மே-சொல்லிகள் பாதையை மறித்தபடி மந்தமாகச் செல்லும் மே-சொல்லிகள் தாமாகவே விலகி வழிவிடட்டும் எனக் காத்திருந்தேன். அதற்குள் அவை என்னையும் தங்களில் ஒருவராக நினைத்துக்கொண்டன போலும். எல்லாவற்றுக்கும் மே-சொல்வதென்பது எளிமையானது மட்டுமல்ல சௌகர்யமானதும்கூட எல்லா பொதிகளையும் ஒரே வண்டியில் ஏற்றலாம். எல்லா பூக்களுக்கும் ஒரே வண்ணமிடலாம் யாராவது வந்து மீட்டெடுக்கும்வரை வழிமொழியப் பழகாதொரு பள்ளத்தாக்கினை செப்பனிட்டுக் கொண்டிருக்கலாம். இப்போது மொத்த கூட்டமும் வலப்புறம் திரும்புகிறது எதையும் கண்டுகொள்ளாமல் நிற்கும் நான் அங்கிருந்து நழுவி நேராகச் செல்கிறேன்…

