நாங்கள்
நாள்தோறும்
தவறுவதில்லை சந்திக்க
அப்படியொரு
எதிர்பார்ப்பு
மொழியில்லாமல்
பொங்கிவழியும்
இதயம்
கண்களில் கசியும்
நேசம்
எல்லாம்
உடல்மொழி கூறும்
மறந்தால்
தவிக்கிறது மனம்
அழைக்கவும்
என்னைக்கேட்கவும்
ஒரு வழியில்லையே…
மொழிதான்
வேண்டுமா?
உணரத்தெரியாதா?
உள்மனம் கேட்கிறது
காலையென்றால்
என் முதல்வேலை
சந்திப்பதுதான்
அது தரும்
மனநிறைவு
எதுவும்
தருவதில்லை
விழிகளால் விசாரிப்பது
நாள்தோறும்
நாட்காட்டியைப்
பார்ப்பதுபோல்…