Skip to content Skip to sidebar Skip to footer

Blog Standard

திங்கட்கிழமையின் கைப்பையில் ஞாயிற்றுக்கிழமையை ஒளித்து வைத்திருக்கிறேன்

 ஞாயிற்றுக்கிழமை இரவு அலாரத்தை வைக்கும்போதே திங்கட்கிழமையின் காலடியோசைக் கேட்டுவிடுகிறது. அதிகாலை ரயிலில் ஏறும்போதே எல்லோரும் ஏதோ ஒன்றை வீட்டிலேயே விட்டுவந்தவர்களைப்போல அமைதியாகக் குனிந்தபடி தங்களுடைய வாழ்க்கையைக் கைப்பேசித் திரையில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். காபிக்கடைகளில் கோப்பைகள் சூடாக இருக்கின்றன. அவற்றைப் பிடித்திருக்கும் கைகளில் ஞாயிற்றுக்கிழமையின் குளிர் இன்னும் மிச்சமிருக்கிறது. திங்கட்கிழமைகளில் நகரம் ஒரு பெரிய கடிகாரமாகிவிடுகிறது. மாலை வரைக்கும் எப்படியாவது சமாளித்துவிடென ஒவ்வொரு நிலையமும் ஒரு முள்ளாகி யாரோ ஒருவரின் நேரத்தைக் கச்சிதமாக நகர்த்திக்கொண்டிருக்கிறது. இந்தத் திங்கட்கிழமையை மிகவும் வெறுப்பவர்கள்…

மேலும் வாசிக்க

நகரத்துறவி

துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் கொள்கலன் கப்பல்களைப் பார்த்து கடலில் மேயும் இரும்பு யானைகள் இவை என்கிறேன். உலகம் தின்று முடிக்க முடியாமல் கரையெங்கும் சிதறிக்கிடக்கும பேராசைகளின செவ்வக எலும்புகள் இவை என்கிறான். ரயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டில் ஏறியபடி இந்த நகரம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்கிறேன். நேற்றைய மனிதர்களின் தோல்களை உரித்துத் தைத்து தன்னையே இழுத்துச் செல்லும் நெடிய பாம்பு என்கிறான். அடுக்குமாடிகளின் ஒளிரும் சன்னல்களைப் பார்த்து தரையில் குடியேறிய விண்மீன்கள் இவை என்கிறேன். ஒவ்வொரு சன்னலுக்குள்ளும்…

மேலும் வாசிக்க

கானல் நீரின் குளுமையும் தித்திப்பும் (கவிஞர் இசையின் கவிதைகளை முன்வைத்து)

1 மற்ற எல்லா இலக்கியப் படைப்புகளையும் விட வடிவில் சிறியதும் செறிவுள்ளதும் கவிதை. வாய்க்குள் வைத்துக்கொள்ளலாம் என்பதால் வலிமையும் அதிகம். கவிதைகள் பற்றிப் பேசுவதின் தகுதி, வரையறைகள், எல்லைகள் குறித்த குழப்பங்கள் எனக்கு இருக்கின்றன. கவிஞருக்கும் கவிதைக்குமான ரகசிய உறவை கண்டுபிடிப்பதா, புரிந்த கவிதைகளை வைத்துக்கொண்டு வியாக்கியானம் செய்வதா, இல்லை "இந்தாங்க, உங்களுக்கு ஒரு கவிதை" என்று எழுதியவர் கவிதையையே எடுத்து நெற்றியில் ஒட்டி விடுவதா என்றெல்லாம். யோசித்துப்பார்த்தால் கவிஞர் இசையின் கவிதைகளுக்கும் அவருக்குமான உறவு வெளிப்படை;…

மேலும் வாசிக்க

இன்பா கவிதைகள்

1. அன்புமலர் என் அம்மாவிற்கு இரண்டு கைகள் இருந்தன அவை, அடுப்பில் கொதிக்கும் எதையோ கிளறின முறத்தை ஆட்டியாட்டி பயிர்களைப் புடைத்தன தேங்காய் நாரினால் கிண்ணங்களைக் கழுவின ஊதா நிறத்துச் சோப்பினால் துணிகளைத் துவைத்தன மாவில் நீரூற்றிப் பிசைந்து உருண்டைகளாய் உருட்டின. என் அம்மாவிற்கு இரண்டு கால்கள் இருந்தன அவை வாசலுக்கும் கொல்லைக்குமாய் நடந்து நடந்து களைத்தன பித்தளைக் குடங்களை இடுப்பில் ஏற்றி ஏற்றி இறக்கின அவித்த நெல்லைக் கொட்டி சுற்றிச்…

மேலும் வாசிக்க

தீபிகா கவிதைகள்

1. மொழிபுரியாத நகரின் விடுதியில் சிறு காய்ச்சலோடு தனித்திருக்கிறேன். தலையணைகள், ஜன்னலோர புறாக்கள் தவிர யாருமற்ற சிறு அறை. கதகதப்பு தேடும் மாத்திரைகளில் தேறாத தனித்திருக்கும் உடல் இளஞ்சூடுட்டு பாதங்களை மெல்ல பிடித்துவிட்டபடி வாஞ்சையோடு இருப்பதான உன்முகம் நிழலாடுகிறது. நீயோ இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறாய். சரி, எப்போதும் போல அங்கிருந்தபடியே கைகளை நீட்டு, ஒரு பறக்கும் முத்தத்தை போல நானதை ஏந்திக் கொள்கிறேன். இன்றாவது வரட்டும் உன் வருகையை அறிவித்தபடி வீழும் வால்நட்சத்திர இரவு. …

மேலும் வாசிக்க

கார்த்திக் திலகன் கவிதைகள்

1) வீடு கூர்ந்த மதியால் வெட்டவெளியை கொத்தி கொத்தி துண்டுகளாக உடைத்து ஒரு வீடு கட்டி வசிக்கிறேன் காற்றின் மூலக்கூறுகளின் மேல் அமர்ந்து வரும் அழகிய தேவதைகள் மட்டும் அங்கு வந்து போகிறார்கள் 2) குமரிக்கண்டம் கடலின் மேற்பரப்பில் நகரும் வீக்கத்தை அலைகள் என்று நாம் சொல்லலாம் கடல் தான் சொல்ல வேண்டும் காற்றிடம் எவ்வளவு அடிபட்டது என்பதை கடல் வாழ் உயிரினங்களின் ஆன்மாவும் தலையாட்டி பொம்மைகள்…

மேலும் வாசிக்க

ராஜி வாஞ்சி கவிதை

அமெரிக்கக் குடியிருப்பொன்றின் ஆளரவமற்ற தெரு மௌனத்தை மென்று உமிழ்ந்து துப்பிய எச்சில் தெறிப்பில் எப்போதும் சாத்தியே கிடக்கும் எதிரெதிர் வீட்டுக் கதவுகள். சாளரத் திரைகளைத் திறக்க முயன்று தோற்று முகம் சிவந்த சூரியன் மேற்கே நகரும் சந்தடியற்ற அந்திப் பொழுதொன்றில் மனித சஞ்சாரம் குறித்த சந்தேகத்துடன் மனம் எட்டியெட்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில் வாலை ஆட்டிக் கொண்டு வந்த நம்பிக்கை செல்லக் குலைப்புடன் நகர்ந்து போனது உடன்…

மேலும் வாசிக்க

சிங்கப்பூர் கவிதைகளில் அழகியல்

முன்னுரை: கலைப்படைப்புகளில் அழகியல் (Aesthetics) என்பதை “இரசனை” என்று கூறலாம். கவிதைகளின் இயக்கமானது ஓடு கின்ற ஒரு நதியைப் போல இருப்பதால் வாசக அனுபவத்தின் மீதான தாக்கமும் பலவிதங்களில் அமைகிறது. கலைப்படைப்புகளைப் பொறுத்தவரை படைப்பும் அதை நுகர்பவனின் மனமும் இணைந்து அவன் வாழ்வின் சொந்த அனுபவங்களில் இருந்து குழைத்தெடுத்த வர்ணங்களிலிருந்து ஒரு ஓவியத்தையோ, திரவியங்களிலிருந்து ஒரு நறுமணத்தையோ அவனுக்கு வழங்குகின்றன. அதிலிருந்து அவன் அடையும் மகிழ்ச்சியோ கிறக்கமோ அல்லது விலகலோ அவனுக்கு அந்தப் படைப்பின் அழகியலை…

மேலும் வாசிக்க

சமகால நவீனக் கவிதைகளின் செல்திசை

முன்னுரை “கவிதை அதன் எல்லா அலங்காரங்களையும் கலைந்த பின் அதன் சொற்கள் உருவாக்கும் ஆதாரமான உணர்வெழுச்சியையும் அபோதத்தையுமே குறைந்தபட்ச அழகியலாகக் கொண்டவை நவீனக் கவிதைகள்” என்று கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். சிங்கப்பூரில் எழுதப்படும் நவீனக் கவிதைகள் மேற்சொன்ன குறைந்தபட்ச அழகியலைக் கொண்டுள்ளனவா என்ற கேள்வியோடு கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்துள்ள நவீனக் கவிதைகளின் போக்கையும் அவற்றின் மீதான விமர்சனங்களையும் இக்கட்டுரை முன்வைக்கிறது. புதுக் கவிதை வரலாறு (1979 முதல் 2015 வரை)  “1979…

மேலும் வாசிக்க

சிங்கப்பூர்க் கவிதைகளில் தமிழகக் கவிதைகளின் தாக்கம்

சிங்கையில் வெளியாகும் கவிதைகள் மட்டுமல்லாது, நாவல்கள், சிறுகதைகள் போன்ற பிற இலக்கிய வடிவங்களுமே தமிழகப் படைப்புகளின் பாதிப்பைக் கணிசமான அளவிற்குத் தங்களுக்குள் ஊடுருவ அனுமதித்தபடியேதான் வெளியாகின்றன. இப்போக்கினைச் சிங்கப்பூரில் வெளியான ஆரம்பக்கட்ட படைப்புகளில் இருந்து தற்காலத்தில் வெளியாகும் படைப்புகள் வரையில் அவதானிக்கலாம். இதைப் பிழையென்றோ, போலச் செய்தல் என்றோ கருத முடியாது. ஒரு நிலப்பரப்பினின்று பிறிதொரு நிலப்பரப்பிற்குப் புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் ஆதி நிலத்துப் படைப்புகளின் பாதிப்பைத் தங்கள் படைப்புகளில் பிரதிபலிப்பது வெகு இயல்பானதேயாகும். இதுபோன்ற பெரும்பாலான…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]