சக்கை
வெயிற் பொழுதின் தகிப்பிலொரு காங்கையில் வெக்கையும் வேர்வையும் மூச்சிறைப்புக்குமிடையே பல நாட்களும்....
கடும் மழை கொடுங்குளிர் நரம்பறுக்கும் நாளைய கனவுகளுடன் தள்ளாட்ட நடையிலாங்கு ஒட்டி உலர்ந்த என்பினூடே சுமைபொதியுடன் நகருமவன் கழுதையுமல்ல குதிரையுமல்ல நெய்குடி வண்டியுமல்ல ....
புலர்வேளை தொடங்குமுன்னே ஆறேழு பசித்த வயிறுகளை... வயிற்றுக்கப்பால் அழுத்தும் தவிர்க்கவியலாத் தேவைகளை... நெஞ்சில் புதைத்தேகும் நகரோரத் தெருக்களில் விட்டெறியப்பட்ட…
சுலைஹா
மேலும் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றால் நான் அர்த்தங்களுக்கு வெளியே வளர்பவள்
கல்லும் கல்லும் மோதிவரும் நெருப்புப் பொறிகளால் உருவானவள்
இங்கிருந்தும் அங்கிருந்தும் தாவுகின்ற மின்னொளி
கடந்தகால சாபங்களிலிருந்து மீண்டவள் எதிர்காலச் சவால்களை வென்றவள்
ஒட்டகங்களைப்போல் மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி
ஒளியை அணிந்திருப்பவள் உப்புக் குவியலைப்போல் ஈரலிப்பானவள்
“இறுமாப்பு“ என்னும் தாரகைகளாக வீசியெறிந்திருக்கிறேன் என் பருவங்களைக்
கண்களிலிருந்து காதலை பொழியச் செய்பவள்
கனவுகள் காண ஏங்கும் கனவு நான்
என் உடல் செஞ்சாம்பல்…
கவிதை மனம் சார்ந்தது. அது கண நேர உணர்வுகளின் வலிகளின் வடிகாலாக வெளிப்படுவது. இவையே இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் எங்கும் நிறைந்திருக்கின்றன. சிங்கப்பூர்க் கவிதை என்பது இதுவரை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் விமர்சிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இந்த ஆண்டு இலக்கியப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில் உள்ள கவிதைகள் சமகால உலக தமிழ்க் கவிதைச் சூழலில் மிகவும் அழகான கவிதை படைப்புகளாக வெளிவந்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இன்பா, மகேஷ்குமார், மதிக்குமார் இந்த மூவரின் படைப்புகளும் சமகாலக் கவிதைச் சூழலில்…
ஒரு பகல், ஒரு இரவு அல்ல. நித்தியம் காத்திருக்கிறது யவனிகா யவனிகா ஸ்ரீ ராமின் கவிதைகளைப் பற்றித் தொடர்ந்து பேசி, எழுதி வருபவன் என்ற வகையில், அவனது கவிதைகள் பற்றி சிந்திக்க எண்ணும்போதெல்லாம் இதன் மரபு என்ன? இதன் வார்படம் என்ன என்ற கேள்வி வருவது பிரதானமானது. 1990-களின் துவக்கத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ தொகுதியின் வழியாக அறிமுகமான யவனிகா ஸ்ரீ ராமின் கவிதைகளை, போர்ஹேயின் சிறுகதைகளைப் பற்றிச் சொல்வதைப் போன்றே ஹைப்ரிட் கவிதைகள் என்று…
மே-சொல்லிகள் பாதையை மறித்தபடி மந்தமாகச் செல்லும் மே-சொல்லிகள் தாமாகவே விலகி வழிவிடட்டும் எனக் காத்திருந்தேன். அதற்குள் அவை என்னையும் தங்களில் ஒருவராக நினைத்துக்கொண்டன போலும். எல்லாவற்றுக்கும் மே-சொல்வதென்பது எளிமையானது மட்டுமல்ல சௌகர்யமானதும்கூட எல்லா பொதிகளையும் ஒரே வண்டியில் ஏற்றலாம். எல்லா பூக்களுக்கும் ஒரே வண்ணமிடலாம் யாராவது வந்து மீட்டெடுக்கும்வரை வழிமொழியப் பழகாதொரு பள்ளத்தாக்கினை செப்பனிட்டுக் கொண்டிருக்கலாம். இப்போது மொத்த கூட்டமும் வலப்புறம் திரும்புகிறது எதையும் கண்டுகொள்ளாமல் நிற்கும் நான் அங்கிருந்து நழுவி நேராகச் செல்கிறேன்…
ஒவ்வொரு ஆண்டும் தேசியளவில் நடைபெறும் கவிதை விழாவில் நான்கு மொழிகளிலும் கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்ப் பிரிவிற்கான பொதுப்பிரிவில் Un-Bound என்ற கருப்பொருளில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசினை விஷ்ணுவர்திணி மற்றும் நீதிப்பாண்டியும் மூன்றாம் பரிசினை க.சங்கீதாவும் பெற்றார்கள். இப்போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகள். சிகை அலங்கார பேதை விஷ்ணுவர்தினி கட்டவிழ்ந்த கூந்தலோடு உச்சி மாடியில் பித்துப்பிடித்து நிற்கிறாள் முழுநேர காத்திருப்பாளி ரெப்பன்சல் கீழே தம் கேசத்தை…
சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் மொழிக் கவிதைகளைக் கவிதை ஆர்வலர்களுக்கிடையே அறிமுகம் செய்து சிங்கப்பூர்க் கவிதைகளை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாண்டு சிங்கப்பூர்க் கவிதை விழா கவிதைசார் நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்விழா ஜூலை 26 முதல் 28 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. பன்மொழிக் கவிஞர்களுடன் தொடர் கவிதை வாசிப்பு, புதிதாக வெளியீடு கண்ட நூல்கள் அறிமுகம், பிற மொழிக் கவிஞர்களின் நூல்கள் விற்பனை,…
1. நினைக்க மறுப்பவை நைல் நதி ஊற்றெடுக்கும் இடத்துக்குச் சென்றோம் போகும் வழியில் இருநூராயிரம் அகதிகள். பார்த்தோம்: உருவமற்றிருந்த தெருவோரம் குருதி கறுத்து எஞ்சியிருந்த பாதி உடல். அதிர்ச்சியில் நெஞ்சு பிளந்து மரித்த ஒரு பெரும் பறவை. பெரிய கொம்புகளோடு தலை துண்டிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடந்த ஆநிரை. ஊற்றின் மெல்லொலி எழுப்பிய வியப்புடன் திரும்பி வருகிறோம். அப்போது ஈழத்தில் புன்முறுவலுடன் அகங்கார படையணியின் முன் முகப்பைச்…
1. தெகார்தே (Descartes) நானே இப்பூமியின் ஒரே மனிதன், ஆனால் ஒருவேளை இங்கு பூமியோ மனிதனோ இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை ஒரு கடவுள் என்னை ஏமாற்றக்கூடும். ஒருவேளை ஒரு கடவுள் எனக்கு தண்டனை அளித்திருக்கக்கூடும் காலம் எனும் இந்த தீரா மாயைக்கு. நான் கனவு கண்டேன் நிலவை. நான் கனவு கண்டேன் என் கண்கள் நிலாவைக் காண்பதை. நான் கனவு கண்டேன் முதல் நாளின் காலையையும் மாலையையும். நான் கனவு கண்டேன் கார்தேஜ் நகரத்தை மற்றும் அந்நகருக்காக…
1) அந்த வளாகத்தைச் சுற்றி வளைத்துவிட்டார்கள் நேற்று முதன் முதலில் இடது பக்கச் சுவர்களை உடைத்தார்கள் பாதையோர மரக்கிளைகள் முறிந்து இலைகள், பூக்கள் நசுங்கின நீள்வட்ட சக்கர வாகனம் உருண்டு சென்றது மேற்கூரைகளை இடிக்க கடகட சத்தத்துடன் தூண்கள் சரிந்தன சிமிண்டுக் குவியல் தூசியைக் கிளப்பியது உடைத்து நொறுக்கிய சுண்ணாம்புச் சில்லுகளை வண்டியில் அள்ளிப்போட்டுச் சென்றார்கள் இன்று காலை இங்கு புதிதாக முளைத்திருக்கிறது புற்தரை இங்கு ஒரு கட்டடம் இருந்தது அது இருந்த இடமிருக்கிறது 2)…