Skip to content Skip to footer

Tag: இதழ் 7

கவிதையின் வழிகள்

கவிஞனுக்கு என்ன வேண்டும்? ஒருமுறை கோவை ஞானியிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் ஏன் கலை, இலக்கியங்கள் எழுதுகிறோம்? கவிதை என்பது ஓர் ஆடம்பரம் இல்லையா? மனிதனால் உணவில்லாமல் வாழ முடியாது என்பது போல இலக்கியம் இல்லாமல் வாழ முடியும் என்பதும் எதார்த்தம் என்றால் எதற்காக நாம் இலக்கியத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்டேன். கோவை ஞானி அதற்கு நீண்ட விளக்கம் கொடுத்தார். அதைச் சுருக்கமாக இப்படிச் சொல்கிறேன். மனிதனால் உணவில்லாமல் வாழ முடியாது. மனிதனைப் போலவே எந்த உயிர்களாலும்…

மேலும் வாசிக்க

வெளிச்ச தேவதை – உலகமயமாதலின் முதல் பலி

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ எனக்கு நேரடியாக அறிமுகமாகும் முன்னர் அவரைப் புனைவு வழியேதான் கண்டடைந்தேன். நேரடியாகப் பார்த்து நட்பு பாராட்டுவதற்கான அடிநாதமாய் இருப்பது ஒருவரின் படைப்புதானே. ஒருவரின் படைப்புகள்தானே அவரை அணுகவைக்கிறது. ஆனால் அவரின் நட்பைவிட அழுத்தமாய்த் தன்னை முன்னிறுத்திக்கொள்வது படைப்பு நயம்தான். “வெளிச்ச தேவதை’ சிறு காவியத்தைச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் , கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கூடுகையின் போது என் கையில் கொடுத்தார் பிச்சினிக்காடு இளங்கோ. கொடுக்கும்போது…

மேலும் வாசிக்க

சிந்து பூந்துறையில் பூத்த டெசர்ட் ரோஸ்

இகவடை பரவடை - குறுங்காவியம் - ஷங்கர் ராமசுப்ரமணியன்  -இன்பா //அவளுக்கு இதே சேயாற்றின் இன்னொரு கரையான சிந்து பூந்துறையில் சிதையூட்டி விடைகொடுத்தேன் அப்போது நதி காட்டியது எனக்குக் கருப்பு// ** //பானையைத் தோளில் தாங்கி அம்மாவைச் சுற்றும்போது ஒரு சுற்றுக்கு ஒரு துளை இட்டார்கள் பானை அழுது உகுத்தநீர் எனக்கு முதல் நீராகக் குளிர்ந்தது வனைந்தவை எல்லாம் போட்டு உடைக்கப்படுகிறது// ** //குச்சிகால்கள் கூம்பிச்…

மேலும் வாசிக்க

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

சரஸ்வதி நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் உரசுகின்றன ஒரு நதி மின்னலென நெளிகிறது உன் நாதம் ஒரு கவிதையாகிறது. # பெரும் கலவரம் நடந்த குளம் ரத்த சிவப்பு கரையில் இருக்கிறது வீணை கரையில் இருக்கிறது கரை கரையில் இருக்கிறது குளம் எங்கே போனது மரம் எங்கே போனது யானை எங்கே போனது செருப்புகள் மிதந்துகொண்டிருக்கின்றன கட்டைகள் துணிகள் மிதக்கின்றன ஆழத்தில் கிடக்கிறது ரத்தக்கறை நீங்காத அரிவாள் அதனை நீர் மீட்டுகிறது வெள்ளைத்தாமரை செஞ்சிவப்பு ஆகிறது #…

மேலும் வாசிக்க

நேசமித்ரன் கவிதைகள்

ஊமத்தையும் மருத்தோன்றியும் அருகருகில் ஒன்றை அரைத்தால் உன் கந்தகமௌனம் மற்றது உனது முத்தத்துக்கு முந்தையச் சொல் உறிஞ்சப்படும் கஞ்சா கங்கின் செந்திறப்பு கொதிக்கும் ஓரிதழ் தாமரையின் திரட்சி முன்னது வெட்கினேன் என்று பிறகு சொல்லும் கணம் பின்னது உனக்கு கடவுச்சொல் மறந்த கண்ணாடி அறை அழுக்கை முத்தாக்கும் சிப்பியை ருசித்துண்ணும் கடல் நிலத்தவனுக்கும் சிறிய சினச் சொல்லண்ண உதிரவாசனைக்கு நீர்த்திமிரும் சுறாவுக்கும் ஆன பனிப்போரில் கஞ்சா கங்ககென வால்நட்சத்திரம் எறிந்து விளையாடுகிறது…

மேலும் வாசிக்க

அஷ்ரப் கவிதைகள்

சுழற்சி அநேக பொழுதுகளில் தூங்கி தூங்கி வழிகிறாள் அம்மா தூக்கத்தில் புன்னகைப்பதாக ஒருமுறை அடுத்தவீட்டு அக்கா சொன்னாள் கழிவறையில் தண்ணீரைத் திறந்து மூடாமல் அப்படியே பார்த்துகொண்டே நிற்கிறாள் உடையை பத்து முறையாவது மாற்றச் சொல்லி தினமும் அடம்பிடிக்கிறாள் காலையா? மாலையா? தெரியாமல் குழம்புகிறாள் ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறாள் சாப்பிட்டு முடித்து சித்த நேரத்தில் சாப்பாடு போடச் சொல்கிறாள் முணுமுணுத்தபடி கடவுளிடம் ஏதாவது வேண்டிக் கொண்டே இருக்கிறாள் வீட்டில் காணாமல் போகும் பல அவளது…

மேலும் வாசிக்க

இன்பா கவிதைகள்

வீட்டுக்கு வந்த மணிச் செடி நேற்று மணிப்ளாண்ட் குறுந்தொட்டிச்செடியை வாங்கிவந்து வீட்டுக்குள் வைத்தேன் முனை சுருட்டிய தாள் போன்ற இலைகள் ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்க்கின்றன விரல்கள் ஒரு போதும் மாறாத எப்போதும் மாற ஆசைப்பட்டு தொட்டியைக் குனிந்து பார்க்கின்றன நீர் தெளிக்கப்பட்ட இலைகள் மீயலையும் திணைகள் வெண்கிண்ணம் நிரம்பிய கருஞ்சிவப்புக் குளத்தில் குதித்துப் பின்னிப் பிணைந்து நெளிந்து வளைகின்றன மஞ்சள் நிற மண்புழுக்களாய் கடவுள் அதன்…

மேலும் வாசிக்க

ஒரு நிலைபேறுடைய தருணம் – போலந்து கவிஞர் செஸ்லா மிலோஸுடன் ஒரு நேர்காணல்

நேர்காணல் செய்தவர் : நதன் கார்டல்ஸ்   இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர்களில் ஒருவர் செஸ்லோ மிலோஸ். நோபல் பரிசு பெற்றவர். தீவிரமான மோதல்கள் கொண்ட உலகத்தில் வாழ விதிக்கப்பட்ட மனிதனின் குரல் என்று நோபல் பரிசுக் கமிட்டியின் குறிப்பு இவரது கவிதைகளைப் பற்றித் தெரிவிக்கிறது. மனம்நிறை கவனம்தான் இவரது சமயத்துவம் என்பதை இந்த நேர்காணல் மூலம் தெரியப்படுத்துகிறார். கேள்வி: உங்கள் கவிதைத் தொகுப்பில் கதேயின் மேற்கோள் ஒன்றைத் தந்திருக்கிறீர்கள். “நலிவின் காலகட்டங்களில், எல்லா மனப்போக்குகளும்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]