உங்களுக்காக
நான்
உங்களுக்காக
கரைகிறேன்
முற்றும்
முழுதும்
உங்களுக்கே
என்னைப்போல்
உங்களுக்காய்
யாருமில்லை
என்னையும்
நீங்கள்
விட்டுக்கொடுத்ததில்லை
உங்கள்
பெற்றோரும்
உடன்
பிறந்தோரும்கூட
என்னைப்போல்
கரைந்ததில்லை
உங்களுக்காக
கரைவதற்காகவே
நான்
ஒவ்வொரு நாளும்
கரைவதற்குக்
காத்திருப்பதும்
நான்தான்
என்ன?
இப்பொழுதாவது
கரைகிறதா
உங்கள் மனம்?