Skip to content Skip to sidebar Skip to footer

All Posts

மொழிகள் கடந்துலவும் பெண்களின் பாடுகள்

”பெண் தன்னை எழுதுதல் வேண்டும். பெண்களைப் பற்றி எழுத வேண்டும். பெண்களை எழுத்தின்பால் கொண்டுவர வேண்டும். பெண் தனது சொந்த இயக்கத்தின் மூலம் பிரதிக்குள் தன்னை வார்க்க வேண்டும்; இந்த உலகத்திலும் சரித்திரத்திலும் தடம் பதிக்க வேண்டும்.” - ”Laugh of…

இலங்கைப் பெண்களின் கவிதைகள்

இலங்கைப் பெண்களின் கவிதைகள் என்றால் அதில் தனியே தமிழ்க் கவிதைகளை மட்டும் கொள்ள முடியாது. சிங்களக் கவிதைளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் எடுத்துப் பேசும்போதுதான் இலங்கைப் பெண்களின் கவிதைகளைப் பற்றிய சித்திரம் கிடைக்கும். இரண்டு மொழிச் சூழல்களிலும் உள்ள சமூக,…

ஸ்ரீநேசன் ஆட்டும் ஊஞ்சல்

ஒரு நூற்றாண்டைக் காணப்போகும் புதுக்கவிதை, நவீன கவிதை வடிவத்தில் குறிப்பிட்ட சாதனையை நிகழ்த்திய கலைஞர்களின் படைப்புகளை என்னளவில் தொகுத்துக் கொள்ளும்போது அவர்களது மரபையும் சேர்த்துத் தொகுத்துக் கொள்வது அத்தியாவசியமான பணியாகவே தோன்றுகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தனித்துவத்தையும், அலாதிக் குணத்தையும் தக்க…

மணமாய்க் கரைகிறேன்

உங்களுக்காக நான் உங்களுக்காக கரைகிறேன் முற்றும் முழுதும் உங்களுக்கே என்னைப்போல் உங்களுக்காய் யாருமில்லை என்னையும் நீங்கள் விட்டுக்கொடுத்ததில்லை உங்கள் பெற்றோரும்  உடன் பிறந்தோரும்கூட என்னைப்போல் கரைந்ததில்லை உங்களுக்காக கரைவதற்காகவே நான் ஒவ்வொரு நாளும் கரைவதற்குக் காத்திருப்பதும் நான்தான் என்ன? இப்பொழுதாவது…

முதல் பாடல் 2

தொஷ்டா! நீ அழைத்தால் என்னால் வராமல் இருக்க முடியாது என் கண்களைக் குருடாக்கிக்கொள்கிறேன் காதுகளை பழுக்கக் காய்ச்சிய கம்பிகளால் செவிடாக்கிக்கொள்கிறேன் என் இதயத்தைப் பிய்த்து நாய்களுக்கு வீசுகிறேன் அப்போதும் உன் குரல் எனக்குக் கேட்கிறது உன் உருவம் எனை அழைக்கிறது…

அழைப்பு

பொது யுகம் 2536 அந்த மூத்த எழுத்தாளர் நேர்காணலில் அமர்ந்திருக்கிறார் கடந்த காலத்திலிருந்து யாரையாவது திரும்ப அழைக்க நேர்ந்தால் யாரை அழைப்பீர்கள் அவர் சற்றும் யோசிக்காமல் சொல்கிறார் 1996ல் இறந்து போன என் மனைவி ஒரு கணம் நிசப்தம்…

கவியாலானது

யானையைக் குழி தோண்டி பிடிப்பது போல் கவிஞனைக் காதல் பிடிக்கிறது பரவசத்தின் சொற்கள் விம்முகின்றன அவனின் ஒளிகொண்ட சொற்களை வானில் எறிகிறது அவை விண்மீன்களாகின்றன இருண்ட சொற்களை பகல் காகங்களாக்குகிறது காதலின் அபோதத்தில் கவிஞன் பித்தாகிறான் அவன் அழுதபோது…

கானல் வரி

அவனை நான் மூன்று முறை பார்த்திருக்கிறேன் உலகத் திரைப்பட விழாவில் உன் அலுவலகத்தில் உன் படுக்கையில் என் கற்பனையில் அன்பே அது கற்பனை என்றே நம்ப விரும்பினேன். ஒரு நோயை நம்ப விரும்பாத அதைரியக்காரன் போல, இதுவெல்லாம் வெறும் கனவென்று…

சிவை

நேரசைக்கு 64 எழுத்துகள் நிரையசைக்கு 68 எழுத்துகள் அதுவே கட்டளைக் கலித்துறை என்கிறாள் காரைக்கால் அம்மை நானோ நிகோனர் பர்ராவின் ரோலர் கோஸ்டர்களை கவிதைக்குள் ஓட்ட முயல்பவன் தலை கீழாய் நடந்து உன் பதம் அடைவது என் இயல்பல்ல சிவையே

வேறு வழி?

Bynge Appஇல் ராஜேஷ் குமாரை பதினைந்து லட்சம் பேர் படிக்கிறார்கள் என்றார் ஒரு நண்பர் ஐரோப்பாவில் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியை பத்து மில்லியன் பேர் படிக்கிறார்கள் என்றேன் நான் ஒரு வேண்டாத திகைப்பின் வாயை மூடுவதற்கு அடுத்த கண்டத்திலிருந்து கையைக்…

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]