யானையைக் குழி தோண்டி பிடிப்பது போல் கவிஞனைக் காதல் பிடிக்கிறது பரவசத்தின் சொற்கள் விம்முகின்றன அவனின் ஒளிகொண்ட சொற்களை வானில் எறிகிறது அவை விண்மீன்களாகின்றன இருண்ட சொற்களை பகல் காகங்களாக்குகிறது காதலின் அபோதத்தில் கவிஞன் பித்தாகிறான் அவன் அழுதபோது ஒரு யுகத்தின் புன்னகை கோணுகிறது அவன் சிரித்த போது யாருமற்ற வனங்களில் பூக்கள் கண்ணெடுக்கின்றன யாருமில்லை என சுருள்கிறான் நடுங்குகிறது வானம் அவனின் யானைப் பசியால்தான் தமக்குள் மோகிக்கின்றன உயிர்கள் நுரைத்து நொதிக்கும்…
அவனை நான் மூன்று முறை பார்த்திருக்கிறேன் உலகத் திரைப்பட விழாவில் உன் அலுவலகத்தில் உன் படுக்கையில் என் கற்பனையில் அன்பே அது கற்பனை என்றே நம்ப விரும்பினேன். ஒரு நோயை நம்ப விரும்பாத அதைரியக்காரன் போல, இதுவெல்லாம் வெறும் கனவென்று எழ விரும்புபவன் போல ஹார்ட்டின்களில் என்ன இருக்கின்றன; முத்த ஸ்மைலிகளில் என்ன இருக்கின்றன என்று நினைத்தேன். அது அவ்வளவு சோபையான நம்பிக்கை இல்லை என்றாலும், அதுவே போதுமாய் இருந்தது. நீ அதை…
நேரசைக்கு 64 எழுத்துகள் நிரையசைக்கு 68 எழுத்துகள் அதுவே கட்டளைக் கலித்துறை என்கிறாள் காரைக்கால் அம்மை நானோ நிகோனர் பர்ராவின் ரோலர் கோஸ்டர்களை கவிதைக்குள் ஓட்ட முயல்பவன் தலை கீழாய் நடந்து உன் பதம் அடைவது என் இயல்பல்ல சிவையே
Bynge Appஇல் ராஜேஷ் குமாரை பதினைந்து லட்சம் பேர் படிக்கிறார்கள் என்றார் ஒரு நண்பர் ஐரோப்பாவில் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியை பத்து மில்லியன் பேர் படிக்கிறார்கள் என்றேன் நான் ஒரு வேண்டாத திகைப்பின் வாயை மூடுவதற்கு அடுத்த கண்டத்திலிருந்து கையைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது
நேற்றுத்தான் ஒன்று வந்தது போலிருந்தது அதற்குள் முகத்தை மாற்றிக்கொண்டுவிட்டது ஒரு திரிபுருவுக்கும் இன்னொன்றுக்குமிடையே காலம் குறையக் குறைய எனக்கும் உனக்குமிடையே தூரம் அதிகமாகி மேலதிகமாகிறது இப்போதெல்லாம் உன் முகபாவனைகள் மாறிவிடவில்லையே பேசும்போது இப்போதும் உன் வலது புருவத்தை உயர்த்துகிறாயா உன் விரலசைவில் இப்போதும் சிறு குருவிகள் உன் நாற்காலியின் கைப்பிடியில் வந்தமர்கின்றனவா நான் ஒப்பனை செய்துகொண்டு பல மாலைகளாகிவிட்டன களைப்புற்றிருக்கிறேன் ஒரு நினைவிலிருந்து இன்னொரு நினைவுக்குக் கூட இப்போதெல்லாம் ஊர்ந்து செல்கிறேன்…
அந்தக் குகையில் தொடங்கி, இந்தக் குகையில் முடிகிறது எல்லாம். இடையில் நிகழும் கனவுகள் யாவும், பழுதுற்ற காலயந்திரக் குழப்பங்கள். தந்தை தேவைப்படாத முட்டைகள் பாடிக்கொண்டிருக்கின்றன, உள்ளே. வேட்டைநாய்கள், பசிமயக்கக் கனவுகளில் எஜமானனைக் குதறித் தின்கின்றன. காமத்தில் பிசைந்த உணவு, ஞானச்சுரப்புக்கான பத்திய மருந்து. தோட்டாவை மென்று விழுங்குவதற்குப் பதிலாக, வயிற்றில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் வான்கா. பெரிதுபடுத்த ஒன்றுமில்லை. விடுமுறை நாளின் தனிமையில், சூரியகாந்திப் பூக்கள் நிகழ்த்திய சின்னக் குழப்பம்தான் அது. ரத்தவாடை மிகுந்த பரிணாமத்தின் பாதையை…
1. மிக கவனமாக ஒவ்வொரு பந்தாக தரையில் வீசி அதன் இசையைக் கேட்பதில் உற்சாகம் இயலுக்கு சில பொழுதுகளில் இவளின் வீசுதலுக்கு இடையே தரையில் அதன்போக்கில் அசையும் பந்துகளுக்கு அவளே ஒலி எழுப்புவாள் பிறிதொரு நாளில் மழைக்குளத்தில் பந்துகளை வீசிய அவள் தன்னில் தெரிக்கும் நீர்த்துளிகளைக் கோர்த்து இசையொன்றை மீட்டுகிறாள் அடங்காமல் ஆடிக் கொண்டிருந்தன பந்துகள் ஒரு பெருங் கூத்தின் காட்சியென அது 2. பெயர் தெரியா பச்சைப் பறவை அன்று அவளைப்…
எங்கள்_குடும்பம் ஆண்டுக்கொரு முறை வரவு செலவு போடும்போது மூத்த பிள்ளைகளைப் பத்திரமாய் பார்த்துக் கொள்வாய் அப்பா ஆடைகளிலிருந்து அரைஞாண்கயிறுகள்வரை அதில் தங்க இழைகள் மின்ன வேண்டும் உண்ண மறுக்கும் … ம்ம்ம் .. சோம்பல்படும் அவர்களுக்கு ஊட்டிவிட கரண்டியொன்று கக்கத்திலேயே இருக்கும் அண்ணன்களும் அக்காள்களும் குழந்தைக் குட்டிகளோடு கும்மாளமிடும்போதும் ஊன்றுகோலொன்றை வருடா வருடம் புதுப்பித்துக் கொடுப்பார் அப்பா அறைகளில் குளிரூட்டிகளில் அவர்கள் களிக்க குட்டிச் சுவரோரம் ஒண்டிக் கொள்வோம் நாங்கள் அண்ணன்களுக்கும் அக்காள்களுக்கும் நாங்களென்னவோ இன்னும்…
1. நூறு முறை உன் கோபத்தை அனுபவித்திருக்கிறேன் ஒரு முறை தான் உன் மீது கோபம் கொள்ள முடிந்தது நூறு முறை உன் வெறுப்பைக் காட்டியிருக்கிறாய் ஒரு முறைதான் உன்னை வெறுக்க முடிந்தது எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன் முதல் முறை பார்த்தது போலில்லை ஒவ்வொரு முறையும் புதிதாகப் பார்க்கிறேன் இதுவரை யாரையும் பார்த்ததேயில்லை 2. உன் மீது கோபத்தைக் காட்ட நான் அதிகமாய்ப் பயன்படுத்தியது எரும, மாடு, பேய், பிசாசு, குரங்கு,…