Share This Article
கடைமடையில் நீர் வழியும் ஏரியைக் காமுறுகிறேன்
மூர்க்கமாகப் பாய்கிறேன்
அலையில் தளும்பும் ஆம்பல் பறித்து
மார்பில் போட்டுக்கொண்டு
உடம்பை மல்லாத்தி நீந்துகிறேன்
முங்கி ஆழத்துள் சென்று
நாணலின் வேரைத் தோண்டுகிறேன்
சேற்றில் புதைந்த கிழங்கை நாவால் தீண்டுகிறேன்
நீரில் நழுவும் மீனைப்பிடித்து ஆரத்தழுவுகிறேன்
அரற்றுகிறேன்
கள்வெறி ஊறுகிறது
மாமழைக் கொட்டுகிறது.