Skip to content Skip to footer

கவிதைகள்

கவிதைகள்

த.அழகுராஜன் கவிதைகள்

அந்தி குழையும் வேளையில் மேற்கு வானத்தின் வண்ணம் சுமந்து கூடடைந்த பறவை கிளையின் அசைவில் விழித்து கொண்டதில் தன் அலகால் விண்மீன்களைப் பொறுக்கிச் சேகரிக்க எத்தனிக்கிறது முற்றத்தில் விழும் நிலவொளியில் தனிமை தகிக்கிறது நீண்ட இரவுகளை விழுங்கிய நிலவு மெல்ல…

பழ. மோகன் கவிதைகள்

மகிழம் பூ 'மகிழம்பூ' என்பது இவ்வுலகிற்கு ஒரு மலர்; நம்மிருவர்க்கும் அஃதொரு மறைபொருள் நமக்கு மட்டுமே தெரிந்த அந்த மகிழம்பூ நீ பிறக்கும்போதே உன்னோடு பூத்தது உள்ளுந்தோறும் மகிழச் செய்வதால் நான்தான் அதற்கு மகிழம்பூ என்று பெயரிட்டேன் மறுப்பேதும் சொல்லாமல்…

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

காதலன் – கிழவன் – பிராய்டு I உங்கள் தெளிவான கண்களின் அடிப்பகுதியைப் பார்ப்பதற்கு அடை மழையிலும் வந்த என்னிடம் நினைவின் எந்த இடத்திலும் பொருந்தும் ஒரு கதை இருக்கிறது. II பழைய காயத்தை இன்னும் எப்படி உண்மையாக்குவது எனத்…

இன்பா கவிதைகள்

1 வெள்ளிக்கிழமை மதியம் தனிமைப் பொழுது மெல்ல ஓய்வு கேட்டு மந்த நடைபோடுகிறது உடலற்ற கபாலத்தைத் திருகி ஒளிச்சிதறல்களுக்கிடையே இழுத்துப்பிடித்து வேலையை முடிக்கிறேன் வாரத்தின் ஐந்து நாட்களும் ஓநாய் தினங்களாகி இருபத்து நாலுங்கீழ் ஏழு பொழுதும் ஒளியின் முடிச்சிக்குள்…

ப.அ.ஈ.ஈ அய்யனார் கவிதைகள்

1 ஊருக்கு தெக்க ஒசந்திருச்சு கட்டிடம் ஒத்தப்பனையெல்லாம் செத்தப்பனையாச்சே ஊத்துப் போன வாய்க்காலும் நாத்துப் பாவிய நெல்வயலும் வித்துப் போச்சே விலைமகனுக்கு களையெடுத்த கைகளை கனலிட்டு சுட்டுவிட்டான் கார்ப்பரேட் நலவாதி... அரமரக்கா நெல் வெதச்சு ஆடயுங்கோடயும் கதிரறுத்து ஆதிக்கும் அய்யனுக்கும் படியளந்து…

நாரணோ ஜெயராமன் கவிதைகள்

நாரணோ ஜெயராமன் கவிதைகள் நாரண ஜெயராமன் தனது அனுபவத்தின் உள்ளுணர்வினை மனத்துள் நிரப்பிக்கொண்டு சுயத்தைக் கண்டறியும் ஆவலோடு புது உக்கிரம் பெற்ற கவிதைகளைப் படைத்துள்ளார். அன்றாட வாழ்வியல் குறித்து தனது பார்வையை எளிமையான வரிகளில் சொல்லப்பட்டிருந்தாலும் அதனுடைய பொருள் திண்மையாக இருக்கிறது.…

சித்துராஜ் பொன்ராஜ் கவிதைகள்

விரைவில் வெளியாகவிருக்கும் ‘தலையில் பிறைசூடிய பெண்கள்’  கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்) 1 வார்த்தைகளை மலர்த்தண்டுகளாய் வழவழப்பாக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் இந்தச் சாகசம் கைவரும் - ஒரு கொத்து வார்த்தைகளை அடியில் சிவப்பு நிற ரிப்பன் கட்டியும் நீர்க்கோலங்களாய் ஒரு தாளைச் சுற்றியும்…

வேல்கண்ணன் கவிதைகள்

காலாவதியான கடவுச்சொல் சமீபத்தில் பிரிந்த  காதலியின் பிறந்தநாளை  கடப்பது குறித்து நள்ளிரவு கவிஞனின் கையேடுகள்  ஏதேனும் கிடைக்கிறதா? அடுத்த வருடத்திற்குள் நேற்றிலிருந்து நாளைக்குத் தாவுவதற்கு  மந்திரம் கற்க வேண்டும். வலியோடு முறியும் மின்னலை இணைக்க வழியேதும் உண்டாவன  பிரான்சிஸ் கிருபாவிடம் கேட்டிருக்க வேண்டும் தனித்துக் கிடப்பது குறித்தெல்லாம் ஏகப்பட்ட குறிப்புகள்…

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

விடம்பனக் களிறு   மூங்கிற் புல்லை பாங்குற தறித்து வாங்கிய பரணில் தினைபுனம் காக்கும் சேனோன் வானுற விளைந்த காட்டுயானமும் கருவுப்பரிசியும் சிதையக் குலைக்கும் களிறுகளை சிதைத்த கதை இது இதை நான் உங்களுக்குச் சொல்வேன் என்றான் சூதன்   (வேறு)…

தருணம்

சொல்லால் முகிழ்க்கும் பித்து உனக்கும் எனக்கும் இடையில் கண்ணே எந்தத் தருணத்தில் எப்படி நிகழும் அது மார்க்கமில்லாதது அபாதா அது வரம்பில்லாதது அனந்தகோரா அது நிறமில்லாதது தயாபரா யாருடையது இந்த எதிர்க்குரல் எங்கிருந்து வருகிறது அது என்னைச் சுற்றி எல்லாம் ஆவியாகிக்கொண்டிருக்கிறது…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]