நெகிழியே
நள்ளிரவு நிசப்தத்தில்
வீசிய சிறு காற்றுக்கு
தார்ச்சாலையில் ஒலியெழுப்பி
உருண்டு வந்த குவளையே
கவிஞரின் அக்காலத்திலிருந்து
கவிதையின் இக்காலத்துக்குள்
புரண்டு வந்த படிமமே
ஆரடித்ததாலே
அரவமற்ற சாலையில்
ஆதரிக்க ஆளின்றி
அரற்றி வந்தாய் குழந்தையே
உலகம் வெறுத்தொதுக்கும்
உனக்கபயம் அளிக்க
குப்பையாகத் தொட்டியாக நிற்பேன்
தயங்காது என் மடிக்குத்
தாவி வா என் செல்லமே.
(நன்றி:தேவதச்சன்)