Skip to content Skip to footer

Tag: இதழ்

கடல் நாகங்கள் பொன்னி பற்றி எம்.சேகர்

கவிதை மனம் சார்ந்தது. அது கண நேர உணர்வுகளின் வலிகளின் வடிகாலாக வெளிப்படுவது. இவையே இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் எங்கும் நிறைந்திருக்கின்றன. சிங்கப்பூர்க் கவிதை என்பது இதுவரை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் விமர்சிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இந்த ஆண்டு இலக்கியப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில் உள்ள கவிதைகள் சமகால உலக தமிழ்க் கவிதைச் சூழலில் மிகவும் அழகான கவிதை படைப்புகளாக வெளிவந்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இன்பா, மகேஷ்குமார், மதிக்குமார் இந்த மூவரின் படைப்புகளும் சமகாலக் கவிதைச் சூழலில்…

மேலும் வாசிக்க

யவனிகாவின் கிடக்கட்டும் கழுதை

ஒரு பகல், ஒரு இரவு அல்ல. நித்தியம் காத்திருக்கிறது யவனிகா யவனிகா ஸ்ரீ ராமின் கவிதைகளைப் பற்றித் தொடர்ந்து பேசி, எழுதி வருபவன் என்ற வகையில், அவனது கவிதைகள் பற்றி சிந்திக்க எண்ணும்போதெல்லாம் இதன் மரபு என்ன? இதன் வார்படம் என்ன என்ற கேள்வி வருவது பிரதானமானது. 1990-களின் துவக்கத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ தொகுதியின் வழியாக அறிமுகமான யவனிகா ஸ்ரீ ராமின் கவிதைகளை, போர்ஹேயின் சிறுகதைகளைப் பற்றிச் சொல்வதைப் போன்றே ஹைப்ரிட் கவிதைகள் என்று…

மேலும் வாசிக்க

பெரு.விஷ்ணுகுமார் கவிதைகள்

மே-சொல்லிகள் பாதையை மறித்தபடி மந்தமாகச் செல்லும் மே-சொல்லிகள் தாமாகவே விலகி வழிவிடட்டும் எனக் காத்திருந்தேன். அதற்குள் அவை என்னையும் தங்களில் ஒருவராக நினைத்துக்கொண்டன போலும். எல்லாவற்றுக்கும் மே-சொல்வதென்பது எளிமையானது மட்டுமல்ல சௌகர்யமானதும்கூட எல்லா பொதிகளையும் ஒரே வண்டியில் ஏற்றலாம். எல்லா பூக்களுக்கும் ஒரே வண்ணமிடலாம் யாராவது வந்து மீட்டெடுக்கும்வரை வழிமொழியப் பழகாதொரு பள்ளத்தாக்கினை செப்பனிட்டுக் கொண்டிருக்கலாம். இப்போது மொத்த கூட்டமும் வலப்புறம் திரும்புகிறது எதையும் கண்டுகொள்ளாமல் நிற்கும் நான் அங்கிருந்து நழுவி நேராகச் செல்கிறேன்…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]