அம்மாவின் பொறுமை சகிப்புத்தன்மை எதையும் கொடையாக நான் பெறவில்லை அவளது நுரையீரல் தொடங்கி பலவீனமானதெல்லாம் எதுவோ அதையே அவளின் பிள்ளையாக நான் பெற்றிருக்கிறேன் நினைவு பயின்ற நாள்முதலாய் மருந்துகளுடனயே வாழ்ந்துவருபவள் என்றாலும் இந்த வயதிலும் உளநலத்துக்கான மாத்திரைகளை உட்கொள்ளவில்லை அவள் தாதியாகப் பணியாற்றியதால் அலோபதி மாத்திரைகளும் மருந்துகளும் ஊசிகளும் ஆஸ்பத்திரியின் வாசனையும் ஆதியிலேயே என் உடலுக்குப் பரிச்சயம் மழைக்காலங்களிலும் வியர்வை பெருகும் வேனல் நாட்களிலும் மூச்சுவிடத் திணறி என் நுரையீரல்…
18