Skip to content Skip to footer

கவிதைகள்

கவிதைகள்

சித்துராஜ் பொன்ராஜ் கவிதைகள்

Harlem-இல் லோர்கா ஒரு கறுப்பனின் மரணத்திற்கு ஃப்ளெமெங்கோ பாணி பாடல்.. இந்த நகரம் என்னும்                     கைத்துப்பாக்கி                  உன்னையும் என்னையும்              நிரந்தரமாய்க் குறிபார்த்தபடி                             இருக்கிறது.    நல்லதொரு கைத்துப்பாக்கி         அமைவதைப் போலவே                   கைக்கு…

தில்லை கவிதைகள்

கோப்பத்தை   நான் விசர் பிடித்து உழத்துகிறேன் பாலியத்தின் மையத்தில் மோதுண்டு எழும் பேய்க்காற்று என்னை உசுப்பி உசுப்பி என் கமுகிலிருந்து பாக்கும், கோப்பத்தையும் கொட்டுகின்றன சாமத்தியக் குடத்திலும் கண்ணகியின் மடையிலும் விரிந்திருந்த கமுகம் பாளைகள் மின்னி மின்னி பூச்சியாய்…

மணமாய்க் கரைகிறேன்

உங்களுக்காக நான் உங்களுக்காக கரைகிறேன் முற்றும் முழுதும் உங்களுக்கே என்னைப்போல் உங்களுக்காய் யாருமில்லை என்னையும் நீங்கள் விட்டுக்கொடுத்ததில்லை உங்கள் பெற்றோரும்  உடன் பிறந்தோரும்கூட என்னைப்போல் கரைந்ததில்லை உங்களுக்காக கரைவதற்காகவே நான் ஒவ்வொரு நாளும் கரைவதற்குக் காத்திருப்பதும் நான்தான் என்ன? இப்பொழுதாவது…

முதல் பாடல் 2

தொஷ்டா! நீ அழைத்தால் என்னால் வராமல் இருக்க முடியாது என் கண்களைக் குருடாக்கிக்கொள்கிறேன் காதுகளை பழுக்கக் காய்ச்சிய கம்பிகளால் செவிடாக்கிக்கொள்கிறேன் என் இதயத்தைப் பிய்த்து நாய்களுக்கு வீசுகிறேன் அப்போதும் உன் குரல் எனக்குக் கேட்கிறது உன் உருவம் எனை அழைக்கிறது…

அழைப்பு

பொது யுகம் 2536 அந்த மூத்த எழுத்தாளர் நேர்காணலில் அமர்ந்திருக்கிறார் கடந்த காலத்திலிருந்து யாரையாவது திரும்ப அழைக்க நேர்ந்தால் யாரை அழைப்பீர்கள் அவர் சற்றும் யோசிக்காமல் சொல்கிறார் 1996ல் இறந்து போன என் மனைவி ஒரு கணம் நிசப்தம்…

கவியாலானது

யானையைக் குழி தோண்டி பிடிப்பது போல் கவிஞனைக் காதல் பிடிக்கிறது பரவசத்தின் சொற்கள் விம்முகின்றன அவனின் ஒளிகொண்ட சொற்களை வானில் எறிகிறது அவை விண்மீன்களாகின்றன இருண்ட சொற்களை பகல் காகங்களாக்குகிறது காதலின் அபோதத்தில் கவிஞன் பித்தாகிறான் அவன் அழுதபோது…

கானல் வரி

அவனை நான் மூன்று முறை பார்த்திருக்கிறேன் உலகத் திரைப்பட விழாவில் உன் அலுவலகத்தில் உன் படுக்கையில் என் கற்பனையில் அன்பே அது கற்பனை என்றே நம்ப விரும்பினேன். ஒரு நோயை நம்ப விரும்பாத அதைரியக்காரன் போல, இதுவெல்லாம் வெறும் கனவென்று…

சிவை

நேரசைக்கு 64 எழுத்துகள் நிரையசைக்கு 68 எழுத்துகள் அதுவே கட்டளைக் கலித்துறை என்கிறாள் காரைக்கால் அம்மை நானோ நிகோனர் பர்ராவின் ரோலர் கோஸ்டர்களை கவிதைக்குள் ஓட்ட முயல்பவன் தலை கீழாய் நடந்து உன் பதம் அடைவது என் இயல்பல்ல சிவையே

வேறு வழி?

Bynge Appஇல் ராஜேஷ் குமாரை பதினைந்து லட்சம் பேர் படிக்கிறார்கள் என்றார் ஒரு நண்பர் ஐரோப்பாவில் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியை பத்து மில்லியன் பேர் படிக்கிறார்கள் என்றேன் நான் ஒரு வேண்டாத திகைப்பின் வாயை மூடுவதற்கு அடுத்த கண்டத்திலிருந்து கையைக்…

அதற்குள் மற்றொரு திரிபுற்ற வைரஸ் வந்துவிட்டது

நேற்றுத்தான் ஒன்று வந்தது போலிருந்தது அதற்குள் முகத்தை மாற்றிக்கொண்டுவிட்டது ஒரு திரிபுருவுக்கும் இன்னொன்றுக்குமிடையே காலம் குறையக் குறைய எனக்கும் உனக்குமிடையே தூரம் அதிகமாகி மேலதிகமாகிறது இப்போதெல்லாம் உன் முகபாவனைகள் மாறிவிடவில்லையே பேசும்போது இப்போதும் உன் வலது புருவத்தை உயர்த்துகிறாயா …

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]