ஊமத்தையும் மருத்தோன்றியும் அருகருகில்
ஒன்றை அரைத்தால் உன் கந்தகமௌனம்
மற்றது
உனது முத்தத்துக்கு முந்தையச் சொல்
உறிஞ்சப்படும் கஞ்சா கங்கின்
செந்திறப்பு
கொதிக்கும் ஓரிதழ் தாமரையின்
திரட்சி
முன்னது
வெட்கினேன் என்று பிறகு சொல்லும்
கணம்
பின்னது உனக்கு
கடவுச்சொல் மறந்த கண்ணாடி அறை
அழுக்கை முத்தாக்கும் சிப்பியை
ருசித்துண்ணும் கடல் நிலத்தவனுக்கும்
சிறிய சினச் சொல்லண்ண
உதிரவாசனைக்கு நீர்த்திமிரும்
சுறாவுக்கும் ஆன பனிப்போரில்
கஞ்சா கங்ககென வால்நட்சத்திரம் எறிந்து விளையாடுகிறது
ஊமத்தை அரைத்துப் பூசிய வானம்
கீறிய கரிய தாவரத்தில் இருந்து
சொட்டிக் கொண்டிருக்கிறது
நிலா மிதக்க
என் நாளைய நொடிமுள்ளுக்கான சப்தம்