Skip to content Skip to footer

Tag: இதழ் 3

கால் நனைத்த அலைகள்

கவிஞர் கலாப்ரியாவின் கவிதை ஆளுமையும் அவரது கவிதை உலகமும் படைப்புலகம் அறிந்ததாக இருந்தாலும், சக கவிஞர்களின் கவிதைகளின் மீதான பார்வையையும், அவரது ரசனையையும் அறிந்துகொள்வதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதைகள் உதவுகின்றன. கலாப்ரியா ரசித்த கவிதைகளை திணைகளில் பகிர்ந்துகொள்கிறார். உள்ளடக்கம், வெளியீடு, கருத்தியல் என எந்தச் சார்புமில்லாமல் தான் ரசித்த கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்துள்ளார். இக்கவிதைகள் கலாப்ரியாவின் சிந்தனைப் பிரதியாக வந்துள்ளது. அவரது தேர்வு பொதுவானதாகவே இருக்கிறது, தனது கண்ணோட்டத்தில் ரசித்தவற்றில் சிறந்தவையாகக் கருதுபவையாக ஒரு சிலவற்றை…

மேலும் வாசிக்க

எம்.டி.முத்துக்குமாரசாமி நேர்காணல்

என்னிடம் உருவாகும் ஆதிசொல் நாடகமல்ல, கவிதைதான் – எம். டி. முத்துக்குமாரசாமி கேள்விகள் : ஷங்கர்ராமசுப்ரமணியன் இலக்கியம், பண்பாடு, தத்துவம் மற்றும் கோட்பாடுகளை உரையாடலின் அந்தரங்கத்தோடும் படைப்பூக்கம் வெளிப்படும் தீவிரத்தோடும் எழுதக்கூடிய அரிதான விமர்சகர், நாட்டுப்புறவியல், பண்பாட்டு அறிஞர் எம் டி முத்துக்குமாரசாமி. 1980-களின் இறுதியில் தமிழில் அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் சார்ந்து நடைபெற்ற கோட்பாட்டு அறிமுகங்கள், விவாதங்களில் தாக்கம் செலுத்தியவை இவரது எழுத்துகள். தமிழ் சிறுகதை எழுத்தில் நிகழ்ந்த சோதனைகளில் எம் டி…

மேலும் வாசிக்க

நகுலன் ஆங்கிலக் கவிதைகள்

நகுலன் அவர் வாழ்நாள் காலத்தில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட கவிதை நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் இவை. நகுலன் நூற்றாண்டையொட்டி ஷங்கர்ராமசுப்ரமணியன் தொகுத்து வெளிவந்திருக்கும் அருவம் உருவம் நகுலன் 100 புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. நகுலனின் ஆங்கிலக் கவிதைகள் பெருந்தொகையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள தருணத்தை 'திணைகள்' இணையத்தளம் பகிர்ந்துகொண்டு, நகுலனது நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இணைகிறது அறிமுகக் கட்டுரை : யுவன் சந்திரசேகர் அறிமுகம் (அருவம் உருவம் நகுலன் 100 தொகுப்பிலிருந்து) தமிழ்த்தனியனின் ஆங்கிலக்கவிதை - யுவன்சந்திரசேகர் நகுலனின்புனைகதைகள், குறிப்பாக நாவல்கள்,…

மேலும் வாசிக்க

அரவான்

ஒளியைக்கூட்டுங்கள் தலையை வெட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது என யாரோ கத்துகிறார்கள் நீ உன் நாடியை வெகுவாக உயர்த்தி என் பெயர் அரவான் என அறிவிக்கிறாய் முப்பத்திரண்டு அங்கலட்சணங்கள் கூடிய கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் சல்லியனையும் தவிர இவ்வுலகில் முழுமையான ஆண் நான் ஒருவனே நான் போர்ப்பலியாக மனமுவந்து சம்மதிக்கிறேன் ஒரே வெட்டில் தலை வேறு முண்டம் வேறு என்றாகவேண்டும் உயிர்த்திருக்கும் என் தலை மீதியுடலை முப்பத்தியோரு துண்டுகளாக வெட்டும் அதுவே ஈட்டி முனையில் குருட்சேத்திரப் போரை…

மேலும் வாசிக்க

ந. ஜயபாஸ்கரன் கவிதைகள்

மதுரையும் இவர் நடத்திய வெண்கலப் பாத்திரக் கடையும் தான் ந. ஜயபாஸ்கரன் கவிதைகளின் சிற்றண்டம். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலக் கவிதைகளில் தேர்ந்த பரிச்சயம் கொண்ட ஜயபாஸ்கரன், அர்த்தநாரி கவிதைத் தொகுதி வழியாக தமிழ் கவிதை வாசகர்களுக்கு அறிமுகமானவர். தமிழ் இலக்கிய, புராணங்களின் நினைவையும் எதிரொலிகளையும் மிகச் சிறிய எதிர்வினைகளையும் கொண்ட கவிதைகள் இவருடையது. எமிலி டிக்கன்ஸன், குருதத், திருப்பூவனத்து பொன்னனையாள், அங்கம் வெட்டுண்ட பாணன், ஆஹா சாகித் அலி என மேற்கும் கிழக்கும் முயங்கி நிறைவேறாமையின் வலியும்…

மேலும் வாசிக்க

தாமரை பாரதி கவிதைகள்

அகாலம் செத்தவன் கால்களை மடக்க மீண்டும் உயிர்த்தது போல அந்த கரப்பான் பூச்சி மல்லாந்தபடிக் கணுக்கால்களை அசைக்கிறது ஒவ்வொரு முறை கதவு திறக்கும் போதும் எங்கிருந்தோ முகம் காட்டிவிடுகிறது கழிவறை பீங்கான் வழவழப்பில் ஒலியேயின்றி நடக்கிறது சில நேரங்களில் நடப்பதும் சில நேரங்களில் ஓடுவதும் சிலநேரங்களில் மல்லாந்து படுத்துச் சிரிப்பதுமே வழக்கமாகிவிட்ட வேளையில் பறப்பதற்குச் சிறகிருந்தும் பறக்காமல் இங்கேயே சுற்றிச் சுற்றி அப்படி என்னதான் கண்டுவிட்டதோ இந்தக் கழிவறையில்? நானல்லாத நேரங்களில் என்னதான் செய்யுமோ துணையற்ற அது…

மேலும் வாசிக்க

Sign Up to Our Newsletter

Be the first to know the latest updates

[yikes-mailchimp form="1"]