சாலை
சேற்றுச் சாலைகள், தார்ச் சாலைகள்,
கிராமச் சாலைகள், நகரச் சாலைகள்,
நெல்வயல்களின் குறுக்கே சாலைகள்,
விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் சாலைகள்,
சந்துகள், தெருக்கள், நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள்,
சில நேராக, சில பாம்புபோல;
சில வெறிச்சோடி, சில நெரிசலாக;
இருளுக்குப் போகும் சாலைகள் மற்றும் வெளிச்சத்திற்குப் போகும் சாலைகள்;
கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் போகும் சாலைகள்.
சில பழைய, பழமையான சாலைகள்;
சில புதிய, புத்தம் புதிய சாலைகள்;
சில பாதசாரிகளுக்கு, சில சொகுசுவாகனங்களுக்கு;
சில குதிரை வண்டிகளுக்கு,
சில திருவிழாக்களுக்காகவும், சில மணப்பெண்களுக்காகவும்;
சில கனவுகளுக்கும், சில வருந்துவதற்கும்,
சில மலை ஏற, சில கீழே இறங்க, மற்றும்
சில நடுங்கும் இதய நகரத்திற்கு.
இணையான சாலைகள்
சாலைகளுக்குள் உள்ள சாலைகள்,
சாலைகளை ஒட்டிய சாலைகள்,
அகலமான சாலைகளை இணைக்கும் குறுகிய சாலைகள்,
சில வீட்டுக்குச் செல்ல, மற்றும்
சில வீட்டிலிருந்து கிளை பிரிய.
ஐயோ!
இந்தச் சாலைகளின் வலைப்பின்னலில்
இந்தக் காலத்தின் நாற்சந்தியில்
உயிர்த்திருப்பது இரண்டே சாலைகள் தான்
இரண்டுமே ஆபத்தை நோக்கிச் செல்லும்
வைரஸுக்கு ஒன்று,
பசிக்கு மற்றொன்று.
ஆங்கில மூலம்: அருண் குமார் சாஹூ.
தமிழாக்கம்: பயணி தரன் (LinkTr.ee/PayaniDharan)
Road
by Arun Kumar Sahu.
Muddy roads, paved roads,
Village roads, city roads,
Roads across paddy fields,
Roads leading to the playgrounds,
Bylanes, lanes, highways, expressways,
Some straight, some serpentine;
some lonely, some busy;
ROads to darkness and roads to light;
Roads from villages to cities.
Some old, ancient roads;
Some new, brand new roads;
Some for pedestrians, some for limousines;
SOme for horse-drawn carriages,
Some for festivals and some for the brides;
Some to dreams and some to be sorry,
Some uphill, some down, and
Some to quivering hearts’ town.
Parallel roads
Roads inside roads,
Roades alongside roads,
Narrow roads connecting wide ones,
Some leading home, and
Some stemming out of homes.
Alas!
In this maze of roads
At this crossroads of time
Alive are only two roads
Both leading to danger,
One to the virus, and
The other to hunger.