அவனை நான்
மூன்று முறை பார்த்திருக்கிறேன்
உலகத் திரைப்பட விழாவில்
உன் அலுவலகத்தில்
உன் படுக்கையில்
என் கற்பனையில் அன்பே
அது கற்பனை என்றே
நம்ப விரும்பினேன். ஒரு நோயை
நம்ப விரும்பாத அதைரியக்காரன் போல,
இதுவெல்லாம் வெறும்
கனவென்று எழ விரும்புபவன் போல
ஹார்ட்டின்களில் என்ன இருக்கின்றன;
முத்த ஸ்மைலிகளில் என்ன இருக்கின்றன
என்று நினைத்தேன். அது அவ்வளவு சோபையான நம்பிக்கை
இல்லை என்றாலும்,
அதுவே போதுமாய் இருந்தது.
நீ அதை அப்படி உடைத்துச் சொல்லியிருக்க வேண்டாம்.
எல்லாம் முடிந்தது. ஒரு முட்டாளைப் போல்
கேட்டேன். அவனுக்கு அப்படி என்ன
பெருசா இருக்கு? அபத்தம். உடைந்தாய்; உடைந்தேன். ஒரு தொலைப்பேசி
அழைப்பு. பத்து நிமிட பைத்தியகாரப் பேச்சு.
முற்றுப்புள்ளி
Leave a comment