Skip to content Skip to footer

Blog Classic

ஊஞ்சல் மண்டபம்
ஆயிரமாயிரமானோர் கூடிக் கலையும் ஊஞ்சல் மண்டபத்தில் சமநிலை எங்கேயிருக்கிறது ஆயிரமாயிரமான கதாபாத்திரங்கள் கதைகளாகும் யாளித் தூண்களின் நடுவே சம நோக்கு எங்கேயிருக்கிறது யாரை நோக்கி இந்தக் கேள்விகளைக் கேட்பேன் நான் யாரிடமிருக்கிறது சமநிலைக்கான அக்கறைகள் என் கன்னக்கதுப்புகளில் துறவறத்தின் ரேகைகள் தோன்றிவிட்டனவா நீ அடையாளம் கண்டுவிட்டாயா நான் எப்போதுமே மண்டபத்துக்கு வெளியில் நிற்பவன்தானே இறைவனின் கல்யாண கோலமும் கூட்ட நெரிசலும் கலைய எப்போதும் காத்திருப்பவன் நான் முதலில் வருபவன் என்றாலும் கடைசியில் தாமதமாய்ச் சென்றடைபவன் எல்லாவற்றிலும் தாமதம்…
தூசு
எங்கும் வியாபித்திருக்கும் தூசு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் படிந்திருக்கும்போது அதில் நீ உன் ஆட்காட்டி விரலால் உன் காதலியின் பெயரை எழுதுகிறாய் தூசில் தொடங்கி தூசில் முடியுமென்ற விவிலிய வாசகத்தில் தூசில் எல்லாம் முடிவதை நீ அறிவாய் ஆனால் தூசில் எது எப்படித் தொடங்கியது என்பதை எவ்வாறு நீ அறிவாய் எங்கோ ஒரு இடத்தில் மேகம் வடிகட்டிய ஒற்றைக் கிரணத்தில் ஒளித்தூசுக் கற்றையுனுள் ஆங்காங்கேயுள்ள வெற்றிடத்தில் அவள் உன் பெயரை எழுதி எல்லாவற்றையும் ஆரம்பித்திருக்கக்கூடும் இல்லை நிறைமதியின்…
ஈரப்பதம்
என்ன நாள், என்ன மணி என்ன மணி, என்ன நிமிடம் என்ன நிமிடம், என்ன நொடி என்ன நொடி குதிரையின் மூச்சிரைப்பு காற்றில் கனமாகக் கலந்திருக்கிறது ஈரப்பதம் நான் ஏன் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்? நான் ஏன் ஒரு மூலையில் சுருண்டு படுக்கலாகாது? மழை மரம் காற்று என நான் ஏன் பார்த்திருக்கலாகாது? மாதுளம் பழங்கள் ஏற்கனவே உடைந்து பிளந்திருக்கின்றன கடலோ காற்றின் விதிகளால் போட்டிகளைப் பொங்கிப் பொங்கி அணைத்துக் காட்டுகிறது சுழலுறு கடலே சுழலுறு உன் ஆழ்கடல்…
மாத்ரி
மாத்ரி மகாபாரதத்தில் பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுலன், சகாதேவன் ஆகிய இரட்டையருக்குத் தாய். குந்தியின் தேவர்களை வரவழைக்கும் மந்திரத்தைக் கடன்பெற்று அஸ்வினிதேவர்களாகிய இரட்டையர்களை அழைத்து நகுலன், சகாதேவனைப் பெற்றெடுத்தாள். மாத்ரி பேரழகி. பாண்டுவுக்கு மனைவியோடு உறவு கொண்டால் மரணம் சித்திக்கும் என முனிவர் சாபம் இருந்தது. மாத்ரியின் அழகில் பித்தமேறிய பாண்டு அவளோடு உறவு கொண்டு மரணமடைந்தான். மாத்ரி தன் குழந்தைகளை குந்தியிடம் ஒப்படைத்துவிட்டு பாண்டுவோடு உடன்கட்டை ஏறினாள். மாத்ரி உன்னிடமில்லாமால் வேறு யாரிடம் சொல்வது என்…
சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி
1.மதமரபின் அந்தங்களின் அரசியலும், எதிர்மரபினரின் சிறப்பியல்பு அறியொணாத் 'தாரை வார்ப்பும்'! எங்கே சமயம் முடிவடைகின்றதோ அங்கே ஆரம்பிக்கும் ஆன்மிகமான சமயத்தன்மையே சித்தரியமாம். சமயஞ் சார் பக்தியியக்கம் இறைஞானத்தின் (Theology) பாற்பட்டதெனில், சமயஞ்சாரா சித்தநெறியோ மறைஞானம் (Mysticism) சார் மனிதாயச் சிந்தனைப்பள்ளி எனலாம். அவ்வச் சமயிகள் போல் அல்லாமல் சித்தர் யாவரும் ஒரே படித்தானோர் அல்லர். ஒரே படித்தானவை அல்லாமல் விதந்தோதிக் காணவேண்டியஅடிப்படை முரண்பாடுகள் மூவகைத்தாம்: 1.மத அத்துக்கள் × இறையியல், 2.முன்னைச்சிவசித்தர் திருமூலர் ×…
கால் நனைத்த அலைகள்
கவிஞர் கலாப்ரியாவின் கவிதை ஆளுமையும் அவரது கவிதை உலகமும் படைப்புலகம் அறிந்ததாக இருந்தாலும், சக கவிஞர்களின் கவிதைகளின் மீதான பார்வையையும், அவரது ரசனையையும் அறிந்துகொள்வதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதைகள் உதவுகின்றன. கலாப்ரியா ரசித்த கவிதைகளை திணைகளில் பகிர்ந்துகொள்கிறார். உள்ளடக்கம், வெளியீடு, கருத்தியல் என எந்தச் சார்புமில்லாமல் தான் ரசித்த கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்துள்ளார். இக்கவிதைகள் கலாப்ரியாவின் சிந்தனைப் பிரதியாக வந்துள்ளது. அவரது தேர்வு பொதுவானதாகவே இருக்கிறது, தனது கண்ணோட்டத்தில் ரசித்தவற்றில் சிறந்தவையாகக் கருதுபவையாக ஒரு சிலவற்றை…
எம்.டி.முத்துக்குமாரசாமி நேர்காணல்
என்னிடம் உருவாகும் ஆதிசொல் நாடகமல்ல, கவிதைதான் – எம். டி. முத்துக்குமாரசாமி கேள்விகள் : ஷங்கர்ராமசுப்ரமணியன் இலக்கியம், பண்பாடு, தத்துவம் மற்றும் கோட்பாடுகளை உரையாடலின் அந்தரங்கத்தோடும் படைப்பூக்கம் வெளிப்படும் தீவிரத்தோடும் எழுதக்கூடிய அரிதான விமர்சகர், நாட்டுப்புறவியல், பண்பாட்டு அறிஞர் எம் டி முத்துக்குமாரசாமி. 1980-களின் இறுதியில் தமிழில் அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் சார்ந்து நடைபெற்ற கோட்பாட்டு அறிமுகங்கள், விவாதங்களில் தாக்கம் செலுத்தியவை இவரது எழுத்துகள். தமிழ் சிறுகதை எழுத்தில் நிகழ்ந்த சோதனைகளில் எம் டி…
நகுலன் ஆங்கிலக் கவிதைகள்
நகுலன் அவர் வாழ்நாள் காலத்தில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட கவிதை நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் இவை. நகுலன் நூற்றாண்டையொட்டி ஷங்கர்ராமசுப்ரமணியன் தொகுத்து வெளிவந்திருக்கும் அருவம் உருவம் நகுலன் 100 புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. நகுலனின் ஆங்கிலக் கவிதைகள் பெருந்தொகையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள தருணத்தை 'திணைகள்' இணையத்தளம் பகிர்ந்துகொண்டு, நகுலனது நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இணைகிறது அறிமுகக் கட்டுரை : யுவன் சந்திரசேகர் அறிமுகம் (அருவம் உருவம் நகுலன் 100 தொகுப்பிலிருந்து) தமிழ்த்தனியனின் ஆங்கிலக்கவிதை - யுவன்சந்திரசேகர் நகுலனின்புனைகதைகள், குறிப்பாக நாவல்கள்,…
அரவான்
ஒளியைக்கூட்டுங்கள் தலையை வெட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது என யாரோ கத்துகிறார்கள் நீ உன் நாடியை வெகுவாக உயர்த்தி என் பெயர் அரவான் என அறிவிக்கிறாய் முப்பத்திரண்டு அங்கலட்சணங்கள் கூடிய கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் சல்லியனையும் தவிர இவ்வுலகில் முழுமையான ஆண் நான் ஒருவனே நான் போர்ப்பலியாக மனமுவந்து சம்மதிக்கிறேன் ஒரே வெட்டில் தலை வேறு முண்டம் வேறு என்றாகவேண்டும் உயிர்த்திருக்கும் என் தலை மீதியுடலை முப்பத்தியோரு துண்டுகளாக வெட்டும் அதுவே ஈட்டி முனையில் குருட்சேத்திரப் போரை…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]