வீட்டுக்கு வந்த மணிச் செடி
நேற்று மணிப்ளாண்ட்
குறுந்தொட்டிச்செடியை
வாங்கிவந்து வீட்டுக்குள் வைத்தேன்
முனை சுருட்டிய தாள் போன்ற இலைகள்
ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்க்கின்றன விரல்கள்
ஒரு போதும் மாறாத
எப்போதும் மாற
ஆசைப்பட்டு
தொட்டியைக் குனிந்து பார்க்கின்றன
நீர் தெளிக்கப்பட்ட இலைகள்
மீயலையும் திணைகள்
வெண்கிண்ணம் நிரம்பிய
கருஞ்சிவப்புக் குளத்தில் குதித்துப்
பின்னிப் பிணைந்து
நெளிந்து வளைகின்றன
மஞ்சள் நிற மண்புழுக்களாய்
கடவுள் அதன் மீது
நறுஞ்சுவை பானத்தை ஊற்றியபோது
அதனைக் குடித்துவிட்டு
மேலும் கீழும் நெளிகின்றன
##
இருபத்து மூன்று செ.மீ நீளமான
நரம்பில்லா இரட்டை விரல்களைப் பிடித்து
இழுக்க இழுக்க மாவு நூலிழைகள்
திரௌபதியின் சேலை போல்
நீண்டு கொண்டேயிருக்கிறது
#
அம்பிலிருந்து செல்லும்
இரட்டை வில் போன்ற
மூங்கில் கைக்குச்சிகளைப்
பிடிப்பதிலேயே மும்முரமாக இருக்கிறேன்
நூடுல்ஸ் நழுவி குளத்துக்குள் விழுகிறது
#
ஒல்லியான மீசியாமைக் கிளறி
கேரட் துருவல்போல்
எதிர் மேசையில் வைக்கிறார் கடவுள்
#
குளத்தில் மீன்பிடிப்பதுபோல்
ஒற்றை ஊடானை
செம்புளிப்பு நீரில் துலாவி
குச்சிகளால் பிடித்துவிட்டார் கடவுள்
#
வானத்து நட்சத்திரங்களை
ஒவ்வொன்றாகக் குச்சிகளால் பிடித்துத்
வெள்ளித் தட்டில் போட்டுவிட்டேன்
அடுத்து நிலவைப் பிடிக்க கிளம்புகிறேன்
##
நம்முடைய வாழ்க்கை
நூடுல்ஸ் நீளம் தான் என்றாலும்
இடை இடையே கடித்துத்
துண்டு துண்டாக்குகிறார்கள்
##
இதன் வரலாறு
இனிப்பு மற்றும்
புளிப்பு சுவையாலானது
இதன் வாழ்க்கையில்
ஆவி அடங்கிடாமல்
சூடு ஆறிடாமல்
இருக்கவேண்டும்