சரஸ்வதி நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் உரசுகின்றன ஒரு நதி மின்னலென நெளிகிறது உன் நாதம் ஒரு கவிதையாகிறது. # பெரும் கலவரம் நடந்த குளம் ரத்த சிவப்பு கரையில் இருக்கிறது வீணை கரையில் இருக்கிறது கரை கரையில் இருக்கிறது குளம் எங்கே போனது மரம் எங்கே போனது யானை எங்கே போனது செருப்புகள் மிதந்துகொண்டிருக்கின்றன கட்டைகள் துணிகள் மிதக்கின்றன ஆழத்தில் கிடக்கிறது ரத்தக்கறை நீங்காத அரிவாள் அதனை நீர் மீட்டுகிறது வெள்ளைத்தாமரை செஞ்சிவப்பு ஆகிறது #…
ஊமத்தையும் மருத்தோன்றியும் அருகருகில் ஒன்றை அரைத்தால் உன் கந்தகமௌனம் மற்றது உனது முத்தத்துக்கு முந்தையச் சொல் உறிஞ்சப்படும் கஞ்சா கங்கின் செந்திறப்பு கொதிக்கும் ஓரிதழ் தாமரையின் திரட்சி முன்னது வெட்கினேன் என்று பிறகு சொல்லும் கணம் பின்னது உனக்கு கடவுச்சொல் மறந்த கண்ணாடி அறை அழுக்கை முத்தாக்கும் சிப்பியை ருசித்துண்ணும் கடல் நிலத்தவனுக்கும் சிறிய சினச் சொல்லண்ண உதிரவாசனைக்கு நீர்த்திமிரும் சுறாவுக்கும் ஆன பனிப்போரில் கஞ்சா கங்ககென வால்நட்சத்திரம் எறிந்து விளையாடுகிறது…
சுழற்சி அநேக பொழுதுகளில் தூங்கி தூங்கி வழிகிறாள் அம்மா தூக்கத்தில் புன்னகைப்பதாக ஒருமுறை அடுத்தவீட்டு அக்கா சொன்னாள் கழிவறையில் தண்ணீரைத் திறந்து மூடாமல் அப்படியே பார்த்துகொண்டே நிற்கிறாள் உடையை பத்து முறையாவது மாற்றச் சொல்லி தினமும் அடம்பிடிக்கிறாள் காலையா? மாலையா? தெரியாமல் குழம்புகிறாள் ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறாள் சாப்பிட்டு முடித்து சித்த நேரத்தில் சாப்பாடு போடச் சொல்கிறாள் முணுமுணுத்தபடி கடவுளிடம் ஏதாவது வேண்டிக் கொண்டே இருக்கிறாள் வீட்டில் காணாமல் போகும் பல அவளது…
வீட்டுக்கு வந்த மணிச் செடி நேற்று மணிப்ளாண்ட் குறுந்தொட்டிச்செடியை வாங்கிவந்து வீட்டுக்குள் வைத்தேன் முனை சுருட்டிய தாள் போன்ற இலைகள் ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்க்கின்றன விரல்கள் ஒரு போதும் மாறாத எப்போதும் மாற ஆசைப்பட்டு தொட்டியைக் குனிந்து பார்க்கின்றன நீர் தெளிக்கப்பட்ட இலைகள் மீயலையும் திணைகள் வெண்கிண்ணம் நிரம்பிய கருஞ்சிவப்புக் குளத்தில் குதித்துப் பின்னிப் பிணைந்து நெளிந்து வளைகின்றன மஞ்சள் நிற மண்புழுக்களாய் கடவுள் அதன்…
நேர்காணல் செய்தவர் : நதன் கார்டல்ஸ் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர்களில் ஒருவர் செஸ்லோ மிலோஸ். நோபல் பரிசு பெற்றவர். தீவிரமான மோதல்கள் கொண்ட உலகத்தில் வாழ விதிக்கப்பட்ட மனிதனின் குரல் என்று நோபல் பரிசுக் கமிட்டியின் குறிப்பு இவரது கவிதைகளைப் பற்றித் தெரிவிக்கிறது. மனம்நிறை கவனம்தான் இவரது சமயத்துவம் என்பதை இந்த நேர்காணல் மூலம் தெரியப்படுத்துகிறார். கேள்வி: உங்கள் கவிதைத் தொகுப்பில் கதேயின் மேற்கோள் ஒன்றைத் தந்திருக்கிறீர்கள். “நலிவின் காலகட்டங்களில், எல்லா மனப்போக்குகளும்…
புழுக்கள் தேடும் பறவைகள் அது நீண்டகாலம் இருந்து வருகிறது மற்றும் அதன் எளிமையைத் தவிர்த்து விடுவோம் ஏனெனில் அது மீன் இறைச்சியின் மீது கடலின் ஆற்றலைக் குறைத்து விடுகிறது பன்றிகளுக்குக் கொட்டிலையும் பீட பூமிகளை ஆடுகளுக்கும் தரித்திரனுக்கு உயிர்ப்பின் ஆன்மிகத்தையும் நிறைத்து அடிகிழிந்த கருந்துளையில் எதிர்காலத்தைக் கொட்டுகிறது சூரியனுக்கும் நிலத்திற்கும் கடலுக்கும் பேரண்டமாய் நின்றாடும் அதற்கு ஆள்விழுங்கி என்று பெயர் சிலருக்கு முதிர்ந்த மரத்தின் இலையளவுகூட செல்வம் கிடையாது மறுமையை மருந்திற்குக்கூட எறும்புகள்…
சிந்திப்பதென்றால் என்னவென்பதை நாம் புரிந்துகொள்ளும்வரை கவிதை என்றால் என்னவென்பதையும் நாம் புரிந்துகொள்ளவே போவதில்லை என்கிறார் ஹைடக்கர். அவர் மேலும் சொல்கிறார். மிக சுவாரஸ்மான விஷயம் என்னவெனில், சிந்திப்பது இயற்கையாகவே சிந்திப்பதிலிருந்து வேறுபட்ட ஒன்று, விரும்புவதிலிருந்து வேறுபட்ட ஒன்று. இந்த வேறுபட்ட ஒன்றைப் பிடிக்கவே பொறிவைக்கிறது கவிதை. 000 நமது ஆழ் அனுபவங்கள் அனைத்தும் மொழியற்றது என்றே எனது உள்ளுணர்வு கூறுகிறது. காட்சிகள் இருந்தாலும் பார்ப்பதற்கும் சொல்வதற்குமிடையில் வார்த்தைகளால் விவரிப்பதற்குமான இடைவெளியை விவரிப்பதற்கு வார்த்தைகள் இருக்காது,…
வானில் மெல்லத் ததும்பி நிற்பதுபோல் ஒரு தயக்கம் காட்டியது வானூர்தி. மூச்சொலி கலந்த பறநர் அறிவிப்பு ‘நாம் சிங்கப்பூரில் தரையிறங்கப்போகிறோம்’ என்றது. நீள்வட்டக் காலதர்வழி எட்டிப் பார்த்ததில் கனவுலகொன்று மஞ்சள் ஒளிப்புள்ளிகளாய்த் தென்பட்டது. புதுநிலந்தொடுவது கால்கள் பெறும் காலப்பேறு. காணாவொன்றைக் காண்பதே களிகொள்காட்சியின்பம். வான்துறையகம் இறங்கிக் குடிநுழைவேற்று வெளியேறினேன். அந்தத் துறைக்கூடமே சொல்லிற்கடங்காத கட்டடம். …
1 அன்னை உள்ளிருந்து என் விழிகள் வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறாள் தன்னை எவ்வாறு இவர்கள் நடத்துகிறார்கள் என்று பார்க்கிறாள் தன்னிடம் சொல்லப்பட்ட உத்திரவாதங்களின் பொய்களை உணர்கிறாள் தன்னிடம் இவர்களின் பாசாங்கு எவ்வளவு என அறிகிறாள் எதன் பொருட்டும் வஞ்சம் நிகழாதபடி காப்பது தவிர்த்து நான் ஒன்றுமே செய்வதில்லை அவள் தரும் ஆயுதங்களை இப்போது எடுப்பதில்லை பதிலாக அவளை சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன்…
அந்தி குழையும் வேளையில் மேற்கு வானத்தின் வண்ணம் சுமந்து கூடடைந்த பறவை கிளையின் அசைவில் விழித்து கொண்டதில் தன் அலகால் விண்மீன்களைப் பொறுக்கிச் சேகரிக்க எத்தனிக்கிறது முற்றத்தில் விழும் நிலவொளியில் தனிமை தகிக்கிறது நீண்ட இரவுகளை விழுங்கிய நிலவு மெல்ல தேய்கிறது..! ---- மௌனத்தின் இடைவெளியை நெருக்கத்தின் மூச்சுக்காற்று நிரப்ப விழைகிறது சுழல் காற்றுக்கு உடையாத நீர்க்குமிழியொன்று எதிர்க்காற்றின் திசையில் தன்னை கட்டிக் கொள்கிறது உடைய மறுத்த வேளையில் சொற்களற்ற ஒரு பார்வையில்…