Skip to content Skip to footer

Tag: இதழ் 2

மலைச்சாமி கவிதைகள்

நம்மை உய்விக்க வந்ததாக நம்பப்பட்ட மார்க்சிய கருத்தியலோடு, நம்பிக்கைகளும் தோற்று ஒரு நிரந்தர வெயிலுக்குள் மானுடம் பயணிக்கத் தொடங்கியதை வலுவாக அறிவித்த கவிக்குரல் மலைச்சாமி. வெங்கரிசல் என்று சொல்லப்படக்கூடிய ஒரு நிலப்பரப்பின் பிரத்யேக உள்ளடக்கத்தையும், உணர்வுகளையும் சேர்த்து உலகளாவிய தன்மையை நோக்கி எழுந்த குரல். 1994-ல் ‘ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு’ கவிதைத் தொகுதிக்குப் பிறகு பெரிதாக எழுதவில்லை. அதே தொகுப்பிலுள்ள கவிதைகளுடன் கூடுதலாகச் சில கவிதைகளுடன் ‘விலக்கப்பட்ட திருடன்’ என்ற கவிதைத் தொகுதியாக உயிர்மை பதிப்பகம்…

மேலும் வாசிக்க

மாயத்தைக் கட்டும் கவிதை!

கவிஞர் விக்ரமாதித்யன் ஒருமுறை ’மாயத்தைக் கட்டுவதே கவிதை’ என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். எனக்கு அந்தச் சொற்கள் மனதுக்குள் உருண்டுகொண்டேயிருக்கின்றன. அதன் உள்ளார்ந்த பொருள் என்னவாய் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். விக்ரமாதித்யன் சொன்ன சூழலலமைவைக் கடந்தும் அந்தச் சொற்கள் ஒரு தத்துவார்த்த தளத்துக்குள் பயணிக்கின்றன எனக் கருதுகிறேன். கவிதைகளில் மாயம் எப்படிக் கட்டப்படுகிறது. மாயம் என்பதைப் புரியாமை, பூடகத்தன்மை, சூட்சுமப் பொருள் என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். ஒரு கவிதையில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு, தனித் தனிச் சொல் சொல்லாய்…

மேலும் வாசிக்க

தமிழ்க் கவிதைக்குள் திணையென்னும் படிமம்

இந்தக் கேள்விகள் கவிதைகளை எழுதுபவர்களின் கேள்விகள் அல்ல. கவிதை வாசகர்களின் கேள்விகளும்கூட அல்ல. ஆனால் இலக்கியத்திறனாய்வு என்னும் விமரிசனம், “கவிதையை எப்படி வாசிப்பது?” என்ற கேள்வியில் தொடங்கி, “கவிதை எவ்வாறு உருவாகிறது?” என்பதை விளக்கிக் கொண்டே இருக்கின்றது. இப்படி விளக்குபவர்களை திறனாய்வாளர்கள் என்று சொல்வதைவிடவும், இலக்கியத்தை ஒரு கோட்பாடாக்கி விளக்கிவிட நினைப்பவர்கள் என்று சொல்லலாம். கவிதைகள் எவற்றை எழுதிக்காட்டுகின்றன? இந்தக் கேள்விக்குத் தவிப்பை - தேடலை - தேடலின் வலியை- தடையை - தடைகள் ஏற்படுத்தும் அச்சத்தை-…

மேலும் வாசிக்க

சிங்கப்பூர் கவிதைவெளியின் புதிய பாய்ச்சல்

சென்ற மே 21-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்ற இன்பாவின் ‘லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்’ கவிதைநூல் வெளியீடு மற்றும் திணைகள் இணைய இதழ் தொடக்க விழாவில் கவிஞர் பெருந்தேவி முன்வைத்த ஒரு கருத்தாடல் கவனம் பெற்றது. சிங்கப்பூர் தமிழ் படைப்பாளர்கள் தங்களது படைப்புகளுக்கான அங்கீகாரத்துக்கு தமிழக இலக்கியங்களை ஒப்புநோக்கும் மனப்போக்கிலிருந்து வெளிவரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இது மிகச்சரியானதொரு பார்வை என்றே கருதலாம். போலச்செய்யும் போக்கு இலக்கிய படைப்புக்களின் தனித்துவத்திற்கு உலைவைக்கும் போக்கு. உலகெங்கிலும்…

மேலும் வாசிக்க

நிழல், அம்மா.

புதிய கவிதை  நூல் நிழல், அம்மா பற்றி... நேசத்தின் கிடைமட்டப் பரப்பில் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது எனது கவிதை வெளியீடு இரண்டு விதமாக இதில் வெளிப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. உள்ளடக்கமும் மொழியும் சார்ந்து அவற்றை குழப்பமும் மூட்டமும் தகிப்பும் புனைவும் கொண்ட கவிதைகள் என்றும், தெளிவும், அறிந்த ஒன்றைச் சுட்டும் நம்பிக்கையும் தென்படும் கவிதைகள் என்றும் வகை பிரிக்கலாம். முதல் வகைக் கவிதைகள் ஓசை ஒழுங்கும் சந்தமும் கொண்டதாகவும், இரண்டாம் வகைக்…

மேலும் வாசிக்க

அருண் குமார் சாஹூ கவிதை

சாலை சேற்றுச் சாலைகள், தார்ச் சாலைகள், கிராமச் சாலைகள், நகரச் சாலைகள், நெல்வயல்களின் குறுக்கே சாலைகள், விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் சாலைகள், சந்துகள், தெருக்கள், நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், சில நேராக, சில பாம்புபோல; சில வெறிச்சோடி, சில நெரிசலாக; இருளுக்குப் போகும் சாலைகள் மற்றும் வெளிச்சத்திற்குப் போகும் சாலைகள்; கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் போகும் சாலைகள். சில பழைய, பழமையான சாலைகள்; சில புதிய, புத்தம் புதிய சாலைகள்; சில பாதசாரிகளுக்கு, சில சொகுசுவாகனங்களுக்கு; சில குதிரை…

மேலும் வாசிக்க

நான்யா சுதிர் கவிதை

நான் எப்படித் துவங்குவது? நான் உனக்கு என்ன சொல்வது ஒரு கடலோரத்திலிருந்து மற்றொன்றுக்கு எதுவும் இல்லாமல் யாரும் இல்லாமல் என் எண்ணங்கள் மட்டுமே இருந்த இந்த நீண்ட பயணங்கள் பற்றி. நான் ஒரு பாடல் எழுத வேண்டும் என்றால் நான் உன்னிலிருந்து, என்னை எவ்வளவு சக்தியுடன் நீ நிரப்புகிறாய் என்பதிலிருந்து துவங்குவேன். நீ என்னைப் பார்த்த, என்னுடன் எதையாவது துவங்க நீ முடிவு செய்த, அந்த நாளிலிருந்து…

மேலும் வாசிக்க

மேகி ஸ்மித் கவிதை

நல்ல தூண்கள் - மேகி ஸ்மித் வாழ்க்கை குறுகியது, ஆனாலும் நான் இதை என் குழந்தைகளிடம் சொல்லாமல் தவிர்த்துவிடுகிறேன். வாழ்க்கை குறுகியது, நான் என்னுடையதை ஆயிரக்கணக்கான சுவையான, தப்பான ஆலோசனைகளின் வழிகளில் குறுக்கிவிட்டேன். ஆயிரக்கணக்கான சுவையான, தப்பான ஆலோசனைகளின் வழிகளில் என் குழந்தைகளிடம் சொல்லாமல் தவிர்த்துவிடுகிறேன். உலகம் குறைந்தபட்சம் ஐம்பது சதவீதமாவது கோரமானது. அதாவது, ரொம்பவும் குறைவாகவே மதிப்பிட்டால். ஆனாலும் நான் இதை …

மேலும் வாசிக்க

லல்லா கவிதைகள்

லல்லா கவிதைகள்   (1) தென்புல மேகங்களை கலைந்தோடச் செய்வேன். கடலை வற்ற வைக்கவும் கைவிடப்பட்ட நோயாளியைக் குணப்படுத்தவும் கூட என்னால் ஆகும். ஆனால், ஒரு முட்டாளின் எண்ணப்போக்கை மாற்றுவதென்பதோ என் சக்திக்கும் அப்பாற்பட்டது. (2) விளையாட்டாக என்னிடமிருந்து நீ ஒளிந்துகொள்கிறாய்! நாள் முழுவதும் நான் தேடுகிறேன் பிறகு, நானேதான் நீயென்பதை அறிகிறேன். அந்தக் கொண்டாட்டம் இப்போது ஆரம்பித்துவிட்டது. (3) பொதுச்சாலை வழியேதான் வந்தேன் ஆயினும் அதன் ஊடாகத் திரும்பிப் போகவியலாது பயணத்தின் நடுவே பாதிவழியில் நிற்கிறேன். பகல் முடிந்து இரவு தொடங்குகிறது. எனது பைகளைத் துழாவுகிறேன் ஒரு நாணயமும் கிடைக்கவில்லை, பயணச் செலவிற்கு எதை நான் பகிர்ந்தளிப்பேன்? • லல்லா என்கிற லல்லேஸ்வரி இந்திய பக்தி மரபை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராவார். காஷ்மீரில் உள்ள பாண்டிர்தன் என்கிற சிற்றூரில் 1320 ல் பிறந்த இவர்,…

மேலும் வாசிக்க

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

பெண் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் ஆணின் ஒரு கேள்விக்கு பெண்ணிடம் பல பதில்கள் உள்ளன கேட்பவர் யாரென்றறிந்த பிறகு அவள் பதிலை வெளிப்படுத்துகிறாள் அப்பெண் ஓர் ஆணின் இதயத்தை வெல்லும் விதம் அவனைக் காதலிப்பதாக நம்ப வைப்பதுதான் பிறகு ஆணின் உடலுக்கு ஒரு மலரின் இயல்பு வந்துவிடுகிறது அது மலரும் உலரும் உதிரும் அதற்குள் பெண் மிக நீளமான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பாள் அவனைக் காதலிக்கவும் அல்லது…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]