவன் ஆழ்துயிலில் இருந்தான் கிழவி விழித்திருந்தாள் வீடு அசைந்தாடியது காற்றின் போக்கில். *** பிரவாகம். இறுதி செய்யப்படாத எல்லா பிணக்குகளிலும் அவள் பூ முடைகிறாள். அவன் பூக்கொய்கிறான். குழந்தை சலிப்படைகிறது காத்திருத்தலின் பொருட்டாக. *** தோள் நிற துயரம். ஒவ்வொரு முறையும் சிரேஷ்ட குமாரர்களின் மிருக வதையெனும் மீட்சிக்கு. மனிதனுக்குதான் களிம்பிட வேண்டியதாகிறது வாளிப்பான பசுவிற்கு முன்னால். *** பாத…
மலேசியா ஏ.தேவராஜன் கவிதைகள்
சக்கை வெயிற் பொழுதின் தகிப்பிலொரு காங்கையில் வெக்கையும் வேர்வையும் மூச்சிறைப்புக்குமிடையே பல நாட்களும்.... கடும் மழை கொடுங்குளிர் நரம்பறுக்கும் நாளைய கனவுகளுடன் தள்ளாட்ட நடையிலாங்கு ஒட்டி உலர்ந்த என்பினூடே சுமைபொதியுடன் நகருமவன் கழுதையுமல்ல குதிரையுமல்ல நெய்குடி வண்டியுமல்ல .... புலர்வேளை தொடங்குமுன்னே ஆறேழு பசித்த வயிறுகளை... வயிற்றுக்கப்பால் அழுத்தும் தவிர்க்கவியலாத் தேவைகளை... நெஞ்சில் புதைத்தேகும் நகரோரத் தெருக்களில் விட்டெறியப்பட்ட…
அனார் கவிதைகள்
சுலைஹா மேலும் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றால் நான் அர்த்தங்களுக்கு வெளியே வளர்பவள் கல்லும் கல்லும் மோதிவரும் நெருப்புப் பொறிகளால் உருவானவள் இங்கிருந்தும் அங்கிருந்தும் தாவுகின்ற மின்னொளி கடந்தகால சாபங்களிலிருந்து மீண்டவள் எதிர்காலச் சவால்களை வென்றவள் ஒட்டகங்களைப்போல் மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி ஒளியை அணிந்திருப்பவள் உப்புக் குவியலைப்போல் ஈரலிப்பானவள் “இறுமாப்பு“ என்னும் தாரகைகளாக வீசியெறிந்திருக்கிறேன் என் பருவங்களைக் கண்களிலிருந்து காதலை பொழியச் செய்பவள் கனவுகள் காண ஏங்கும் கனவு நான் என் உடல் செஞ்சாம்பல்…
கடல் நாகங்கள் பொன்னி பற்றி எம்.சேகர்
கவிதை மனம் சார்ந்தது. அது கண நேர உணர்வுகளின் வலிகளின் வடிகாலாக வெளிப்படுவது. இவையே இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் எங்கும் நிறைந்திருக்கின்றன. சிங்கப்பூர்க் கவிதை என்பது இதுவரை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் விமர்சிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இந்த ஆண்டு இலக்கியப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில் உள்ள கவிதைகள் சமகால உலக தமிழ்க் கவிதைச் சூழலில் மிகவும் அழகான கவிதை படைப்புகளாக வெளிவந்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இன்பா, மகேஷ்குமார், மதிக்குமார் இந்த மூவரின் படைப்புகளும் சமகாலக் கவிதைச் சூழலில்…
யவனிகாவின் கிடக்கட்டும் கழுதை
ஒரு பகல், ஒரு இரவு அல்ல. நித்தியம் காத்திருக்கிறது யவனிகா யவனிகா ஸ்ரீ ராமின் கவிதைகளைப் பற்றித் தொடர்ந்து பேசி, எழுதி வருபவன் என்ற வகையில், அவனது கவிதைகள் பற்றி சிந்திக்க எண்ணும்போதெல்லாம் இதன் மரபு என்ன? இதன் வார்படம் என்ன என்ற கேள்வி வருவது பிரதானமானது. 1990-களின் துவக்கத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ தொகுதியின் வழியாக அறிமுகமான யவனிகா ஸ்ரீ ராமின் கவிதைகளை, போர்ஹேயின் சிறுகதைகளைப் பற்றிச் சொல்வதைப் போன்றே ஹைப்ரிட் கவிதைகள் என்று…
பெரு.விஷ்ணுகுமார் கவிதைகள்
மே-சொல்லிகள் பாதையை மறித்தபடி மந்தமாகச் செல்லும் மே-சொல்லிகள் தாமாகவே விலகி வழிவிடட்டும் எனக் காத்திருந்தேன். அதற்குள் அவை என்னையும் தங்களில் ஒருவராக நினைத்துக்கொண்டன போலும். எல்லாவற்றுக்கும் மே-சொல்வதென்பது எளிமையானது மட்டுமல்ல சௌகர்யமானதும்கூட எல்லா பொதிகளையும் ஒரே வண்டியில் ஏற்றலாம். எல்லா பூக்களுக்கும் ஒரே வண்ணமிடலாம் யாராவது வந்து மீட்டெடுக்கும்வரை வழிமொழியப் பழகாதொரு பள்ளத்தாக்கினை செப்பனிட்டுக் கொண்டிருக்கலாம். இப்போது மொத்த கூட்டமும் வலப்புறம் திரும்புகிறது எதையும் கண்டுகொள்ளாமல் நிற்கும் நான் அங்கிருந்து நழுவி நேராகச் செல்கிறேன்…
சிங்கப்பூர்க் கவிதை விழாவில் பரிசுபெற்ற கவிதைகள்
ஒவ்வொரு ஆண்டும் தேசியளவில் நடைபெறும் கவிதை விழாவில் நான்கு மொழிகளிலும் கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன.  தமிழ்ப் பிரிவிற்கான பொதுப்பிரிவில் Un-Bound என்ற கருப்பொருளில் நடத்திய கவிதைப் போட்டியில்  முதல் பரிசினை விஷ்ணுவர்திணி மற்றும் நீதிப்பாண்டியும் மூன்றாம் பரிசினை க.சங்கீதாவும் பெற்றார்கள்.  இப்போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகள்.    சிகை அலங்கார பேதை விஷ்ணுவர்தினி கட்டவிழ்ந்த கூந்தலோடு உச்சி மாடியில் பித்துப்பிடித்து நிற்கிறாள் முழுநேர காத்திருப்பாளி ரெப்பன்சல் கீழே தம் கேசத்தை…
சிங்கப்பூர்க் கவிதை விழாவில் சீன ஓவியங்களுக்கான கவிதைகள்.
சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் மொழிக் கவிதைகளைக் கவிதை ஆர்வலர்களுக்கிடையே அறிமுகம் செய்து சிங்கப்பூர்க் கவிதைகளை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாண்டு சிங்கப்பூர்க் கவிதை விழா கவிதைசார் நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்விழா ஜூலை 26 முதல் 28 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. பன்மொழிக் கவிஞர்களுடன் தொடர் கவிதை வாசிப்பு, புதிதாக வெளியீடு கண்ட நூல்கள் அறிமுகம், பிற மொழிக் கவிஞர்களின் நூல்கள் விற்பனை,…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]