Skip to content Skip to footer

Blog Classic

நான் எழுதவே விரும்புகிறேன் – லி சிங் சாவ்
இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது லி சிங்சோவ் (Li QingZhou) பற்றிய தகவல்களைப் படிக்க நேர்ந்தது. சமீபத்தில் தேசிய நூலகத்திற்குச் சென்றபோது எதார்த்தமாகக் கண்ணில் பட்ட பண்டைய சீனக் கவிஞரான லி சிங்சோவ் பற்றிய நூல் வாசிப்பதற்குச் சுவாரசியமாக இருக்க உடனே எடுத்துவந்தேன். கடந்த ஆயிரமாண்டுகளில் சீனாவின் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக அறியப்படுகிறார்.  பண்டைய காலச் சீனாவில் டாங் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சீனா தொடர்ச்சியாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை…
கார்த்திக் திலகன் கவிதைகள்
1) குளத்தின் மேற்பரப்பில் சொற்களைப் பரப்பி வைத்து கரையில் அமர்ந்து கல்லெறிகிறேன் அழகழகாய்த் தெறிக்கின்றன சொற்கள் 2) பூமி ஓர் இடத்தில் துக்கத்தில் கசிந்தது மரங்களின் எல்லா இலைகளும் துக்கமாக இருந்தன வானம் லேசாகத் தூரலிட்டு அழத் தொடங்கியது ஏனின்று உலகம் துக்கமயமாக இருக்கிறது என்று கேட்டேன் சந்தோஷங்கள் அனைத்தும் இன்று துக்கத்தின் வேடம் தரித்து நடித்துக் கொண்டிருக்கின்றன என்றார்கள் சந்தோஷங்களுக்கு இப்படி ஓர் ஆசையா 3) அ) புயல் காற்றையும் இளங்காற்றையும் அந்த மரம் ஒரே…
வேல் கண்ணன் கவிதைகள்
1.முகவாதம் நேற்றிலிருந்து இடப்பக்க முகம் வலிக்கிறது முகவாதம் பீடித்த அப்பாவை மருத்துவமனைக்கு தனியாக அனுப்பிய நாட்கள் கடந்து பல வருடங்கள் ஆகின்றன 2.ஒவ்வொரு முறையும் உன்‌ வாசல் தேடி பிச்சை கேட்டு வந்த போதும் மறுத்த போதும் கதவுகளை அறைந்து சாத்திவிட்டு சென்ற போதும் நிறைந்து போன‌ எனக்கு நீ காணாமல் சென்ற போது பசித்தது 3. உச்சியில் மலர்ந்த பூவின் மீது உனக்கு அலாதி பிரியம் வாசத்தைக் கொய்ய மலையேறத் துவங்கினேன் ஏற‌ ஏற‌ வெளிச்சம்…
கதிர்பாரதி கவிதைகள்
சலோமியின் மீன் பருவக் கண்கள் 1 யேசுவின் மூன்று சீடத்திகளில் ஒருவள் சலோமி. யேசு உயிர்த்துவிட்ட பிற்பாடும் ‘கல்லறையில் யேசுவைக் காணவில்லையே’ எனக் கலங்கிய மூவருள் ஒருவள் சலோமி. இல்லையில்லை யேசுவின் காதலிகளில் ஒருத்தியே சலோமி. அவையெல்லாம் கிடையாது, சலோமி என்பவள் யேசுவின் பன்னிரு சீடர்களில் இருவருக்கு அம்மா. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை யேசுவின் தாய் அருள்நிறைக் கன்னி மரிக்கு நேரிளையத் தங்கையவள். ஆக, அவள் யேசுவுக்கு அருள்நிறைச் சித்தி. இவையெதுவும் உண்மையல்ல கன்னி மரிக்குப் பிரசவத் தொண்டுசெய்த…
இன்பா கவிதைகள்
பல்லூழிக் காலப் பெரும் பூ என் அன்னை கிளம்பும் போது அவள் கைகளில் இருந்த பழம்பெரும் பூங்கொத்தை எனக்குக் கொடுத்துச் சென்றாள் நான் அதிலிருந்த பூ ஒன்றின் சிறு விதையை என் வீட்டுத் தொட்டியில் பதியமிட்டேன் மெல்ல கண் விழித்தது ஆயிரமாண்டு தாவரம். பின்பு ஒரு நாள் நான் கிளம்பும் முன்பு அதில் பறித்த மலர்கொண்டு ஒரு பூங்கொத்து தயாரித்து உன் கைகளுக்குத் தருவேன் அதைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் மகளே என் கோடி நூற்றாண்டுப் பூவே! என்…
திணைகள் கவிதை விருது அறிவிப்பு
திணைகள் கவிதை விருதுக்கு நவீன கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன இந்த முறை 2023 மற்றும் 2024ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்களுக்கும் சேர்த்து ஒரே விருதாக வழங்கப்படுகிறது. இந்த இணைப்பில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துவிட்டு நூல்களை அனுப்பவும்.  https://tinyurl.com/jewrkz3n நூல்களை 10 மார்ச் 2025 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி:  Old No.72, New No.3 Kumaran Road II, Main Road, Chinmaya Nagar, Chennai 600 092 விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட…
ஆனந்த் குமார் கவிதைகள்
1. ஒரு நதிக்குள் நிறைய நதிகள் இருக்கின்றன அதில் ஒன்று ஒரு மூலையில் கூழாங்கற்களை ரகசியமாய் சேகரித்துக்கொண்டிருக்கிறது ஒன்று கரையை எட்டியெட்டிப் பார்க்கிறது ஒன்று பாறையில் ஏறி வழுக்கி விழுகிறது சிலதுகள் அமைதி சிலதுகள் சேட்டை ஒன்றிற்கு நீச்சல் தெரியவில்லை ஒன்றிற்குப் பாடத் தெரிகிறது ஒன்றை ஒன்று முந்துகிறது ஒன்றை ஒன்று பிடித்து இழுக்கிறது குழந்தைகள் கூட்டமாகச் சென்றாலும் குழப்பமாக இல்லை கூட்டமாகச் செல்லும் நதிகளைத்தான் நாம் நதி என்கிறோம் 2. மழை பெய்துகொண்டிருந்த ஊரிலிருந்து மழை…
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா
நம் இயற்கையும் இயல்புகளும் என்ற கருப்பொருளில் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2024 சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளான சீனம், மலாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளிலும் நவம்பர் 8 முதல் 17 வரை நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்ட நாடு கொரியா மற்றும் கொரிய இலக்கியம் பற்றி பேசுவதற்கான முக்கியத்துவம் வழங்கப்பட்டது. கொரிய இலக்கியத்திற்கும் சிங்கப்பூரின் இலக்கியத்திற்குமான தொடர்பு குறித்த உரையாடல் நடைபெற்றது. இந்த உரையாடலில், சிங்கப்பூர், கொரியா மற்றும் புலம்பெயர்ந்தோர் இடையே உள்ள…
நிலா கண்ணன் கவிதைகள்
வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம் உனக்கும் எனக்குமிடையில் நீளும் இச்சுவர்களில் உப்பின் ஈரம் பூத்திருக்கின்றது உனக்கு எத்தனை முறை சொல்வது.!? உன் மனம் மயில் அகவுவதைப்போல ஒலியெழுப்பிக்கொண்டிருக்கிறது நீயோ குனிந்த தலை நிமிராது கூடை முடைந்து கொண்டிருக்கின்றாய் பூவை தீபத்தில் அழுத்தி ஒளியின் மூச்சை நிறுத்தி வைத்துவிட்டு சிறிது கண்ணடை தூதுக்கு இவ்விடம் பறவையேதுமற்று இருக்கின்றது வௌவால்களின் வழியே அனுப்பியிருக்கிறேன். வழியில் கனியைக் கண்டு அவையும் தலைகீழ் பற்றாற்றலாம் விடியும்முன் வந்தடையும் அந்தப்பாலூட்டிகளின் மார்பில் முட்டி…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]