திணைகள் கவிதை விருதுக்கு நவீன கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன
இந்த முறை 2023 மற்றும் 2024ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்களுக்கும் சேர்த்து ஒரே விருதாக வழங்கப்படுகிறது. இந்த இணைப்பில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துவிட்டு நூல்களை அனுப்பவும். https://tinyurl.com/jewrkz3n
நூல்களை 10 மார்ச் 2025 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: Old No.72, New No.3 Kumaran Road II, Main Road, Chinmaya Nagar, Chennai 600 092
விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் மற்றும் விருது வழங்கும் விழா பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விதிமுறைகள்
கவிதை நூலின் முதல் பதிப்பு 2023, 2024ஆம் ஆண்டுகளில் வெளிவந்ததாக இருக்க வேண்டும்.
தொகுப்பு நூல்கள் அல்லது மொழிபெயர்ப்பு நூல்கள் ஏற்கப்பட மாட்டாது.
நவீன கவிதை நூல்களாக இருக்கவேண்டும்.
தங்களுடைய சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
கவிதை நூலின் மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும்.
எந்த நாட்டவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.