Skip to content Skip to footer

கவிதைகள்

கவிதைகள்

கார்த்திக் திலகன் கவிதைகள்

 1) காளி பூஜை எழுத்தின் ரீங்காரம் படியுமிடத்தில் காளி நர்த்தனமிடுவாள் எழுத்துருவாக்கமென்பது மூளைக்குள் நியூரான்கள் விளக்கேற்ற கபாலத்துக்குள் நடக்கும் காளி பூஜை 2) அச்சுக்காரனே அச்சுக்காரனே எழுத்துக் கூட்டிப் படிக்க முடியாத பச்சை வாசகங்கள் இந்த மரங்கள் கூட்டும் போது இருக்கும்…

வாரணாசியின் எரியும் தகனப் படித்துறைகள் – சுதீப் சென்

        எரியும் பிணங்களின் அதீத வெப்பத்தில் கனன்ற சிதைகள் கங்கையின் முகத்தை என் பார்வையிலிருந்து ஓரளவு மறைத்தன. வேகமாகச் சேறு சுமந்து சுழலும் நீர் மிதக்கும் தீபங்களையும், நீராடும் உடல்களையும், சிதைந்த பிணங்களின் எச்சங்களையும், சதை, எலும்பு,…

கவிதையியல் – ஆர்ச்சிபால்ட் மக்லீஷ்

 ஒரு கவிதை தொட்டுணரக்கூடியதாகவும், மௌனமாகவும் உருண்டு திரண்ட ஒரு கனியைப் போல் இருக்க வேண்டும் ஊமையாக, பெருவிரலின் வருடலால் தேய்ந்து மழுங்கிய பழைய பதக்கங்களைப் போல் இருக்க வேண்டும் மௌனமாக, பாசி படர்ந்த சன்னல் விளிம்புகளில் கைமுறிந்த கல்லைப்…

திங்கட்கிழமையின் கைப்பையில் ஞாயிற்றுக்கிழமையை ஒளித்து வைத்திருக்கிறேன்

 ஞாயிற்றுக்கிழமை இரவு அலாரத்தை வைக்கும்போதே திங்கட்கிழமையின் காலடியோசைக் கேட்டுவிடுகிறது. அதிகாலை ரயிலில் ஏறும்போதே எல்லோரும் ஏதோ ஒன்றை வீட்டிலேயே விட்டுவந்தவர்களைப்போல அமைதியாகக் குனிந்தபடி தங்களுடைய வாழ்க்கையைக் கைப்பேசித் திரையில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். காபிக்கடைகளில் கோப்பைகள் சூடாக இருக்கின்றன. அவற்றைப் பிடித்திருக்கும் கைகளில் ஞாயிற்றுக்கிழமையின்…

நகரத்துறவி

துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் கொள்கலன் கப்பல்களைப் பார்த்து கடலில் மேயும் இரும்பு யானைகள் இவை என்கிறேன். உலகம் தின்று முடிக்க முடியாமல் கரையெங்கும் சிதறிக்கிடக்கும பேராசைகளின செவ்வக எலும்புகள் இவை என்கிறான். ரயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டில் ஏறியபடி இந்த நகரம் எவ்வளவு…

இன்பா கவிதைகள்

1. அன்புமலர் என் அம்மாவிற்கு இரண்டு கைகள் இருந்தன அவை, அடுப்பில் கொதிக்கும் எதையோ கிளறின முறத்தை ஆட்டியாட்டி பயிர்களைப் புடைத்தன தேங்காய் நாரினால் கிண்ணங்களைக் கழுவின ஊதா நிறத்துச் சோப்பினால் துணிகளைத் துவைத்தன மாவில் நீரூற்றிப் பிசைந்து உருண்டைகளாய்…

தீபிகா கவிதைகள்

1. மொழிபுரியாத நகரின் விடுதியில் சிறு காய்ச்சலோடு தனித்திருக்கிறேன். தலையணைகள், ஜன்னலோர புறாக்கள் தவிர யாருமற்ற சிறு அறை. கதகதப்பு தேடும் மாத்திரைகளில் தேறாத தனித்திருக்கும் உடல் இளஞ்சூடுட்டு பாதங்களை மெல்ல பிடித்துவிட்டபடி வாஞ்சையோடு இருப்பதான உன்முகம் நிழலாடுகிறது. நீயோ இரண்டாயிரம்…

கார்த்திக் திலகன் கவிதைகள்

1) வீடு கூர்ந்த மதியால் வெட்டவெளியை கொத்தி கொத்தி துண்டுகளாக உடைத்து ஒரு வீடு கட்டி வசிக்கிறேன் காற்றின் மூலக்கூறுகளின் மேல் அமர்ந்து வரும் அழகிய தேவதைகள் மட்டும் அங்கு வந்து போகிறார்கள் 2) குமரிக்கண்டம்…

ராஜி வாஞ்சி கவிதை

அமெரிக்கக் குடியிருப்பொன்றின் ஆளரவமற்ற தெரு மௌனத்தை மென்று உமிழ்ந்து துப்பிய எச்சில் தெறிப்பில் எப்போதும் சாத்தியே கிடக்கும் எதிரெதிர் வீட்டுக் கதவுகள். சாளரத் திரைகளைத் திறக்க முயன்று தோற்று முகம் சிவந்த சூரியன் மேற்கே நகரும் சந்தடியற்ற…

நீல குண்டு பல்பு

  பல்துலக்கிகள் தொப்பிகள் குப்பிகளை எல்லாம் பாதுகாத்த மூடிகள் பந்துகள் இறந்தவர் இருப்பவர் பிரிந்தவர் சேர்ந்து வாழ்பவர் தகவல் ஏதும் சொல்லாத …

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]