Skip to content Skip to footer

Blog Classic

மணமாய்க் கரைகிறேன்
உங்களுக்காக நான் உங்களுக்காக கரைகிறேன் முற்றும் முழுதும் உங்களுக்கே என்னைப்போல் உங்களுக்காய் யாருமில்லை என்னையும் நீங்கள் விட்டுக்கொடுத்ததில்லை உங்கள் பெற்றோரும்  உடன் பிறந்தோரும்கூட என்னைப்போல் கரைந்ததில்லை உங்களுக்காக கரைவதற்காகவே நான் ஒவ்வொரு நாளும் கரைவதற்குக் காத்திருப்பதும் நான்தான் என்ன? இப்பொழுதாவது கரைகிறதா உங்கள் மனம்?
முதல் பாடல் 2
தொஷ்டா! நீ அழைத்தால் என்னால் வராமல் இருக்க முடியாது என் கண்களைக் குருடாக்கிக்கொள்கிறேன் காதுகளை பழுக்கக் காய்ச்சிய கம்பிகளால் செவிடாக்கிக்கொள்கிறேன் என் இதயத்தைப் பிய்த்து நாய்களுக்கு வீசுகிறேன் அப்போதும் உன் குரல் எனக்குக் கேட்கிறது உன் உருவம் எனை அழைக்கிறது உன் காதல் எனைத் தொடுகிறது மலைகளில் திரளும் வெள்ளம் பள்ளத்தாக்குகளில் பாய்வது போல் விண்ணுக்கு எரியப்பட்ட கல் பூமிக்கு இழுக்கப்படுவது போல் நான் உன்னால் அழைக்கப்படுகிறேன் கதியற்று வருகிறேன் மீண்டும் மீண்டும்
அழைப்பு
பொது யுகம் 2536 அந்த மூத்த எழுத்தாளர் நேர்காணலில் அமர்ந்திருக்கிறார் கடந்த காலத்திலிருந்து யாரையாவது திரும்ப அழைக்க நேர்ந்தால் யாரை அழைப்பீர்கள் அவர் சற்றும் யோசிக்காமல் சொல்கிறார் 1996ல் இறந்து போன என் மனைவி ஒரு கணம் நிசப்தம் மறுகணம் அவர் மனைவி தோன்றுகிறார் இது எப்படி சாத்தியம் அன்பே எழுத்தாளர் தழுதழுக்கிறார் உன்னால்தான் அன்பே இருவரும் தழுவுகிறார்கள் கொட்டும் மழையில் வானில் நீந்திச் செல்கின்றன இரு தங்கமீன்கள் ஒன்றை ஒன்று…
கவியாலானது
யானையைக் குழி தோண்டி பிடிப்பது போல் கவிஞனைக் காதல் பிடிக்கிறது பரவசத்தின் சொற்கள் விம்முகின்றன அவனின் ஒளிகொண்ட சொற்களை வானில் எறிகிறது அவை விண்மீன்களாகின்றன இருண்ட சொற்களை பகல் காகங்களாக்குகிறது காதலின் அபோதத்தில் கவிஞன் பித்தாகிறான் அவன் அழுதபோது ஒரு யுகத்தின் புன்னகை கோணுகிறது அவன் சிரித்த போது யாருமற்ற வனங்களில் பூக்கள் கண்ணெடுக்கின்றன யாருமில்லை என சுருள்கிறான் நடுங்குகிறது வானம் அவனின் யானைப் பசியால்தான் தமக்குள் மோகிக்கின்றன உயிர்கள் நுரைத்து நொதிக்கும்…
கானல் வரி
அவனை நான் மூன்று முறை பார்த்திருக்கிறேன் உலகத் திரைப்பட விழாவில் உன் அலுவலகத்தில் உன் படுக்கையில் என் கற்பனையில் அன்பே அது கற்பனை என்றே நம்ப விரும்பினேன். ஒரு நோயை நம்ப விரும்பாத அதைரியக்காரன் போல, இதுவெல்லாம் வெறும் கனவென்று எழ விரும்புபவன் போல ஹார்ட்டின்களில் என்ன இருக்கின்றன; முத்த ஸ்மைலிகளில் என்ன இருக்கின்றன என்று நினைத்தேன். அது அவ்வளவு சோபையான நம்பிக்கை இல்லை என்றாலும், அதுவே போதுமாய் இருந்தது. நீ அதை…
சிவை
நேரசைக்கு 64 எழுத்துகள் நிரையசைக்கு 68 எழுத்துகள் அதுவே கட்டளைக் கலித்துறை என்கிறாள் காரைக்கால் அம்மை நானோ நிகோனர் பர்ராவின் ரோலர் கோஸ்டர்களை கவிதைக்குள் ஓட்ட முயல்பவன் தலை கீழாய் நடந்து உன் பதம் அடைவது என் இயல்பல்ல சிவையே
வேறு வழி?
Bynge Appஇல் ராஜேஷ் குமாரை பதினைந்து லட்சம் பேர் படிக்கிறார்கள் என்றார் ஒரு நண்பர் ஐரோப்பாவில் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியை பத்து மில்லியன் பேர் படிக்கிறார்கள் என்றேன் நான் ஒரு வேண்டாத திகைப்பின் வாயை மூடுவதற்கு அடுத்த கண்டத்திலிருந்து கையைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது
அதற்குள் மற்றொரு திரிபுற்ற வைரஸ் வந்துவிட்டது
நேற்றுத்தான் ஒன்று வந்தது போலிருந்தது அதற்குள் முகத்தை மாற்றிக்கொண்டுவிட்டது ஒரு திரிபுருவுக்கும் இன்னொன்றுக்குமிடையே காலம் குறையக் குறைய எனக்கும் உனக்குமிடையே தூரம் அதிகமாகி மேலதிகமாகிறது இப்போதெல்லாம் உன் முகபாவனைகள் மாறிவிடவில்லையே பேசும்போது இப்போதும் உன் வலது புருவத்தை உயர்த்துகிறாயா உன் விரலசைவில் இப்போதும் சிறு குருவிகள் உன் நாற்காலியின் கைப்பிடியில் வந்தமர்கின்றனவா நான் ஒப்பனை செய்துகொண்டு பல மாலைகளாகிவிட்டன களைப்புற்றிருக்கிறேன் ஒரு நினைவிலிருந்து இன்னொரு நினைவுக்குக் கூட இப்போதெல்லாம் ஊர்ந்து செல்கிறேன்…
தமிழுக்குப் பன்றிக் கறிச் சுவை
அந்தக் குகையில் தொடங்கி, இந்தக் குகையில் முடிகிறது எல்லாம். இடையில் நிகழும் கனவுகள் யாவும், பழுதுற்ற காலயந்திரக் குழப்பங்கள். தந்தை தேவைப்படாத முட்டைகள் பாடிக்கொண்டிருக்கின்றன, உள்ளே. வேட்டைநாய்கள், பசிமயக்கக் கனவுகளில் எஜமானனைக் குதறித் தின்கின்றன. காமத்தில் பிசைந்த உணவு, ஞானச்சுரப்புக்கான பத்திய மருந்து. தோட்டாவை மென்று விழுங்குவதற்குப் பதிலாக, வயிற்றில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் வான்கா. பெரிதுபடுத்த ஒன்றுமில்லை. விடுமுறை நாளின் தனிமையில், சூரியகாந்திப் பூக்கள் நிகழ்த்திய சின்னக் குழப்பம்தான் அது. ரத்தவாடை மிகுந்த பரிணாமத்தின் பாதையை…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]