விடம்பனக் களிறு
மூங்கிற் புல்லை பாங்குற தறித்து
வாங்கிய பரணில் தினைபுனம் காக்கும் சேனோன்
வானுற விளைந்த காட்டுயானமும் கருவுப்பரிசியும்
சிதையக் குலைக்கும் களிறுகளை சிதைத்த கதை இது
இதை நான் உங்களுக்குச் சொல்வேன் என்றான் சூதன்
(வேறு)
பெரும் பசிகொண்ட மதயானை ஒன்று
ஆரண்யத்தில் நுழைந்தது
தன் வசந்தத்தில் தழைத்திராத
முதிரா வனம் தத்தளித்தது
அவன் கபிலன்
மண்ணின் வண்ணத்தையும்
மண்ணுண்டு திரண்ட
மரத்தின் இளந்தளிர் வண்ணத்தையும்
மேனியில் கொண்டவன்
நிழலாய் ஊறும் நதியின் கரையில்
நிழலாய் திரியும் பேரிருப்பின் புதல்வன்
மாயா விடம்பனக் கர்ப்பம்
தர்ப்பைகள் விளையும் நதிக்கரைகளில்
பயிர்கள் விதைத்தவன்
பயிர்கள் விளைந்த வயில்வெளிகளில்
சாங்கியம் வளர்த்தவன்
(வேறு)
பெருமத யானை கானகம் சிதைத்தது
மரங்கள் முறிந்தன; கதிர்கள் அழிந்தன
தினைபுனம் தேடிய சிறுசிறு புல்லினம்
நினைவழிந்தோடின வெருவின கதறின
கள்வெறி வேட்டுவன் வெஞ்சினம் கொண்டனன்
தழல் சுழற்றினன் தட்டை புடைத்தனன்
வீளை விடுத்தனன் வில்லால் அடித்தனன்
கல்லால் அடித்தனன் மத்தகம் சிதைத்தனன்
வீழ்ந்தது வேழம் வீழ்ந்தது வீழ்ந்ததே
—
நந்த விஜயம்
காலாதீதத்தில் அதிர்ந்துகொண்டிருக்கிறது ஒரு பறை
அடிமுடி அளக்கவொண்ணா பேருரிப்பாய்
அம்பலத்தாடுவன் பாதங்கள்
அந்தரத்தில் சுழன்றாடுகின்றன
காலத்தை அள்ளி அம்பரம் தரித்து
காலத்தைத் தொட்டு திருச்சாந்திட்டு
காலத்தை எடுத்து கருவியாய் மீட்டி
காலத்தை திரட்டி படையாய் சமைத்து
தெற்கு வாசல் முன்
காலத்தின் குரலாய் வந்து நிற்கிறான் நந்தன்
சடசடத்த நெருப்புக் குண்டத்தின்
செந்நீல நாவுகள் குலவையிடுகின்றன
பறையொலியின் உக்கிரத்தில்
நெருப்பின் உடல் நடுங்குகிறது
கோடி அரவங்களின் நாவாய்
விண் தீண்டித் திரும்பும் நெருப்பில்
ஒரு நாவு கேட்கிறது
நந்தனே நீ எத்தனையாவது நந்தன்
எல்லையில்லா பெருவெளியில்
முடிவற்று நிகழ்ந்துகொண்டிருக்கும் உன் வருகை
எப்போது நிற்கும்
காலமாய் நிற்கும் நந்தன் சொல்கிறான்
விண்ணேகும் செம்புரவியே
வரலாறு எங்கு விடிகிறதோ
நந்தன்கள் அங்கு முடிவார்கள்
இங்கு காலம் எவ்வளவு நீளமோ
நந்தன்களின் கால்களும் அவ்வளவு நீளமே
நெருப்பின் வாய்க்கு தீராத பசியுண்டு என்றால்
நந்தன்களின் நீதிக்கும் சாகாத உடலுண்டு
காலகாலமாய் அவர்கள்
வந்துகொண்டேயிருப்பார்கள்
வந்துகொண்டேயிருப்பார்கள்
மூன்று குதிரைகள்
வாங்கிய பரணில் தினைபுனம் காக்கும் சேனோன்
வானுற விளைந்த காட்டுயானமும் கருவுப்பரிசியும்
சிதையக் குலைக்கும் களிறுகளை சிதைத்த கதை இது
இதை நான் உங்களுக்குச் சொல்வேன் என்றான் சூதன்
(வேறு)
பெரும் பசிகொண்ட மதயானை ஒன்று
ஆரண்யத்தில் நுழைந்தது
தன் வசந்தத்தில் தழைத்திராத
முதிரா வனம் தத்தளித்தது
அவன் கபிலன்
மண்ணின் வண்ணத்தையும்
மண்ணுண்டு திரண்ட
மரத்தின் இளந்தளிர் வண்ணத்தையும்
மேனியில் கொண்டவன்
நிழலாய் ஊறும் நதியின் கரையில்
நிழலாய் திரியும் பேரிருப்பின் புதல்வன்
மாயா விடம்பனக் கர்ப்பம்
தர்ப்பைகள் விளையும் நதிக்கரைகளில்
பயிர்கள் விதைத்தவன்
பயிர்கள் விளைந்த வயில்வெளிகளில்
சாங்கியம் வளர்த்தவன்
(வேறு)
பெருமத யானை கானகம் சிதைத்தது
மரங்கள் முறிந்தன; கதிர்கள் அழிந்தன
தினைபுனம் தேடிய சிறுசிறு புல்லினம்
நினைவழிந்தோடின வெருவின கதறின
கள்வெறி வேட்டுவன் வெஞ்சினம் கொண்டனன்
தழல் சுழற்றினன் தட்டை புடைத்தனன்
வீளை விடுத்தனன் வில்லால் அடித்தனன்
கல்லால் அடித்தனன் மத்தகம் சிதைத்தனன்
வீழ்ந்தது வேழம் வீழ்ந்தது வீழ்ந்ததே
—
நந்த விஜயம்
காலாதீதத்தில் அதிர்ந்துகொண்டிருக்கிறது ஒரு பறை
அடிமுடி அளக்கவொண்ணா பேருரிப்பாய்
அம்பலத்தாடுவன் பாதங்கள்
அந்தரத்தில் சுழன்றாடுகின்றன
காலத்தை அள்ளி அம்பரம் தரித்து
காலத்தைத் தொட்டு திருச்சாந்திட்டு
காலத்தை எடுத்து கருவியாய் மீட்டி
காலத்தை திரட்டி படையாய் சமைத்து
தெற்கு வாசல் முன்
காலத்தின் குரலாய் வந்து நிற்கிறான் நந்தன்
சடசடத்த நெருப்புக் குண்டத்தின்
செந்நீல நாவுகள் குலவையிடுகின்றன
பறையொலியின் உக்கிரத்தில்
நெருப்பின் உடல் நடுங்குகிறது
கோடி அரவங்களின் நாவாய்
விண் தீண்டித் திரும்பும் நெருப்பில்
ஒரு நாவு கேட்கிறது
நந்தனே நீ எத்தனையாவது நந்தன்
எல்லையில்லா பெருவெளியில்
முடிவற்று நிகழ்ந்துகொண்டிருக்கும் உன் வருகை
எப்போது நிற்கும்
காலமாய் நிற்கும் நந்தன் சொல்கிறான்
விண்ணேகும் செம்புரவியே
வரலாறு எங்கு விடிகிறதோ
நந்தன்கள் அங்கு முடிவார்கள்
இங்கு காலம் எவ்வளவு நீளமோ
நந்தன்களின் கால்களும் அவ்வளவு நீளமே
நெருப்பின் வாய்க்கு தீராத பசியுண்டு என்றால்
நந்தன்களின் நீதிக்கும் சாகாத உடலுண்டு
காலகாலமாய் அவர்கள்
வந்துகொண்டேயிருப்பார்கள்
வந்துகொண்டேயிருப்பார்கள்
மூன்று குதிரைகள்
அன்னை மூன்று குதிரைகளைப் பிரசவித்தாள்
ஒரு குதிரை நெருப்பாலானது
நெருப்பைப் போல்
பூமியிலிருந்து வானுக்குச் செல்வது
காலுந்தி வானிலேயே திரிந்துகொண்டிருப்பது
இரை பொறுக்கவும் பூமிக்கு வராதது
தன் தகித்தலில் தன் மிதத்தலில் தனை உணர்வது
இன்னொரு குதிரை நீராலானது
வானிலிருந்து பூமிக்கு வருவது
தன் எடையால் எதையும் அசைப்பது
தன் நீர்மையால் எதையும் கதைப்பது
தன் பாரம் தாங்காமல் ஆழ ஆழ சென்று கொண்டிருப்பது
மற்றொரு குதிரை காற்றாலானது
தானாகத் தன்னை அறிவிக்காதது
சிறகற்ற சிறகில் வானுக்கும் பறப்பது
எடையற்ற எடையில் பூமிக்குள் அமிழ்வது
அன்னை அக்குதிரைகளுக்குப் பெயரிட்டாள்
சத்தியம் சிவம் சுந்தரம்
நெருப்பாய் பறக்கும் குதிரையை காற்றில் கட்ட முயன்றான் மனு
நீராய் அமிழும் குதிரையை காற்றில் கட்ட முயன்றான் புத்தன்
இப்படித்தான் இந்தக் கதை நிகழ்ந்தது
இப்படித்தான் இந்தக் கவிதை பிறந்தது