Skip to content Skip to sidebar Skip to footer

All Posts

நண்பு

இன்றைய பிறந்தநாளில் சந்திப்பதாய் நேற்று மாலை விடைபெற்றிருந்தோம் இரவு ஒரு கனவு கண்டோம் நாளை விடியலில் இறந்திருப்பதாக இருந்தும் கவலை அற்றிரு நண்பா நேற்று முன்தினம்வரை நாம் வாழ்ந்திருந்ததேபோல் நாளை மறுநாளில் பிறந்தும் இருக்கலாம்.

நீங்குகை

உயிரற்ற பொருள்களிடம் கருணைகொண்ட கடவுள் உயிர்ப்பைத் தந்து விரும்பும் வரத்தையும் தருவதாய் அவ்வவற்றின் விருப்பத்தைக் கேட்டார் மொத்தக் குரலும் தம் ஆதியிடம் செல்வதையே அழுத்தமாய் சொல்லின ஆகட்டும் என ஆண்டவன் அருள அடுத்த கணம் மனிதன் அகழ்ந்தெடுத்த உலோகங்கள் அனைத்தும் பூமியின்…

அறிவினா

இந்தக் கணத்தில் இவ்வுலகையே தலைகீழாக்கிடும் வல்லமையைப் பெற்றவன் யாராம் எனக் கேட்ட கிருஷ்ணனிடம் வல்லமையைப் பெற்றவன் யாராம் என திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தான் தெருக்கூத்தில் கட்டியக்காரன் எங்கோ தூர தூரத்தில் பார்வையாளர்கள் நகைப்பதை தலை குப்புற பார்த்துக்கொண்டு வலையில் வீழ்ந்து கொண்டிருக்கிறான் சர்க்கஸ் கோமாளி.

படிமக் கவிதை

நெகிழியே நள்ளிரவு நிசப்தத்தில் வீசிய சிறு காற்றுக்கு தார்ச்சாலையில் ஒலியெழுப்பி உருண்டு வந்த குவளையே கவிஞரின் அக்காலத்திலிருந்து கவிதையின் இக்காலத்துக்குள் புரண்டு வந்த படிமமே ஆரடித்ததாலே அரவமற்ற சாலையில் ஆதரிக்க ஆளின்றி அரற்றி வந்தாய் குழந்தையே உலகம் வெறுத்தொதுக்கும் உனக்கபயம் அளிக்க குப்பையாகத் தொட்டியாக நிற்பேன் தயங்காது என் மடிக்குத் தாவி வா என் செல்லமே. (நன்றி:தேவதச்சன்)

உறைகாலம்

கரிச்சான் அடங்கிக் கோழிகள் கூவுகின்றன கனவிலிருந்து மீண்டெழுந்து மீந்ததை மெல்லும் காரிருட்டு எருமைகள் தண்ணீர் சேந்தி சாணம் தெளிக்கும் வாசல் ஓசைகள் விடியலில் விடியலை விடியலால் இசைக்கும் பறவைகள் போர் உதற களத்துக்கு வம்பளந்து செல்லும் போர்வை உதறா அம்மையர் வைக்கோல் பரப்பி கோணிப்படுதா கட்டிய திண்ணைப் படுகை பக்கத்தில் சயனித்திருந்த தாத்தா என்னை விலக்கி பீடி…

கற்பித்தல்

அவள் ஒரு கொடுமைக்கார தாய் பழம் பறித்து மடியில் வைத்துக்கொண்டு ஊட்டிவிடாமல் காட்டுக்குள் ஓடுடா என்று முதுகில் அடித்து விரட்டுவாள் தூக்கி மரக்கிளையில் ஏற்றிவிட்டு காவலுக்கு நிற்காமல் போய்விடுவாள் புதர்களில் பிடித்துத் தள்ளிவிடுவாள் முழு நீரோட்டமிருக்கும்போது ஆற்றுக்கு மறுபக்கமிருக்கும்…

ஊரில் மீதமிருக்கும் அலர்

குப்பையில் பூத்த சாமந்தியின் மேல் கொல்லையில் வளர்ந்த வாழை நாருக்கு மனம் கொள்ளா காமம் மலர்ச்சரம் ஆகலாமா என்றான். அவளுக்கும் மையல்தான் இருந்தாலும் அச்சம் புஞ்சைக்கு உரமாக்கிவிடுவார்கள் என்றாள். உள்ளூற பயம் ஊறினாலும் நெஞ்சிரண்டிலும் கள்ளூறியது. இரவுக்குறியில் சந்திப்பு, இதழ் தொட்டுப் பயின்ற காதல் சரம் தொடுத்து ஆடியது. நெருப்பே வைக்காமல் எள்ளுக்கட்டு புகையும் என்பதை அவள் அறிவாள். ஆயினும் அவர்கள் அறுவடையை நிறுத்தவில்லை. எள்ளுப்போர் உயர்ந்த நாளொன்றில் தன்…

இரண்டு-காடைகள்

மக்காச்சோளம் ஒடிப்பதை நிறுத்திவிட்டு காடைகள் ஓடி மறைவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள், பால் கள்ளிக்குள் பதுங்கியவை வெளியேறவில்லை. சோளத் தோகைகள் உடம்பை உரசும் ஒலி குறைத்து மெதுவாய் ஒரு காட்டுப்பூனையைப்போல் காடைகள் பதுங்கிய வேலியை நெருங்கினாள். "புகுபுகு புகுபுகு" என்றொரு குரல். கருஞ்சிவப்பு உதடுகளைக் குவித்து பறவைகள் அஞ்சிடாத விசில் கொடுத்து அவனை அழைத்தாள். ஒரு கைத்தடியைத் தூக்கிக்கொண்டு மெல்ல இன்னொரு பூனையைப்போல் சோளத்தட்டைக்குள் நகர்ந்தான் அவனுடைய உருமா கட்டையும் பதுங்கி வந்த தோரணையையும் கண்டவள் தன்…

நிலம் எனும் நல்லாள்

தாங்கள் வாழும் திணைகள், அதன் அரசியலை, வாழ்வியலை வரலாற்றில் இடம் பெறச் செய்பவர்களில் படைப்பாளர்களே முதலிடம் வகிக்கிறார்கள். அவர்கள் புனையும் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் ஊடாகவும் அபுனைவு ஊடாகவும் தங்கள் சமகால வாழ்வியல் சிக்கல்களையும் அதற்குள் கொண்டுவந்து விடுகிறார்கள். எனவே படைப்பாளர்கள்…

காமம் விளைந்த சோளக்காடு

சோளக்காடுகளுக்கு குருவிகள் வரத் தொடங்கிவிட்டன. விளைச்சலில் நமது பங்கை எடுக்க வேண்டுமென்று ஊரே பொம்மைகள் செய்யத் தொடங்கியது எல்லாம் ஆண் பொம்மைகள் கண்கள் பெரிதாக, முறுக்கிய மீசையுடன் தொப்பிப் போட்ட பொம்மைகள். காலங்காலமாக கதிர்களுக்கு நடுவே ஆண் பொம்மைகள் நிற்பதைப் பார்த்துப் பழகிய குருவிகள் அஞ்சி அஞ்சி தானியங்களைத் தீண்டுவதையும் வானில் வட்டமிட்டமிடுவதையும் நான் விரும்பவில்லை. நான் மட்டும் பெண் பொம்மை செய்தேன். சாயம்…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]