Skip to content Skip to footer

Tag: இதழ் 10

காஞ்சி – சேரன் கவிதைகள்

1. நினைக்க மறுப்பவை நைல் நதி ஊற்றெடுக்கும் இடத்துக்குச் சென்றோம் போகும் வழியில் இருநூராயிரம் அகதிகள். பார்த்தோம்: உருவமற்றிருந்த தெருவோரம் குருதி கறுத்து எஞ்சியிருந்த பாதி உடல். அதிர்ச்சியில் நெஞ்சு பிளந்து மரித்த ஒரு பெரும் பறவை. பெரிய கொம்புகளோடு தலை துண்டிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடந்த ஆநிரை. ஊற்றின் மெல்லொலி எழுப்பிய வியப்புடன் திரும்பி வருகிறோம். அப்போது ஈழத்தில் புன்முறுவலுடன் அகங்கார படையணியின் முன் முகப்பைச்…

மேலும் வாசிக்க

போர்கெஸின் கவிதைகள்

1. தெகார்தே (Descartes) நானே இப்பூமியின் ஒரே மனிதன், ஆனால் ஒருவேளை இங்கு பூமியோ மனிதனோ இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை ஒரு கடவுள் என்னை ஏமாற்றக்கூடும். ஒருவேளை ஒரு கடவுள் எனக்கு தண்டனை அளித்திருக்கக்கூடும் காலம் எனும் இந்த தீரா மாயைக்கு. நான் கனவு கண்டேன் நிலவை. நான் கனவு கண்டேன் என் கண்கள் நிலாவைக் காண்பதை. நான் கனவு கண்டேன் முதல் நாளின் காலையையும் மாலையையும். நான் கனவு கண்டேன் கார்தேஜ் நகரத்தை மற்றும் அந்நகருக்காக…

மேலும் வாசிக்க

இன்பா கவிதைகள்

1) அந்த வளாகத்தைச் சுற்றி வளைத்துவிட்டார்கள் நேற்று முதன் முதலில் இடது பக்கச் சுவர்களை உடைத்தார்கள் பாதையோர மரக்கிளைகள் முறிந்து இலைகள், பூக்கள் நசுங்கின நீள்வட்ட சக்கர வாகனம் உருண்டு சென்றது மேற்கூரைகளை இடிக்க கடகட சத்தத்துடன் தூண்கள் சரிந்தன சிமிண்டுக் குவியல் தூசியைக் கிளப்பியது உடைத்து நொறுக்கிய சுண்ணாம்புச் சில்லுகளை வண்டியில் அள்ளிப்போட்டுச் சென்றார்கள் இன்று காலை இங்கு புதிதாக முளைத்திருக்கிறது புற்தரை இங்கு ஒரு கட்டடம் இருந்தது அது இருந்த இடமிருக்கிறது 2)…

மேலும் வாசிக்க

கடவுள் கொலை குற்றப் பத்திரிகை (குறுங்காவியம்) -ஷாராஜ்

1. சூரியனோடு உதித்து பூக்களோடு மலர்ந்தவர் அவர் உங்களுக்கு முதுகு சொரிந்துவிடுவதில்லை சுடும் உண்மையால் முகத்தில் அறைகிறார் கடும்பாறை மண்டையில் சம்மட்டி அடி அடிக்கிறார் விழிப்புற்றால் அவரது தீவிர அபிமானி ஆகிவிடுவீர்கள் வலித்து அஞ்சி ஓடினால் பெரும் கூட்டத்தின் மைய நீரோட்டத்தில் ஒருவராக உங்களைத் தக்கவைத்துக்கொள்வீர்கள் நான் ஒரு தவறு செய்துவிட்டேன் அந்த தாடிப்பயலின் அறைகளையும் அடிகளையும் பேருவுகையோடு தாங்கிக்கொண்டு அவரது சீடன் ஆகி உண்மையின் பக்கம் சேர்ந்துவிட்டேன் இல்லாவிட்டால் அறியாமை, மூடநம்பிக்கை, ஆன்மீக அடிமைத்தனம், பொய்,…

மேலும் வாசிக்க

கற்கை – அகச்சேரன்

பெயரிலேயே இல்லை எல்லாம். ஆமாம். பெயரில்தான் என்ன இருக்கிறது? ஆமாம். எல்லாப் பெயர்களும் காலிக்குறிப்பான்களும் அல்ல. சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயரைக் கொண்டவனின் மேதமையை ‘புதுமைப்பித்தன்’ என்று அவனே புனைந்துகொண்ட துடுக்குத்தனமும் தேய்ந்த உணர்வும் கொண்ட பெயர் தாங்கி அர்த்தம் கொண்டுவிட்டது. பெயரில் எல்லாம் இருக்கிறது என்று சொல்லமுடியாவிட்டாலும் பெயர்,சிலவேளைகளில் உயிர், உள்ளடக்கம், அதன் உலகம், அதிலிருந்து சொல்ல விரும்பும் செய்தியை ஏற்றுவிடுகிறது. நகுலன் என்பது வெறும் பெயரா? விக்கிரமாதித்யன் என்பது வெறும் பெயரா? கண்டராதித்தன் வெறும்…

மேலும் வாசிக்க

தூரத்துப் பச்சை – கடல் நாகங்கள் பொன்னி

வாசகனின் வாழ்வனுபவமே உலகில் எழுதப்படும் பெரும்பாலான கவிதைகளும் கதைகளும் அவனுக்கான அணுக்கத்தைத் தந்துவிடுகின்றன. அவனுக்கான ஏக்க நினைவுகளைக் கிளர்த்திவிடுகின்றன. எப்போதோ நடந்து மறக்கப்பட்டவற்றை மீட்டெடுத்துத் தரும் சில நொடிகள் அல்லாடவைக்கின்றன. அவை பல சமயம் கண்ணீரையும் வரவழைத்துவிடுகின்றன. காதல் மொட்டுக்களை மீண்டும் மலரவிட்டு நம்மை அலையவிடுகின்றன. நமக்குள் மகிழ்ச்சியான நினைவலைகளை மிதக்கவிடுகின்றன. தொப்புள்கொடி உறவுகளின் நிபந்தனையற்ற பாசத்தில், அன்பால் வாசகனைத் திளைக்கவிடுகின்றன. நிகர் வாழ்க்கை அனுபவிக்கும் அரிய தருணங்களையும் நல்ல கவிதைகள் நமக்கு தகவமைத்துத் தருகின்றன. இன்பாவின்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]